Sunday, July 14, 2013

சேர்மன் கணவர் மற்றும் சுகாதார ஆய்வாளர் மீது லஞ்சம் கேட்பதாக காண்ட்ராக்டர் புகார்!


கீழக்கரை நகராட்சி சார்பில் கடந்த இரண்டரை மாதங்களாக 1 முதல் 11வது வார்டு வரை துப்புரவு பணிகள் மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு 25  பணியாளர்களுடன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடிரென பணிகள் நடைபெறாததால் மீண்டும் சுகாதாரகேடு தலைதூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பணிகளை மேற்கொண்டு தொடர முடியாமல் சேர்மனின் கணவர் ரிஸ்வனும்,சுகாதார ஆய்வாளரும் இடையூறு செய்வதாகவும் ,மாதா மாதம் ரூ 30000 லஞ்சம் கேட்பதாகவும்  இப்பணிகளை மேற் கொண்ட தனியார் காண்ட்ராக்டர் ஆறுமுகம் குற்றச்சட்டுகளை புகாராக எழுதி அனைத்து கவுன்சிலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.


இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரிய கூறியதாவது,

இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுக்கள் ஒன்றும் புதிதல்ல.அனைத்தையும் மக்கள் அறிவார்கள்

மேற்கண்ட குற்றச்சாட்டை கூறியுள்ள தனியார் நிறுவனம் பணிகளை முறையாக செய்யவில்லை.குறித்த நேரத்துக்கு பணியாளர்களை அழைத்து வருவதில்லை.இதனால் துப்புரவு பணிகள சீராக நடைபெறவில்லை.பணியாளர் வைப்பு நிதியை குறித்த காலத்துக்குள் செலுத்துவதில்லை.இப்படி பல்வேறு விதிமுறைகளை மீறியது.இது குறித்து ஏற்கெனவே பலமுறை அறிவுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.


இதனால் மீண்டும் டெண்டர் விடப்பட்டு வேறு ஒரு நிறுவனத்திடம் பணிகளை ஒப்படைக்க முடிவெடுத்தால் என்ன  தவறு இருக்க முடியும்

டெண்டர் வைத்துதான் பணிகள் அனுமதிக்கப்படுகிறது.எனவே இதில் ஊழலுக்கு இடமில்லை

இது போன்று அபாண்ட குற்றச்சாட்டுக்களை கூறியுள்ள இவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.


சமீபத்தில் நகராட்சி உள்ளிருப்புபோராட்டம்,இது போன்ற பொய்யான குற்றச்சாட்டு இவற்றுக்கு தூண்டுகோலாக
சேர்மன்,கவுன்சிலர்,கவுன்சிலரின் உறவினர் தூண்டுதலின்  பேரில் நகராட்சியின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் நடைபெறுகிறது.

குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் இரட்டை வேடம் போடும் சிலரின் சதி உள்ளது.

 மேலும் சில கவுன்சிலர்கள் பணம் கேட்கிறார்கள் தர முடியாது என்றவுடன் இது போன்று தொந்தரவுகளில் ஈடுபடுகிறார்கள்.மேலும் காண்ட்ராக்டர்களிடம் கமிசன் பெற்று தர சொல்லி வற்புறுத்துகிறார்கள்
நான் இதற்கெல்லாம் உடன்படாததால் இப்படியான ஏற்படுத்தி உண்டாக்கி மன உளைச்சலை உண்டாக்குகின்றனர்.
இறைவன் உதவியால் அனைத்தையும் முறியடித்து மக்களுக்கான பணிகளை தொடர்வேன் என்றார்


5 comments:

  1. Aaga motthathil keelakaraiyei nasamakividuveergal intha aatchi ill.

    ReplyDelete
  2. Lancham Vangupanum mattrum Lancham Koduppavanum Iraivanal Sabikkappattavargal.

    ReplyDelete
  3. இப்போதைய நகராட்சியின் சீர் கெட்ட நிர்வாகத்தால் கீழக்கரை மீண்டும் குப்பைக்கரையானது. மக்கள் நல பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய்களை ஒதுக்கி இருந்தும் திராணி அற்றவர்களின் செயலால் மீண்டும் கொடிய தொற்று நோய்கள் பரவக் கூடிய வாய்ப்புகள் வெகு தூரத்தில் இல்லை.

