Saturday, May 4, 2013

இறந்த நிலையில் க‌ரை ஒதுங்கிய‌ கடல்பசு !



ராமநாதபுரம் மாவட் டம் கீழ‌க்க‌ரை அருகே ஏர்வாடி வேதாளை கடல் பகுதியில் கடல்பசு என்னும் அரிய வகை உயிரினம் வசிக்கின்றன. இவை அவ்வப்போது இறந்த நிலையில் கடற்கரையில் ஒதுங்குவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நேற்று ஏர்வாடி அருகே சின்னஏர்வாடி கொடிமரம் தர்கா கடற்கரையில் சுமார் 6 அடி உயரமும், சுமார் 200 கிலோ எடையும் கொண்ட கடல்பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

மன்னார் வளைகுடா உயிர்காப்பகம் அறக்கட்டளை திட்ட களப்பணியாளர் இளையராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர் முருகராஜ் ஆகியோர் கடல்பசுவை பார்வையிட்டனர். அவர்கள் கூறு கையில்,

‘இந்த கடல்பசுவை இப்பகுதியில் ஆவ்லியா மீன் என்றும் கூறுவர். இவை பால் கொடுக்கும் இனத்தை சேர்ந்தவை.

இவை தாழைபாசியை மட்டுமே உணவாக உட்கொள்ளும். இந்த தாழைபாசி ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே வேதாளையிலிருந்து வாலிநோக்கம் வரைதான் அதிகமாகக் காணப்படும். அதனால் இப்பகுதியில்தான் இந்த கடல்பசுவும் அதிகமாக வாழும். கடல்பசுவை விஷத்திருக்கை மீனான ஆடாதிருக்கை தாக்கியதால் உயிர் இழந்திருக்கக்கூடும்’ என்றனர்.
இறந்த கடல்பசுவை வனச்சரகர் ஜெயராமன், வனத்தடுப்பு காப் பாளர் மகேந்திரன்மற்றும் வனகாப்பாளர்கள் கைபற்றி பிரேத பரிசோதனை செய்து அந்த இடத்திலேயே புதைத்து விட்டனர்.

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.