Monday, September 23, 2013

ஒற்றுமையுடன் செயல்பட்டு ஜமாத்களை வலுப்படுத்த வேண்டும்! அப்துல் ரஹ்மான்.எம்.பி !









அமீரக காயிதே மில்லத் பேரவை (QMF ) -  சார்பில் "இஸ்லாமிய திருமண சட்டம் மற்றும் எம்.எஸ்.எப் .(MSF ) மாநில மாநாடு விளக்க கருத்தரங்கம்" 19/09/2013 -அன்று அமீரகம் அபுதாபியில் ,அல் இபுராஹிம் ரெஸ்டாரெண்ட் கான்பரன்ஸ் ஹாலில் அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது


மௌலவி ,ரசீத் அஹமது பாஜில்.மன்பஈ அவர்களின் கிராத்துடன் துவங்கிய கூட்டத்தில் அபுதாபி மண்டல செயலாளர் அதிரை .ஏ.சாகுல் ஹமீது வரவேற்புரை யாற்றினார் . திட்டச்சேரி ஜாபர் சாதிக் பைஜி துவக்கவுரையாற்றிய பின் ,தமிழ் சங்க நிர்வாகி அதிரை காதர் முஹைதீன் ,சென்னை காதர் மீரான் பைஜி,அய்மான் சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது , IMF தலைவர் அப்துல் காதர்,பாரதி நட்பு கூட்டமைபின் கலீல் ரஹ்மான், காயல் ஹுசைன் மக்கி ஆலிம் ,மௌலவி நூருல்லா பைஜி,அல்ஹாஜ் பனியாஸ் அப்துல் ஹமீத் மரைக்காயர் ஆகியோர் கருத்துரை வழங்கினர் .

கவியன்பன் கலாம் அவர் இயற்றிய கவிதையை வாசித்தார்.


கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா எம்.எஸ்.எப்.மாநாட்டின் நோக்கம் குறித்து உரையாற்றிய  பின், துணைத்தலைவர் களமருதூர் சம்சுதீன் ஹாஜியார் ,துணைத்தலைவர்  வழக்கறிஞர் இஜாஜ் பெய்க், புரவலர் நோபிள் மெரைன் அல்ஹாஜ் சாகுல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .


மணிச்சுடர் நாளிதழ் சார்பில் வெளிவந்துள்ள 26 வது ஆண்டு மலர் முதல் பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர்  அப்துல் ரஹ்மான் வெளியிட சமுதாயப்புரவலர் நோபிள் மரைன் ஷாஹுல் ஹமீத் பெற்றுக் கொண்டார்.இரண்டாவது மலரை குத்தாலம் லியாகத் அலி வெளியிட பனியாஸ் நிறுவன அதிபர் அப்துல் ஹமீத் மரைக்காயர் பெற்றுக் கொண்டார்.

காயிதேமில்லத் பேரவையில் தன்னை இணைத்துகொண்ட கீழக்கரை ஹமீத் சமத் ஃபத்தாஹ்விற்கு பேரவை உறுப்பினர் அட்டையை அப்துல் ரஹ்மான் எம்.பி. வழங்கினார்.


தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் A.லியாகத் அலிபொதுச்செயலாளர் திருப்பனந்தாள் S.முஹம்மது தாஹா பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீது ரஹ்மான் ஆகியோர் இன்றைய காலகட்டத்தில்  எம்.எஸ்.எப். மாநாட்டின் இன்றியமையாத நிலை குறித்தும் , தமிழகம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்று வரும் இஸ்லாமிய சட்ட விளக்க கருத்தரங்குகளின் நோக்கம் குறித்தும் சிறப்புரையாற்றினர்.

பின் காயிதே மில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம் .பி . அவர்கள் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார் .


அவர் தமது உரையில்:

25 ஆண்டுகளுக்கு மேலாக அமீரகத்தில் நான் பணியாற்றியுள்ளதால், உங்களின் மன ஓட்டங்களை,ஆவல்களை நான் மிக அறிந்தவனாக உங்கள் மத்தியிலே நின்று கொண்டிருக்கின்றேன் .தாயகத்திலே , பல சவால்களை எதிர் நோக்கி இக்கட்டான காலகட்டத்தில் நம் சமுதாயம் இருப்பதை ,நான் இந்தியா முழுவதும்  சென்று வருவதன் மூலம் அறிந்துகொண்டுள்ளேன் .


