Tuesday, September 17, 2013

"மோட்டார்லதண்ணிஏறல,கிணத்துலதண்ணிஇல்லயாம்"....கட்டுரை:ஸஹீருதீன்எஸ். ஏ.


 
கட்டுரையாளர் கீழக்கரையை சேர்ந்த  ஸ்ஹீருதீன்,எம்.பி.ஏ பட்டம் பெற்றுள்ளார். இவர் சமூக பணிகளில் ஆர்வமுடையவர் இவர் சமூகம் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறார்.
 
கீழக்கரை !!!ஆண்டுகள்பலகடந்துநிற்கும்பள்ளிவாசல்கள், இம்மாவட்டதிற்கே கல்விஒளிதரும்பல்துறைசார்ந்தகல்லூரிகள்இதில்மகளிர்க்கென ஒருதனிகல்லூரி,சரித்திரம்போற்றும்கொடைவள்ளல்கள், அறிவிற்சிறந்த கல்வியாலர்கள், பெரும்தொழில்அதிபர்கள்என ஆயிரம்ஆண்டுகால பெருமையைதாங்கிநிற்கும் ஊர்.
இவ்வூரைச்சேர்ந்தநான் எனது மேற்படிப்பிற்காக வெளியூரில் தங்கி இருந்த பொழுது உடன்படிக்கும் சகநண்பர்களின் வீட்டிற்கு செல்வதுண்டு, அப்பொழுது என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள விளையும் நான், நமது ஊர்பெயரைச் சொன்னால் சட்டெனபிடிபடாதோ என்று, நான் இராமேஸ்வரம் அருகில் இருக்கும் ஒருஊரைச்சார்ந்தவன் எனகூறுவதுண்டு. சற்று விளக்கதுடன் கீழக்கரை என்றுகூறினால்.‘’ஓ... !கீழக்கரையா?பெரிய பெரிய பாய்மாருகள் இருக்கும் ஊராச்சே!!’’என்றுஅங்கு உள்ள வயதில் பெரியவர்கள் பரிச்சயத்துடன் பாசத்துடன் கேட்டார்கள் !!ஆனால் எனது நண்பர்களுக்கோ அல்லது அவர்களின் பெற்றோர்களுக்கோ கீழக்கரையைதெரியவில்லை.ஒவ்வொருமுறையும் நான் வெளிஊர்களில் சந்தித்தபெரியவர்கள்கீழக்கரையைநன்றேஅறிந்துவைத்துஇருந்தது
எனக்குசற்றுவியப்பையேதந்தது.
மிகசமீபத்தில்படிப்பைமுடித்துவிட்டு,சென்னயில்தற்ப்போதுபணிசெய்யும்நான்இம்முறை நோன்பு பெருநாளைக்காக ஊர் வந்தபொழுதுநான்பிறந்து, வளர்ந்து, பார்த்து,பழகிய கீழக்கரையை மேற்கூறிய அனுபவங்கள் சற்றுமாறுபட்ட கோணத்துடன் பார்க்கதூண்டியது. பயணம் வந்திறங்கிய அன்றைய காலை ற்றே சலசலத்த சத்தத்துடன் விழித்த எனக்கு வீட்டில் பெரியவர்கள் பேசிக்கொண்டுஇருந்தது……
‘’மோட்டார்ல தண்ணி , கிணத்துல தண்ணிஇல்லயாம், அர ஒரதான் தண்ணிகெடக்குதாம் !!மழையும்இலல, அப்படியே மழை வந்தாலும் தண்ணி ண்ணுக்குள்ளயாபோகுது ? சிமிண்டுரோடுபோட்டுஒருதண்ணியும் மண்ணுக்குள்ளபோகமாடிக்குது !!!அந்தகாலத்துலைலாம் இப்புடியா இருந்துச்சி ?தெருவெல்லாம் மண்ணுக்காடகெடக்கும், வெருங்கால்ல நடக்கவே பிருசமாஇருக்கும் !!!ஹ்ம்ம்….’’ என்றஒருபெருமூச்சு.
பெருநாள்,காலத்தின்வேகத்தில்சட்டெனஒட....கீழக்கரைமஜீதாமைந்தன்அவர்கள்எழுதியபுத்தகத்தில்இடம்பெற்ற‘’காணாதகாட்சி’’சிறுகதையைபடித்தஎனக்குஅக்கதை கீழக்கரையின் சற்றே பழமையான வாழ்க்கை முறையினையும், பழம்பெருமையயும் அழகாககண்முன்கொண்டுவந்துநிறுத்தியது.
 அன்றுஇரவுபெரிதும்யோசித்தநான்.மறுநாள்காலையில், இத்தனைநாள் ஏதேதோஊர்களை எல்லாம் சுற்றிபார்க்க ஆசைபட்டநான் இன்று கீழக்கரையை சுற்றிப்பார்க்கவேண்டும் எனதோன்றியது. மறுநாள் காலை விடிய ..பட்டென கால்கள் வெளியில் நகர்ந்தது. அறிந்த தெரிந்த இடங்கள் என கால் போன போக்கில் எல்லாம் போன எனக்கு கண்ணில்பட்டவைகள் அனைத்தயும் மனது படம் எடுத்து வைத்துகொண்டது. பலதுறைகளிலும் வளர்ச்சி பெற்றதாக தோன்றுகின்ற கீழக்கரை உண்மையிலேயே பலன் தரக்கூடிய ஒருவளர்ச்சியை பெற்றுள்ளதா?? இல்லை ஒருசரியான தனிமனித மற்றும் சமூகம்சார்ந்தஒருவளர்ச்சியைநோக்கிசெல்கின்றதாஎன்றகேள்வி சற்றேஎனக்குள்மேலோங்கியது.அவ்வாறுதொலைநோக்கில்சமூகத்திற்கு
