ராமநாதபுரம் மாவட்டம் இலவச மருத்துவமனை சேவை தொடர்பான விளக்கங்களுக்கு பைசுர் ரஹ்மானை 04567 232630 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்
ரோட்டரி இண்டர்னேஷனல் மாவட்டம் 3212ன் சார்பாக துபைக்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகளின் பயிற்சி நிறைவு நாள் மற்றும் வழியனுப்பு நிகழ்வு துபை கிரீக் படகில் நடைபெற்றது.
நிகழ்வில் ரோட்டரி அமைப்பின் சார்பாக முன்னாள் கவர்னர் ஆறுமுகப் பாண்டியன் மற்றும் ரோட்டரி நடப்பு செயலாளர் பி.கே. சரவணன் ஆகியோர் ஈடியே குழுமத்தின் மனிதவள மேம்பாட்டு செயல் இயக்குநர், அக்பர்கான் அவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.
தொடர்ந்து பேசிய ஆறுமுகப் பாண்டியன், ஈடியே மொத்த குழுமத்திற்கும் மனிதவள மேம்பாட்டு செயல் இயக்குநராக பணியாற்றும் அக்பர்கான் அவர்களின் சேவையை பாராட்டினார்.அவரின் எளிமையை மேற்கோள் காட்டி பேசியவர், ஈடியேவின் சார்பாக, தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மற்றும் இராமநாதபுர மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டுவரும் நடமாடும் மருத்துவமனை திட்டத்தில் அக்பர்கானின் பணியை பாராட்டி பேசினார். மேலும் துபைக்கு வருகை தந்த தங்களை சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஊட்டும் வண்ணம் தங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நெல்லை மீரானுக்கு நன்றி தெரிவித்தார்
அக்பர்கான் பேசிய போது , எல்லோரும் குறிப்பிடுவது போல ஈடியே நிறுவனம்
70,000 குடும்பங்களுக்கு மட்டும் வாழ்வாதாரம் வழங்கவில்லை. இதுவரை சுமார் 2,50,000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கியிருக்கிறது என்ற புள்ளி விபரத்தை பதிவு செய்தார். மனிதவள மேன்பாட்டுத்துறையில் தன் அனுவங்களை பகிர்ந்து கொண்ட அவர், கடந்த 40 வருடங்களாக ஈடியே கடந்து வந்த பாதைகளையும், எதிர் கொண்ட சவால்களையும் நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்வில் ஈடியே நிர்வாக இயக்குநர் அலுவலக மேலாளர் மீரானுக்கு ரோட்டரி முன்னாள் கவர்னர் ஆறுமுகப் பாண்டியன் பொன்னாடை போர்த்த, ரோட்டரி முன்னாள் கவர்னர் முகவை தினேஷ் பாபு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.
பின்பு பேசிய நெல்லை மீரான், ரோட்டரி அமைப்பிற்காக தான் செய்த மிகச் சிறிய உதவிகளை கூட பெரிதுபடுத்தி பேசும் அவர்களின் பெருந்தன்மையை வியந்ததுடன், வரும் காலங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த அமைப்பிற்கு தன் உதவி தொடரும் என்றும் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் ஏராளாமானோர் பங்கு பெற்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.