நம் சமுதாயத்தின் இஜ்ஜத்தை ,மானம் மரியாதையை கேள்விக்குறியாக்கும் வகையில் செய்யபடும் சதி வேலைகள் சம்பந்தமாக விழிப்புணர்வு இல்லாத சமுதாயமாக நம் சமுதாயம் இருப்பது மிக வேதனைக்குரிய விசயமாகும் .தமிழகத்தில் நம் சமுதாய மக்கள்  கிராமம் முதல்,பெரு நகரம் வரை "முஹல்லா ஜமாஅத்" கட்டுக் கட்டுக்கோப்புடன், நம் சமுதாய கலாச்சாரத்தை பேணி  வாழ்ந்து வந்தோம் .ஆனால் ,இன்றைய கால கட்டத்தில் பெருநகரம் முதல் குக்கிராமம் வரை ஜமாஅத் கட்டுக்கோப்புக்கு சவால்விடும் வகையில் போட்டி ஜமாத்துகள் உருவாக்கி ஒருவருக்கொருவர் எதிரியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல் உருவாகியுள்ளது மிக வேதனைக்குரிய விசயமாகும் .


ஜமாஅத் ஒற்றுமையை குலைப்பது ,மார்க்க விசயங்களில் ஒருவருக்கொருவர் பகிரங்கமாக போட்டி போட்டுக்கொண்டு சவால் விடும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு சண்டையிடுவதன் மூலம் நமக்கு வெளியில் உள்ள எதிரிகளுக்கு வேலையில்லாமல் ஆகிவிட்டது ;நம் சமுதாயத்தை பார்த்து பிறர் எள்ளி நகையாடும் நிலை உருவாகியுள்ளதை நாம் கண்கூடாக் கண்டுகொண்டுள்ளோம் .


முஹல்லா ஜமாஅத் ஒற்றுமையினை குலைப்பதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனால் நம் சமுதாயம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் நாடெங்கிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எச்சரித்து வருகின்றது .


சமுதாயத்தின் இஜ்ஜத்தினை,கண்ணியத்தை காக்கும் பணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றுமே முன்னிற்கும் .சமுதாயத் தலைவர் பேராசிரியர் பெருந்தகை கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்களிடம் ஒரு சமயம் கேட்கபட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது ,சமுதாயத்தின் இஜ்ஜத்தினை மரியாதையை கெடுக்கும் வகையில் முஹல்லா ஜமாஅத் ஒற்றுமையை குலைக்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகியோ ,உறுப்பினரோ ,அல்லது வேறு எவரோ செயல்பட்டாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஹல்லா ஜமாஅத் கட்டுக்கோப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு எதிராக செயல் படுவோரை அப்புறப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று பதிலுரைத்தார் .


அந்த அடிப்படையில் இங்கு வந்திருக்கும் அனைத்து ஊர் ஜமாஅத் பிரமுகர்களும் ,அவரவர் ஊர் முஹல்லா ஜமாஅத் ஒற்றுமைக்கு தங்களால் இயன்ற அளவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு , எதிர்வரும் அக்டோபர் -05 ஆம்நாள் சென்னை பெரியார் திடலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாணவர் அணியான முஸ்லிம் மாணவர் பேரவையின் 2 - ஆவது மாநில மாநாட்டில் உங்கள் பகுதியின் மாணவர்களை ,இளைஞர்களை அதிகளவில் பங்கு பெறச்செய்யவேண்டும் . 


நம் சமுதாய மாணவர்கள் ,இளைஞர்கள் பாதுகாப்புடனும் , ஒழுக்கத்துடனும் ,கட்டுப்பாட்டுடனும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு முஸ்லிம் மாணவர் பேரவை மாநாடு வழிக்காட்டியாக அமையும் , அந்தவகையில் எதிர்கால நம் சமுதாய தலைமுறையினருக்கு பயனுள்ள வழியை நாம் காண்பித்த நன்மையை அடையும் வகையில் அந்த மாநாட்டிற்கு உங்கள் முழு ஒத்துழைப்பையும் நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு எனது உரையை நிறைவு  செய்கிறேன் என்று பேசினார் .