பயன்தரக்கூடியஒருசரியானதிட்டம்சார்ந்தவளர்ச்சி சிலதுறைகளில்தேவைஎனதோன்றியது.
முதலில்நகரின்சுத்தம்மற்றும்சுகாதரம்சார்ந்ததுறையில்முன்னேற்றம்
தேவையெனஎனக்குத்தோன்றியது.தெருக்களில்பார்த்தஇடமெல்லாம்குப்பைகள், ஈக்கள்மொய்க்கும்கழிவுகள்எனசுத்தம்என்பதுநாடுகடத்தப்பட்டேஇருந்தது. இதற்குநான் வழக்கம்போல்குறைகூறவிரும்பவில்லை
இதற்குநமதுஊர்மக்களின்வாழ்க்கைமுறைமற்றும்பழக்கவழக்கங்கள்மிகமுக்கியமான ஒருகாரணமாகஅமைகிறதுஎன்பதுமறுக்கமுடியாதஒருஉண்மை.
"வெல்ஃபேர்மற்றும்நகராட்சியில்இருந்துவந்து
தெருக்களைசுத்தம்செய்வார்கள்,நமக்கென்ன!!
என்றசுத்தம்பற்றியகவலையின்மை மிகஅதிகம்.அவரவர்வீட்டுவாசலை அவரவர்சுத்தமாகவைத்திருக்கஎண்ணம்கொண்டு.. சிறுமுயற்சிஎடுத்தாலேபோதும் தெருக்கள்சுத்தம்பெரும்.இந்தமுயற்சிஒன்றே...தீங்குவிளைவிக்கும்பலநோய்களைவிட்டும்தூரமாகவாழ்வதற்குவழிவகைசெய்யும்.வளர்ச்சிபெறவேண்டிய
அடுத்ததுறைகல்வி.இத்துறையில்நமதூர்மக்கள்பெரிதும்வளர்ச்சிகண்டதாகதோன்றினாலும்அதன்பலன்என்பதுசற்றுகுறைவாகவேஇருக்கின்றது.
ஜார்ஜ்என்றஒருமேல்நாட்டுஅறிஞர்‘’கல்விஎன்பதுசிறந்தமனிதனைஉருவாக்கவேஅன்றிஒருஅற்பவேலையைதரும்வழிஅன்று’’ என்றுகூறினார்.இத்தகையஒருபலன்தரக்கூடியகல்விமிகக்குறைவு.
இந்தசமூகத்தில்இருந்துசிறந்தஒருகல்வியின்மூலம்உயர்பதவிகளிள்இருந்துஇந்தபகுதிக்குபலநன்மைகளைசெய்யும்வகையில்IAS,IPS,CA போன்றசிறப்புமிக்ககல்விக்காகநமதுமக்களைதயார்செய்யவேண்டும். ஆறிவுகூர்மைநிறைந்தபலமாணவமற்றும்மாணவிகள்நமதுஊரில்மிகஅதிகம்.இவர்களைஅடையாளம்கண்டுசரியாகவழிநடத்தினால்அதன்விளைவுபெரும்பயன்தரும்.
அடுத்ததாகவளர்ச்சிவேண்டியஒருமுக்கியமானஒன்று,அரசியல்மாற்றத்தின்மூலமாகஅடையக்கூடியஒருங்கினைந்தசமூகமுன்னேற்றம்.கீழக்கரையின்இத்தனைஆண்டுகாலஅரசியல்வரலாற்றில்பலசிறப்புமிக்கதலைவர்களைபார்த்துஇருக்கிறோம்.இனிவரக்கூடியகாலங்களில்படித்ததுடிப்புமிக்கஇளைஞர்களுக்குவாய்ப்பளித்து, பெரியவர்கள்வழிநடத்த, வலிமையும்புதுமையும்மிகுந்தஒருவலுவானஅரசியல்மாற்றத்திற்காகமுயற்சிகள்வேண்டும்.
ரின்பராமரிப்புமற்றும்உட்கட்டமைப்புசார்ந்தவளர்ச்சிமிகவும்முக்கியமானஒருபிரச்சினையாகஇருக்கின்றது.இதற்குசரியானஒருஎடுத்துக்காட்டுஊரில்புதிதாகபெரும்செலவில்கட்டியகடற்கரைபாலம்!மிககுறுகியகாலதிலேயேபராமரிப்பற்றுசேதம டையதொடங்கிவிட்டது.இரவுநேரங்களில்போதியவிளக்குகள்இன்றிமிகவும்ஆபத்தான இடமாகவும்மூகவிரோதிகளுக்குஒருஉறைவிடமாகவும்மாறிஇருக்கின்றது.புதியபாலம்போன்றகட்டமைப்புகளைசரிவரமேம்படுத்திஅழகுசேர்க்காவிட்டாலும், அதுபழுதடைந்துபயனற்றுபோகும்நிலைஎற்படாமல்பராமரிப்புசெய்வதுநமதுகடமைஆகும்.இதுபோல்இன்னும்ஆயிரம்உண்டு !!
இதுஅனைத்துக்கும்பாடுபடும்வகையில்கீழக்கரையின்வளர்ச்சிக்கெனஒருகுழுஅமைக்கப்படவேண்டும்.-அந்தகுழுவானதுமற்றஅமைப்புமற்றும்மதம்சாராபடித்தஇளைஞர்கள், வெளிநாடுகளில்பணியில்இருக்கும்சகோதரர்களைகொண்டுஒருவலிமையும்துடிப்பும்மிக்ககலப்பற்றஒருகுழுவாகஉருவாக்கவேண்டும்  !! பெருமைவாய்ந்தகீழக்கரைமுன்னேற்றத்தின்மூலமாகஇனிவரக்கூடியதலைமுறைகளும்  வ்வுலகில்அறியட்டும்.ஆயிரம்மைல்தொலைவுகொண்டபயணமாகஇருந்தாலும்அதன்தொடக்கம்முதல்அடியிலேயே!!சிறுதுளிபெருவெள்ளம் !! இந்தமுயற்சிசமூகமுன்னேற்றத்திற்குவித்திடடும் !! விளைவோம்ஒருசிறந்தசமூககட்டமைப்பைநோக்கி.. இன்ஷாஅல்லாஹ் !!

