Tuesday, September 3, 2013

சிறப்பு காவல் இளைஞர் படை ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வினியோகம்


 

Photo :Thanks .Dinathanthanthi daily news (Mr.Azad)

 
விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய....

ராமநாதபுரத்தில் சிறப்பு காவல் இளைஞர் படை யில் சேர விண்ணப்பங் கள் வினியோகிக்கப்பட் டது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்கும் பணியை மேம்படுத்தும் வகையில் போலீசாருடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை அமைக்கப்படும் என்று முதல் -அமைச்சர் ஜெயலலிதா அறி வித்திருந்தார்.
. இந்த பணிக்கான ஆட்கள் தேர்வு தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள்அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்பட்ட்து.
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் நேற்று காலை முதல் வினியோகிக்கப்பட்டன.
இந்த பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

 முதல்-அமைச்ச ரின் அறிவிப்புப்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு 360 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பத் தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அவரவர் தகு திக்கேற்ப இந்த படையில் சேர்ந்து கொள்ளலாம். இவர் களுக்கு மாதம் ரூ.7 ஆயி ரத்து 500 மதிப்பூதியமாக வழங்கப்படும்.

இதற்கான உடல் தகுதி தேர்வு உள்ளிட்டவை அடுத்த மாதம் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வு நவம்பர்
 
10-ந் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பத்தை அக்டோபர் 1-  ந்தேதிக்குள் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை உறுப்பினர் தேர்வு என குறிப்பிட்டு அந்தந்த மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற் கான விண்ணப்பங்களை இணைய தளத்திலும் பதிவி றக்கம் செய்து கொள்ளலாம்.
 

இவ்வாறு அவர் கூறினார்.  




2 comments:

  1. அரசங்கம் வேலைஇல் சேர்வதற்கு நமது ஊர் இளய தலை முறைனர் முன்வர வேண்டும் , வெளிநாட்டு என்றும் நிரந்தரம் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் ,தல முறை தலைமுறை வெளிநாட்டு செல்வது , நமது சமுதாயத்திற்கு எதிர்காலம் நல்லது அல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. Neenga entha naattula velai pakuringa

      Delete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.