    கடந்த காலங்களில் உடல் நோக உழைத்து சம்பாதித்த பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நகர் சுகாதார சீர்கேட்டால் பிரசவித்த உயிர் கொல்லி நோயான டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்ச்லுக்கு மதுரை மற்றும் இராம்நாதபுரம் மருத்துவமனைகளில் கொட்டி அழுத கீழக்கரை வாழ் குடும்பத்தினர்க்கு தான் அதன் கொடுமை பூரணமாக புரியும்.அவர்களின் வயிற்று எரிச்சல் வீண்போகாது.சிந்திக்க கூடிய திறன் உள்ளவர்கள் புரிந்து நடந்து கொள்ளுங்கள். காலச் சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கிறது.

    மற்றொரு செய்தியும் உலா வருகிறது. தொகுதி நிதியிலிருந்து நமது ஊருக்கு சில மக்கள் நல திட்டங்களை செயல் பாட்டிற்கு கொண்டு வர எத்தனிக்கும் முற்சிக்கும், நமது ஊரில் அது நடக்க இருப்பதால் அதற்கும் கமிஷன் காரணமாக தடை ஏற்பட்டுள்ளதாம்.இதற்கு சம்பந்தப்பட்ட கட்சியினர் தான் பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    கோடிகளில் புரளும் அன்புக்குரிய புண்ணியவான்களே பொது மக்கள் வேண்டுவதெல்லாம் இது தான்.

    நீங்கள்அனுபவிக்கும் சுக போகத்தில் பங்கு கேடகவில்லை. அந்த் ஹராமான காசு எங்களுக்கு வேண்டவே வேண்டாம்.

    இப்போது வீதி எங்கும் நிறைந்திருக்கும் உயிர் கொல்லி வியாதிகள் பரப்பும் குப்பைகளை அகற்றி மக்களை காப்பாற்றுங்கள்.

    மீண்டும் குப்பைக்கரையான கீழக்கரையை கோபுரக்கரையாக மாற்ற மனசாட்சியுடன் செயல் பட முயற்சியுங்கள்.

    வருடத்திற்கு ரூபாய் ஆறு நூறு தண்ணீர் வரியாகக் கட்டும் மக்களுக்கு தாகம் தீர்க்கக குடிநீர் கிடைக்க அதற்கு உரிய இடையூர்களை நீக்க கடும் முயற்சி செய்யுங்கள். புண்ணியமாவது கிடைக்கட்டும் அதற்காக தான் உங்களுக்கு ஓட்டளித்து பொது சேவைக்கு அனுப்பினோம்.பணம் சம்பாதிக்க அல்ல. அல்லாத பட்சத்தில் பதவிகள் துறவுங்கள்.அது உங்களுக்கும் நல்லது. ஊருக்கும் நல்லது.

    நீங்கள் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகளை ஏறத்தாழ நெருங்குகிறது. இன்னூம் வாருகால் மூடி போடும் பணி பூர்த்தியாகவில்லை.அதனை விரைந்து முடித்து வழிந்தோடும் கழிவு நீர்களை தடுத்து நிறுத்தி மக்களை சுகாதார சீர்கேட்டிலிருந்து காக்க தங்களின் உன்னதமான சக்திகள் செலவிடுங்கள். வல்ல ரஹ்மான் நற் கூலியை வழங்க இரு கரம் ஏந்துகிறோம்.

    சில லட்சங்களில் முடிய வேண்டிய ஹைமாஸ் விளக்குகளை பல லட்சங்களை செலவழித்து முடித்த திறமை மிக்கவர்களே அதனை இரவில் மட்டும் எரிய விட்டு மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வாருங்கள்.

    இதனைக்கும் மேலே எங்கள் வழி தனி வழி என இதே போக்கில் போக எத்தனித்தால் மக்கள் .......தை தூக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இது திண்ணம்.