3 comments:

  1. கீழக்கரை அலி பாட்சாSeptember 17, 2013 at 2:57 PM

    நீங்களே இன்ஷா அல்லா எனக் கூறி விட்டீர்கள், ஆமீன்

    படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக நீங்கள் ஊரில் அதிக நாட்கள் தங்கி இருக்க முடியாத சூழ்நிலை காரணமாக இப்போது ஊரை வலம் வருகையில் ஏற்படும் வேதனை, ஆதங்கம் ஊரிலேயே இருக்கும் சமூக ஆர்வலர்களுக்கு புதினமாக கிஞ்சித்தும் இல்லவே இல்லை.

    காரணம் தங்களின் பொன்னான நேரத்தை சற்றே ஒதுக்கி, சுமார் இரண்டு, இரண்டரை ஆண்டுகால (குறிப்பாக நக்ராட்சி தேர்தலின் ஆரம்ப கட்டத்தில்) கீழக்கரை டைம்ஸ் மற்றும் கீழை இளையவனின் முன் பதிவுகளையும் அதனின் மக்கள் கருத்துக்களையும் ஓர்மித்த மனதுடன் படித்தீர்களானால் நிலைமை புரியும்.

    ஊரின் நிலைமை அந்தோ பர்தாபம்!!! மக்களின் நல் வாழ்வு திட்டங்களை அமல் படுத்துவதில் நாட்டமில்லாத சீர் கெட்ட நரகாட்சி நிர்வாகம், அதனின் பொருப்பற்ற மக்கள் பிரதிநிதிகள்,இறைவனின் கோபப் பார்வைக்கு உள்ளான ஊரில் அனைவரையும் ஒருங்கிணைது ஏகனிடம் மன்றாட மனமில்லாத ஜமாஅத் அமைப்புகள், மக்களின் பிரச்சனைகளை முடிவு தெரியும் வரை போராட போர் குணம் இல்லாத, சுய விளம்பரம் தேடுவதில் நாட்டம் கொண்ட சமூக அமைப்புகள் / இயக்கங்கள்,சமூக விழிப்புணர்வு இல்லாத மக்கள் இப்படியாக எதை விடுவது? எதை சேர்ப்பது?