அமீரக QMF அபுதாபி மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி நன்றி கூற அய்மான் சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர்  மெளலவி ஷர்புத்தீன் மன்பஈ துஆ -உடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது


.கூட்டத்தில் அமீரக QMF மக்கள்  தொடர்பு செயலாளர் கீழக்கரை ஹமீது யாசீன்,மேலாளர் ஜமால் முஹைதீன்,விழாக்குழு செயலாளர் எம்.எஸ்.எ .பரகத் அலி ,ஊடகத்துறை ஒருங்கிணைபாளர் ஹமீத் சமத் பத்தாஹ்,திருச்சி பைஜுர் ரஹ்மான்,தேரா செயலாளர் நெல்லை ஷேக் ஜிந்தா,


தணிக்கையாளர்கள் கீழக்கரை ஹமீத் யூசுப் பக்ஸ்,காயல் எஹ்யா முஹையத்தீன்,அல் மனாக் அதிபர் லால்பேட்டை கே.ஏ.முஹம்மது அலி,இ டி ஏ எம்.பி..எம். பொது மேலாளர் மலுக் முஹம்மது,அய்மான் சங்க பொருளாளர் கீழை முஹம்மது ஜமாலுத்தீன்,திருவாடுதுறை பைத்துல் மால் தலைவர் முத்து ராஜா,ஆடுதுறை அப்துல் காதர்,ஷபீர் அஹமத்,ஆவணியாபுரம் ஃபிரோஸ்,விருதாச்சலம் சாகுல் ஹமீத்,லால்பேட்டை நஜீர் அஹமது,முஹம்மது தய்யூப்,ரபி அஹமத்,நீடூர் முபாரக்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


நிக்சச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதேமில்லத் பேரவையின் அபுதாபி மண்டல நிர்வாகிகள்  செய்திருந்தனர். 


நிகழ்ச்சிகளை பேரவையின் அமைப்பு  செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.

2 comments:

  1. தவறுகள் ஆண் , பெண் இருபாலாரும் தான் செய்கிறார்கள் , இதில் ஆண் பெண் பாகுபாடு பார்பதற்கு அவசியம் இல்லை , ஆனால் ஒரு ஆண் கெட்டால் அது அவனோடு முடித்து விடும் , ஒரு பெண் கெட்டு போனால் அவள் குடுப்பதை பாழகிவிடும், அவளின் ஆண் பெண் குழந்தைகள் எப்படி ஒழுக்கம் உள்ளதாக வளரும் ? அது மட்டு இல்ல அவளின் குடுபதிருக்கு ஏழு தலைமுறைக்கு கெட்ட பெயர் ஆகும் , சமுதயதிற்க்கும் கெட்ட பெயர் ஆகும் , கெட்டு போன பெண் சமுதாயத்தில் மற்ற பெண்களைம் வழி கெடுப்பாள் , இது சமுதாயத்தில் கரையான் மாதிரி வளர்த்து வருகிறது ,
    பெண் குழந்தைகள் கெட்டு போவதற்கு அவர்களின் பெட்றோர்களின் வளர்ப்பு சரி இல்லாத காரணமே ஆகும் ,

    ஒரு சில குடுப்பதில் மனைவிமார்களின் தவறான நடவடிக்கைகளால் மனம் நொந்து ஆண் கெட்டு போய்விடுகிறான் , ஒரு பெண் கெட்டு போவதற்கு ஆண் காரணமோ இல்லையோ , ஆனால் ஒரு ஆண் கெட்டு போவதற்கு பெண் தான் முக்கிய காரணம்

    ஜமாஅத் தலைவர்களை ஜமாஅத்தை சேர்த்த 18 வயது நிரப்பிய அனைத்து ஆண் பெண்கள் ஓட்டு மூலமாக தேர்வு செய்ய வேண்டும் , ஒவ்வரு ஜமாத்தில் பெண்களுக்கு என தனி அமைப்பு உருவாக்க வேண்டும், அதின் தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் , ஜாமத்தின் அணைத்து கூட்டத்திலும் இந்த பெண்களின் அமைப்பை கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் , இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை சுற்றி காட்டி தங்களின் உரிமைகளை பேணி கொள்ள முடியும் ,
    ஜாமத்தை சேர்த்த அணைத்து தெருவிலும் தெருமக்களால் ஜமாஅத் தலைவர் போட்டிக்கு 45 முதல் 60 வயது வரை ஒரு நபர் தேர்ந்து எடுத்து , அணைத்து தெருக்களிலும் தேர்ந்து எடுக்க பட்ட நபர்களை குழுக்கள் முறைகள் நான்கு நபர்களை தேர்ந்து எடுத்து இதில் ஒருவரை மக்களின் ஓட்டு முறைகள் படி ஒரு நபரை ஜமாஅத் தலைவர்களாக தேர்ந்து எடுக்க வேண்டும் , இதன் மூலம் ஒரு ஜமாத்தில் வேறு பாடு இன்றி அணைத்து தெரு நபர்கள் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும் ,

