கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மின்னி யல் மற்றும் மின்ணணுவி யல் துறை இறுதியாண்டு மாணவர்கள் அஹமது ஹூசைன் ஆசிப், பாசித்கனி, செய்யது முகம்மது பாதுஷா, மற்றும் சின்னத்துரை. இந்த மாணவர்கள் குறைந்த காற்றழுத்தத்தின் மூலம் மின் உற்பத்தி செய்யும் நவீன காற் றாலை கருவியை கண்டுபித்துள்ளனர்.
இந்த நவீன கருவியை கண்டுபிடித்த மாணவர்கள் கூறுகையில், ‘பொதுவாக ஒரு காற்றாலை மின் உற்ப த்தி செய்வதற்கு நொடிக்கு 5 மைல் வேகம் உள்ள காற்ற ழுத்தம் வேண் டும். ஆனால் எங்களது புதிய நவீன காற் றாலை கருவி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு நொடி க்கு 2 மைல் என்ற மிகக்குறைந்த காற்றின் வேகம் போதும். எனவே குறைந்த காற்றழுத்தம் உள்ள இடங்களில் கூட இந்த கருவியை நிறுவி மின் உற்பத்தியை பெ ருக்கி கொள்ளலாம். இதன்மூலம் தற்சமயம் உள்ள காற்றாலை யை விட 20 சதவிகிதம் கூடுதலாக மின் உற்பத்தி செய்ய முடியும். குறைந்த முதலீட்டில் நவீன காற்றாலையை உருவாக்கலாம்’ என்றனர்.
மாணவர்களை கல்லூரி தலைவர் ஹமீது அப்துல் காதர், தாளாளர் யூசுப்சாகிபு, இயக்குநர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, முதல்வர் முகம்மது ஜகாபர் துறைத்தலைவர் சுரேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.
good one, well done...
ReplyDeleteWHY NOT SET UP THE SAME IN YOUR CAMPUS?
ReplyDelete