Tuesday, April 16, 2013

கீழக்கரையில் கல்லூரி வாகன ஓட்டுநர் மீது தாக்குதல்!தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளை போலீஸ் தேடுகிற‌து!ப‌ட‌ங்க‌ள்: நன்றி. ந‌க்கீர‌ன் இணைய‌த‌ள‌ம்
கீழ‌க்க‌ரை ம‌ருத்துவ‌ம‌னை வளாக‌த்தில்... 

ப‌ட‌ங்க‌ள்: நன்றி. ந‌க்கீர‌ன் இணைய‌த‌ள‌ம்

கீழக்கரையைச் சேர்ந்த நாகசுந்தரம் மகன் ராஜேஸ்(24). இவர் கீழ‌க்க‌ரை தனியார் கல்லூரியில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலைகல்லூரி மாணவிகளை வாக‌ன‌த்தில் ஏற்றிக் வீடுக‌ளில் சேர்ப்ப‌த‌ற்காக‌ கீழ‌க்க‌ரை சாலையில் சென்று கொண்டிருந்த‌ போது வாக‌ன‌த்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் 4 இளைஞ‌ர்க‌ள் வ‌ந்துள்ளன‌ர்.
 இது குறித்து ஓட்டுநர் ராஜேஸ் இளைஞ‌ர்க‌ளை க‌ண்டித்ததால் வாக்குவாத‌ம் ஏற்ப‌ட்டு ஓட்டுந‌ர் ராஜேஷ் க‌டுமையாக‌ தாக்க‌ப்ப‌ட்டுள்ளார்.இத‌னால் காயமடைந்த ராஜேஸ் கீழக்கரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜேஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கஸ்டம்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த உமர்சாகிப்,அமீன் உட்பட 4பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வ‌ருகின்ற‌ன‌ர்.
இதனிடையே ராஜேஸை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஒரு பிரிவை சேர்ந்த‌ ஏராள‌மான‌ இளைஞர்கள் கீழக்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டன‌ர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 comments:

 1. கல்லூரி மாணவிகளின் வாகனங்களை மட்டுமின்றி பள்ளி செல்லும் மாணவிகளின் வாகனங்களையும் பின் தொடர்ந்து தொந்தரவு செய்வது அதிகரித்து வருகிறது, பெற்றோர்கள் தங்கள் மகன்களுக்கு மோட்டார் பைக் வாங்கி கொடுத்து ஊர் மேய விட்டுள்ளார்கள், பெண் பிள்ளையை பெற்றவர்கள் பாடு திண்டாட்டம் தான்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்து மிகவும் உண்மை தான். ஆனால் பெண் பிள்ளைகளிலும் ஒரு சில தருதலைகள் சினிமாவை பார்த்து சிரழியிவுதுகள்.
   இதற்கு முழுமையான தீர்வு.
   பெற்றோர்கள் இஸ்லாமிய நெரிமுறைகளை தானு கற்றுக்கொள்ள வேண்டும் தான் குழந்தைக்கும் இதன் அவசியத்தை சொல்லி கற்றுக் கொடுக்க வேண்டும்.
   இல்லை என்றால் அந்த பெற்றோர்கள் நஷ்டவாலிகள் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் நாம் அனைவருவளையும் காப்பாற்ற வேண்டும்.

   "நபியே கூறுவீராக! உங்களது பெற்றோரும், உங்களது பிள்ளைகளும்‌, உங்களது சகோதரர்களும்‌, உங்களது மனைவிமாறும் உங்களது குடும்பத்தினரும்‌, நீங்கள் திரட்டிய செல்வங்களும் , நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும் , நீங்கள் திருப்தி காணும் வீடுகளும் , அல்‌லாஹ்வையும் அவனது தூதுவரையும் அவனது பாதையில் போராடுவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்‌லாஹ் அவனுடைய கட்டளையைக்(வேதனையைக்)கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள். அல்‌லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை" (அத் தௌபா : 24)-

   அல்லாஹ் பின்வருமாறு கூறுவதை அவதானமாகக் கேள் :

   "(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமம் செய்வான்." (அல் இஸ்ரா : 53)

   சுல்தான்

   Delete
  2. உங்கள் கருத்து மிகவும் உண்மை தான். ஆனால் பெண் பிள்ளைகளிலும் ஒரு சில தருதலைகள் சினிமாவை பார்த்து சிரழியிவுதுகள்.
   இதற்கு முழுமையான தீர்வு.
   பெற்றோர்கள் இஸ்லாமிய நெரிமுறைகளை தானு கற்றுக்கொள்ள வேண்டும் தான் குழந்தைக்கும் இதன் அவசியத்தை சொல்லி கற்றுக் கொடுக்க வேண்டும்.
   இல்லை என்றால் அந்த பெற்றோர்கள் நஷ்டவாலிகள் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் நாம் அனைவருவளையும் காப்பாற்ற வேண்டும்.

   "நபியே கூறுவீராக! உங்களது பெற்றோரும், உங்களது பிள்ளைகளும்‌, உங்களது சகோதரர்களும்‌, உங்களது மனைவிமாறும் உங்களது குடும்பத்தினரும்‌, நீங்கள் திரட்டிய செல்வங்களும் , நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும் , நீங்கள் திருப்தி காணும் வீடுகளும் , அல்‌லாஹ்வையும் அவனது தூதுவரையும் அவனது பாதையில் போராடுவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்‌லாஹ் அவனுடைய கட்டளையைக்(வேதனையைக்)கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள். அல்‌லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை" (அத் தௌபா : 24)-

   அல்லாஹ் பின்வருமாறு கூறுவதை அவதானமாகக் கேள் :

   "(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமம் செய்வான்." (அல் இஸ்ரா : 53)

   சுல்தான்

   Delete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.