    பெண்களே உங்கள் ஜாமத்தை நோக்கி செல்லுகள் உரிமைகளை கேளுகள் ,அழ வேண்டாம் , கண்ணீர் சிந்த வேண்டாம், கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம் , இறைவனுக்கு பயந்து தனது கற்பை மட்டும் பேணி பாதுகாத்து கொள்ளவேண்டு, ஜமாஅத் தலைவர்களை ஜமாஅத்தை சேர்த்த 18 வயது நிரப்பிய அனைத்து ஆண் பெண்கள் ஓட்டு மூலமாக தேர்வு செய்ய வேண்டும் , ஒவ்வரு ஜமாத்தில் பெண்களுக்கு என தனி அமைப்பு உருவாக்க வேண்டும், அதின் தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் , ஜாமத்தின் அணைத்து கூட்டத்திலும் இந்த பெண்களின் அமைப்பை கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் , இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை சுற்றி காட்டி தங்களின் உரிமைகளை பேணி கொள்ள முடியும் ,ஜமாத்தில் முடிவுகள் எடுப்பதில் பெண்களும் பங்குபெற வேண்டும் , பெண்களுக்கும் முவுகள் தீர்மானம்கள் எடுப்பதில் பங்கு பெற வாய்ப்புகள் (உரிமைகள் ) கொடுக்க பட வேண்டும் , இதன் மூலம் பெண்கள் சமுகத்தில் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் ,
    பல பெண்கள் குடிகாரன் கணவனாலும் , வேலைக்கு செல்லாத கணவனாலும் , போதிய வருமானம் இன்றி அல்லல் படுகிறார்கள் , ஜாமத்தில் தற்போது சரியான கூட்டமைப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள் புறகணிக்க படுகிறார்கள் , குடும்ப வழக்குகள் மலைகள் போன்று எல்லா ஜமாத்திலும் குவிந்து கிடக்கிறது தீர்ப்பு வழங்காமல் ,

    கீழகரைல் அணைத்து பெண்கள் சேர்ந்து கீழக்கரை பெண்கள் நலன் அமைப்பு ஏற்படுத்தலாம் , இதன் மூலம் ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்மூலம் குழந்தைகளை பெற்றும் குடும்பத்தை கவனிக்காமல் மது சூது விபசாரம் என்று திரியும் திமிர் பிடித்த ஆண்கள் எல்லாரையும் சூலுக்கு எடுக்க வேண்டும் ,
    பெண்கள் தங்களுக்கு வேண்டிய உரிமைகளை இந்த அமைப்பு மூலம் உரிமை குரல் கொடுத்து , உரிமைகளை பெற்று கொள்ளலாம் ,

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாட்சாSeptember 23, 2013 at 7:24 PM

    மிகச் சில சம்பங்களைத் தவிர அனத்து தரப்பினரும் வேற்றுமைகளை மறந்து ஜமாஅத் நிர்வாகத்தோடு முழு மனதுடன் ஒத்துழைக்க தயாராகவே உள்ளனர்.ஏனென்றால் அது அல்லாவின் பள்ளி நிர்வாகம். ஆனால் அதை பயன் படுத்திக் கொள்ள தெரியாத , நிலை கெட்டநிர்வாகிகள் தான் பிரச்சனையே . மறுமை பற்றி அச்சமில்லாத, இறை அச்சமில்லாத , சொல்லறிவும் சுய அறிவும் இல்லாதவர்கள் , உயரிய மார்க்க வழிமுறை களையும் ஷரியத சட்டங்களையும் தெரியாவிட்டாலும் அதனைஅறிய இன்றைய காலக் கட்டத்தில் எவ்வளவோ வழிமுறைகள் இருந்தும் முயற்சிக்காத வேஷதாரிகள் தான் பெரும்பாலான ஜமாஅத்தில் நிர்வாகிகளாக உள்ளனர். பொருத்தமானவர்களை நிர்வாகிகளாக நாம் தேர்ந்தெடுக்காத வரை இப் பிரச்சனைக்கு விடிவு இல்லை.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.