கூட்டத்தில் அன்பு நகரை சேர்ந்த தங்கம் ராதாகிருஸ்ணன் பேசுகிறார்
கீழக்கரை தெற்கு தெருவில் கீழக்கரை நகராட்சி தலைவருக்கான பொது வேட்பாளரை தேர்வு செய்ய அனைத்து ஜமாத் மற்றும் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இன்று கூட்டம் நடைபெற்றது .இக்குகூட்டத்தில் வடக்கு தெரு ஜமாத் மற்றும் பழைய குத்பா பள்ளி தெரு ஜமாத் தவிர மற்ற அனைத்து ஜமாத்களும் ,சமுதாய அமைப்புகளும், இந்து சகோதர அமைப்புகளும் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் பணிக்குழு அமைப்பது என முடிவெடுக்கப்பட்டு 8 பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1.அப்துல் மாலிக், (மேலதெரு), தேர்தல் குழு தலைவர்,93600613332.சாஹிப், (கடற்கரை பள்ளிவாசல் தலைவர் ),
3.ஹபீப் முஹம்மது தம்பி, (நடுத்தெரு ஜமாஅத் செயலாளர் )
4.செய்யது இபுராஹீம், ( மின் ஹாஜியார் பள்ளி தலைவர் )9965153276
5.செய்யது அப்துல் மத்தின் ( கிழக்கு தெரு ஜமாஅத் பொருளாளர் )9443684273
6.பவுசு அலியூர் ரஹ்மான் ( தெற்கு தெரு ஜமாஅத் செயலாளர் )9944731692
7.ராதா கிருஷ்ணன் ( அன்பு நகர் )9942383427
8.வேலுச் சாமி ( நாடார் உறவின் முறை )9159766348
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இப்பணிக்குழு நாளை (26-09-11) மாலை 5 மணிக்குள் நகராட்சி தலைவராக போட்டியிட ஆர்வமுள்ளவர்களிடம் மனுக்கள் பெற்று ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யும். தற்போது கூடிய அனைவரும் மீண்டும் தெற்கு தெருவில் நாளை (26-09-11) இஷா தொழுகைக்கு பின் ஒன்று கூடுவார்கள் எனவும் அக்கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு, போட்டியிட விரும்புவோர் பற்றிய தனது ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்யும் பின்னர் கூட்டத்தில் விவாதித்து பொது வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது
நன்றி :- படங்கள் :நெய்னா
கடலோசைக்கு,
ReplyDeleteநாசா(NASA) மற்றும் மாசா(MASA) கலந்து கொண்டவா?
ஒரு கமிட்டி அமைந்தது.முதல் வெற்றி .வாழ்த்துக்கள். இது் செயல்படக்கூடிய ஒன்றுபட்ட ஓர் அமைப்பை மக்கள் எதிர்பார்ப்பதை உணர்த்துகிறது.தலைகள் ஓர் அணியில் வந்திருப்பது நல்ல தலைமை இல்லை என்று விரக்தியால் பிளவுபட்டு பிரிந்து நிற்கும் மக்களுக்கு மனமாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும். அடுத்து வேட்பாளர் தேர்வு எனும் சவாலான நமது முயற்சியை முழுமை அடையச்செய்கிற முக்கியமான கட்டம், இதிலும் ஒற்றுமை மற்றும் பொறுமையை கடைபிடித்து முயற்சியின் முழுப்பயனை அடைவோமாகா. ஆமீன். ஒன்றுபட ஒத்துழைத்த அனைத்து ஜமாத்திற்கும்,முழு முயற்சி எடுத்த தெற்குத்தெரு ஜமாத்திற்கும் பாராட்டுக்கள்.....நன்றிகள்......
ReplyDeleteநெய்னா அவர்களுக்கு, கருத்து பதிவு செய்தமைக்கு நன்றி ! சங்கங்களின் சார்பில் கலந்து கொண்டவர்கள் விபரம் கிடைக்கவில்லை.கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
ReplyDeleteHELLO DEARS
ReplyDeleteENKAY OTRUMAI IRUKIRATHU?
URIN MIKA PERIYA JAMATHANA OJM THERU MATRUM VATAKKU THERU JAMATHUM KALANTHU KOLLA VILAYAE!!!