    ReplyDelete

    ReplyDelete
  4. சவுக்கடி சாவன்னாJuly 14, 2013 at 3:49 PM

    முதல் குடிமகளின் மறுப்பு செய்தியில்,

    1)மேற்கண்ட குற்றச்சாட்டை கூறியுள்ள தனியார் நிறுவனம் பணிகளை முறையாக செய்யவில்லை.

    இது உண்மைக்கு எதிரானது. இவர்களை கொண்டு துப்பரவு பணி தொடங்கிய பின் தான் இப் பகுதியில்(வார்டு 01 முதல் 11 வரை) குப்பை பிரச்சனை வெகுவாக குறைந்தது என்பதை அப பகுதி மக்கள் தெளிவாக அறிவார்கள்.

    2)குறித்த நேரத்துக்கு பணியாளர்களை அழைத்து வருவதில்லை.இதனால் துப்புரவு பணிகள சீராக நடைபெறவில்லை.

    இதுவும் உண்மைக்கு எதிரானது.காலையில் சுமார் 7 மணி வாக்கில் வீட்டை விட்டு வெளியில் வரும் போதே துப்பரவு பணியாளர்கள் அதிக பட்சமான பணிகளை முடித்து விட்டு கும்மலாக சேகரித்த குப்பைகளை அகற்றிக் கொண்டு இருப்பதை அப் பகுதியில் வசிக்கும் மக்கள் இறைவன் சாட்சியாக கண் கூடாக கண்ட உண்மை.

    3)பணியாளர் வைப்பு நிதியை குறித்த காலத்துக்குள் செலுத்துவதில்லை.

    இதில் குறை காண என்ன உள்ளது.மாதாந்திர பணித் தொகையை ஒப்பந்தகாரருக்கு பட்டுவாடா செய்யும் போது பணியாளர் வைப்புத் தொகைமற்றும் அரசு சொல்லும் வரிகளை பிடித்தம் செய்த பின் கொடுப்பது தானே நடைமுறை. இதில் ஒப்பந்தகாரரின் தரப்பில் உள்ள தப்பு என்ன இருக்கிறது.

    ஆக இது போன்ற நிர்வாகச் சீர்கேட்டால் கீழக்கரை மீண்டும் குப்பக்கரையானது தான் ஓட்டு போட்ட மக்கள் கண்ட பலன், கீழக்கரையா(ர்)ன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா தரணியில்.

    படைத்த யா ரப்பே, இந்த பிரச்சனை தீரும் வரையிலும் உந்தன் மழை என்னும் ரஹ்மத்தை இறக்கி விடாதே.அல்லாத பட்சத்தில் ஊர் மக்களின் பெரும் ப்குயினர் உடல் நோக பாடுபட்டு உழைத்து சம்பாதித்த
    பணத்தை எடுத்துக் கொண்டோ அல்லது கந்து வட்டிக் காரனிடம் வாங்கிக் கொண்டோ மருத்துவமனைகளில் தஞ்சம் அடைய நேரிடும்.அந்த கொடுமை எங்களுக்கு வேண்டவே வேண்டாம்.

    ReplyDelete
  5. சவுக்கடி சாவன்னாJuly 14, 2013 at 4:17 PM

    ஆனால் கொடுப்பவனுக்கு இறுதியில் மன்னிப்பு கிடைக்க வாயப்புண்டு. ஏனெண்ரால் காசு மிஞ்ச்சிப்போய் அவன் கொடுப்பதில்லை.சூழ்நிலை கைதி ஆக்கப்பட்டு நிர்பந்த்தின் பேரில் கொடுக்கிறான்.உதாரணமாக நம்முடைய செல்வங்களை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போது இருப்பிடம்,ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை சமர்பிப்பது கட்டாயம்.அதை வழங்க ஆளூகின்ற அரசால் நியமிக்கப்பட்ட கடமைப் பட்டவர்கள் லஞ்சம் வாங்காமல் கொடுப்பதில்லை. மறுத்தால் மக்கள் செல்வங்ககளை பாடசாலைகளில் சேர்க்க முடியாது. இது தான் இன்றைய இந்தியாவின் தலை எழுத்து.இது போல் பாஸ்போர்ட் பெற, பட்டா பெற. ரேஷன் கார்ட்...... சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது உங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.