Saturday, September 10, 2011
கீழக்கரை நகராட்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டால் எதிர்த்து போராட்டம்! கீழை ஜமீல் அறிக்கை !
கீழக்கரை நகராட்சி மகளிருக்கு ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் முக்கிய பிரமுகர் கீழக்கரை ஜமீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
இது வரை முறையான அரசு அறிவிப்பு எதுவும் வரவில்லை.தமிழக அரசிடம் அப்படி ஒரு திட்டம் இருக்குமானால் உடனடியாக அதை கைவிட வேண்டும்.மேலும் அதிகமான முஸ்லிம்களை கொண்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்குவது நல்லதல்ல. இது கண்டனத்திற்குரியது. அரசியல் அனுபவம் இல்லாத பெண்களை தலைவர் பொறுப்புக்கு கீழக்கரை போன்ற ஊர்களில் கொண்டு வந்தால் ஊரின் சுகாதாரம் மற்றும் இதர பிரச்னைகள் இன்னும் மோசமாகும். இவர்களின் கு0pடும்பத்தார் கையில் நிர்வாகம் மறைமுக செல்வதுடன் நகராட்சி நிர்வாகம் சீர் கெடும்.
கீழக்கரை நகராட்சி மகளிருக்கு ஒதுக்கப்படும் என்ற அரசு அறிவிப்பு வெளி வருமானால் இதற்கு எதிராக கட்சி, அமைப்புகள் பாகுபாடின்றி கீழக்கரை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
ஆரம்பிச்சுட்டாங்கையா..... இருந்தாலும், நம்ம ஜமீல் சொல்வதிலும் கொஞ்சம் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.
ReplyDeletesabaash........
ReplyDeletehttp://sonagan.blogspot.com/2011/09/blog-post_05.html
ReplyDeleteகீழக்கரை சேர்மன் மகளிருக்கு ஒதுக்கப்படுகிறதா? மருத்துவர் அல் அம்ரா அபுல் ஹசனை பொது வேட்பாளாராக நிறுத்த ஆலோசனையா?
ReplyDelete