Monday, September 5, 2011
தலைமை உத்தரவிட்டால் MMK.முகைதீன் இப்ராகிம் வெற்றிக்கு பாடுபடுவோம் !கீழக்கரை தமுமுகவினர் பேட்டி
நமது இணையதளத்தின் சார்பில் கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மமக நகர் தலைவர் ஹுசைனை உள்ளாட்சி தேர்தல் தகவல்களுக்காக சந்தித்தபோது அவர் கூறியதாவது...
தமிழகத்தில் எந்த ஒரு சமுதாய அமைப்பும் செய்யாத சாதனையாக தமுமுக தனி சின்னத்தில் நின்று வெற்றி பெற்று ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ வாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் சமீபத்தில் ஹிந்து பத்திரிக்கை தமிழக்கத்தில் சிறந்த எம்.எல்.ஏக்களில் 6 பேரில் ஒருவராக ஜவாஹிருல்லாவை தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சியான விசயம். சட்டசபையில் கீழக்கரை சம்பந்தமான விசயங்களை கோரிக்கை வைத்து பேசிய முதல் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாதான். ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் கீழக்கரையில் உள்ள குறைகளை களைவதற்கு கீழக்கரையில் உள்ள அரசு அதிகாரிகளை அனைவரையும் அழைத்து பேசினார்,10முறை கீழக்கரைக்கு வந்து சென்றுள்ளார்,மீனாட்சிபுரத்தில் குடிசைகள் எரிந்த போது உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான உதவிகளை தமுமுக மேற்கொண்டது. அதேபோல் கீழக்கரை குப்பை பிரச்சினையை நகராட்சி தலைவர் பசீர் கண்டு கொள்ளவில்லை ,மக்கள் எக்கேடும் கெட்டு போகட்டும் என்ற நோக்கிலேயே செயல் பட்டார் .மேலும் குப்பைகள் கொட்டும் இடத்தில் சுற்றுசுவர் கட்டுவதற்கு தில்லையேந்தல் சார்பாக சுற்று சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்டில் தடையானை பெற்று விட்டதாக பொய்யான தகவலை பசீர் கூறி வந்தார்.நாங்களும் இதுநாள் வரை நம்பி வந்தோம் ஆனால் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏவாக ஆன பின் தான் தற்போது அது உண்மையில்லை என்பது தெரிய வந்தது. மாசு கட்டுப்பாட்டு துறையிடம் கீழக்கரை நகராட்சி சான்றிதழ் பெற வேண்டும் ஆனால் நகராட்சியால் சான்றிதழ் பெற முடியவில்லை தற்போது தமுமுக அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.மேலும் அந்த பிரச்சினை தீரும் வரை தற்காலிகமாக குப்பை கொட்டுவதற்கு இடம் வேண்டும் என்று தமுமுக சார்பாக கீழக்கரை வெல்பேர் அசோசியேசனிடம் கோரிக்கை வைத்தோம் அதை எற்று அவர்கல் குப்பை கொட்டுவதற்கு இடம் தந்துள்ளார்கள் அதற்காக வெல்பேர் அசோசியேசனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது இணையதளத்தின் சார்பில் கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மமக சார்பாக நகர் தலைவர் ஹுசைனை உள்ளாட்சி தேர்தல் தகவல்களுக்காக சந்தித்தபோது அவர் கூறியதாவது...
கேள்வி : அதிமுக சார்பாக எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம் கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக போட்டியிட உள்ளார் என கூறப்படுகிறதே ?
சட்டசபை தேர்தலில் தமுமுக அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து அமோக வெற்றி பெற்றது.இந்த வெற்றி கூட்டணி இந்த தேர்தலிலும் தொடரும்.புரட்சி தலைவி தலைமையில் நல்லாட்சி நடைபெறுகிறது.மேலும் எங்கள் கூட்டணி தலைமையில் முடிவெடுத்து எம்.எம்.கே முகைதீன் இப்ராகிமை வேட்பாளாராக தேர்ந்தெடுத்தால் வீரியமாக பணி செய்து அவரை வெற்றி பெற செய்வோம்.
கேள்வி : தமுமுக சார்பில் கீழக்கரை நகராட்சி தேர்தலில் போட்டியிட்டால் சமுதாய புரவலர் சீனா தானா வேட்பாளராக போட்டியிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது பற்றி ?
கீழக்கரை நகர் தமுமுக சார்பில் ஏற்கெனவே வேறு ஒரு நபரை பரிந்துரைத்துள்ளோம். அவரை தலைமை வேட்பாளராக தேர்வு செய்யும் என நம்பிக்கை உள்ளது அல்லது சீனா தானவை தலைமை முடிவு செய்தால் வெற்றி பெற செய்ய உழைப்போம்.தலைமைக்கு கட்டுபடுவோம்.சீனா தானா அவர்கள் நல்ல வேட்பாளர் என்பதில் மாற்று கருத்து இல்லை.
கேள்வி :கீழக்கரை நலனுக்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?
கீழக்கரை முக்கிய பிரச்சினையான சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
குப்பை நகரம் என பெயரெடுத்துள்ள கீழக்கரையை சுத்தமாக மாற்றுவோம்.குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்போம் .பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வோம்.
கேள்வி :எம்.எம்.கே காசிம் நகர தலைவராக அறிவிக்கப்பட்டார் பின்னர் இல்லை என அறிவிக்கப்பட்டது ஏன் இந்த குழப்பம் ?
இது குறித்து நாங்கள் பதில் அளிக்க முடியாது.கட்சி தலைமையும்,மாவட்ட தலைமையும் பதில் சொல்ல முடியும் மேலும் எம்.எம்.கே காசிம் எங்களுடன் இன்று வரை தொடர்பில் உள்ளார்.
கேள்வி :கீழக்கரை தமுமுக வினர் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறதே?
அநியாயக்கராகளுக்கு ஆதரவு கொடுத்து கமிசன் வாங்கினால் தான் கட்டபஞ்சாயாத்து.இரு நபர்களுக்கு குடுக்கல் ,வாங்கல் பிரச்சினை இருந்து அவர்கள் எங்களிடம் வந்து முறையிட்டால் கடனை சுமூகமான முறையில் வாங்கி கொடுப்போம் இது எப்படி கட்ட பஞ்சாயத்தாகும் இதை சேவையாகத்தான் கருத வேண்டும் .வேறு எங்கேயாவது எங்கள் அமைப்பினர் கட்டபஞ்சாயத்து செய்து காசு வாங்கியதாக நிரூபித்தால் கட்சி தலைமை அவர்களை கட்சியிலுருந்து நீக்கிவிடும் .ஏதெனும் நடைபெற்றால் எங்களிடம் புகார் செய்யுங்கள்.
பேட்டியின் போது தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் ,உஸ்மான் சேட்,ஜெயினுலாப்தீன்,பாக்கர்,முஸ்தகீம்,ஹபீப் ஆகியோர் உடனிருந்தனர்.
நமது குழுமத்தின் சார்பாக ஹமீது யூசுப் மற்றும் சமது ஆகியோர் சந்தித்து உரையாடினர்.
தொகுப்பு : ஹமீது யாசின்
Subscribe to:
Post Comments (Atom)
unmaiyaaaaaaaaaaaaaaaaaaaaaa..........
ReplyDeleteASSALAMU ALAIKKUM
ReplyDeleteSAGOTHARKALE,
MMK MOHIDEEN AVARKALATHU VETRIKU
PAADUPADUVUM ENNRU ORE MUDIVAGA
SOLLUGAL... ENNRA NALLA ENNATHUDAN.
BY KEELAI NESAN