    இன்றைய இளைய தலைமுறையினர் பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை. மிகவும் அச்சமாக உள்ளது. அவசியம் மூத்த குடிமக்கள் அவர்கள் தம் மரியாதையை பேணிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.நீங்களே ஊரை வலம் வந்து இது விஷயத்தில் பதிவும் ஆலோசனையும் தாருங்களேன்.

    மொத்தத்தில் ஊர் ஐக்கியம் மில்லாது பல பட்டறையாகி நீண்ட நெடுந் தூரம் சென்று விட்டது. இருப்பினும் ஊதுன்ற சங்கை ஊதுகின்றவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

    ஏக இறைவன் நம் அனைவரையும் பாதுகாத்து நல்லருள் புரிவானாக, ஆமீன்

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாட்சாSeptember 17, 2013 at 4:45 PM

    இது அனைத்துக்கும் பாடுபடும் வகையில் கீழக்கரையின் வளர்ச்சிக்கென ஒருகுழு அமைக்கப்பட வேண்டும்.-கட்டுரையாளர் கீழக்கரையை சேர்ந்த ஸ்ஹீருதீன்,எம்.பி.ஏ

    தம்பி ஒரு வகையில் அப்படி அமைக்கப்பட்டது தானே நகராட்சி அமைப்பு. ஊரை 21 பிரிவுகளாக பிரித்து அந்தந்த பகுதி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தெருவாசிகள் தானே மக்கள் பிரதிநிதிகள். மேலும் திட்டத்தை செயல் படுத்த நிதி ஆதரமும் அங்கு உண்டு.

    இது வரை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு சுமார் எட்டரை கோடி ரூபாய் மக்கள் நலத் திட்டங்களை செம்மையாக செயல் படுத்த நிதி ஆதாரம் வந்துள்ளது. ஊரில் என்ன நடந்துள்ளது? சுகாதாரத்தையும், வாருகால்
    கழிவு நீர் பிரச்சனையை மையமாக வைத்து தானே கடந்த நகராட்சி தேர்தல் நடந்து முடிந்தது. நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இவ்வளவு நிதி ஆதாரம் கிடைத்தும் ஏதாவது பிரச்சனை முழுமையாக தீர்க்கப்பட்டதா? இணைப்புக்கு வருடத்திற்கு ரூபாய் 600/= வசூல் செய்தும் குடிநீர் வினியோகம் சீர்பட்டதா? இல்லையே. குறைந்த பட்சம் ஊருக்கு வெளியே வீணாகும், துஷ்பிரயோகம் செய்வதை தகுந்த நடவடிக்கை எடுத்து, தடுத்து, அந்த குடி நீரை நிலத்தடி நீரின்றி வாடி வதங்கும் கீழக்கரை மக்களுக்கு கிடைக்க வழி காணப்பட்டதா? இல்லையே.

    தனிப்பட்ட குடிமக்களால் எதுவும் செய்ய முடியாது. அதற்கு தான் ஜனநாயக அமைப்புக்கள். அவைகள் அறிந்தும் தவறு செய்தால் யார் தண்டிப்பது? நம்பி ஓட்டுப் போட்ட மக்களின் துயரை யார் துடைப்பது?

    NOW BALL IS IN YOUR COURT !!!!

    ReplyDelete
  3. கீழக்கரை மக்களின் வாழ்வியல் முறையில் மாற்றம் வந்தால் மட்டுமே சுற்றுப்புறச்சூழலும் நன்மை பயக்கும் விதமாக மாறும்.வாழ்வியல் முறையைப் பற்றி உங்களுக்கே தெரியும்.வீடு கட்டும் முறை,சிறிய இடத்தில் முறையற்ற வீடு கட்டும் தன்மை,மரம் செடிகொடிகள் அழிப்பு,குப்பைகளை சரியான முறையில் அகற்றாமை இவையெல்லாம்.எல்லா பெண்பிள்ளைகளுக்கும் வீடு கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தாலும்,மிகக் குறுகிய இடத்தில் வீடு கட்ட வேண்டியதிருக்கிறது.ஊரின் ஆண்களும் தன் வீட்டின் குப்பையை கெளரவம் பார்க்காமல் தானே எடுத்துவந்து ஒரு முறையான இடத்தில் கொட்டவேண்டும்.நான் பார்த்த வரையில் பெண்கள்தான் குப்பைகளை எடுத்துவந்து அந்நிய ஆண்கள் பார்த்துவிடுவார்களே என்று அவசர அவசரமாக தன் வீட்டு வாசலிலும் தெருவோரத்திலும் கொட்டிவிட்டு செல்கிறார்கள் இதுக்கு ஒரு விடிவு வரவேண்டும்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.