Monday, September 19, 2011

ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி ! மாசா இப்திகார் அறிக்கை


மாசா சமூக நல அமைப்பின் நிறுவனர் இப்திகார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப‌தாவ‌து ,
அல்லாஹ் மிகப்பெரியவன், வரும் உள்ளாட்சி தேர்தலில் நமதூர் நகராட்சி தலைவர் பதவிக்கு ஆண்,பெண் என இருபாலரும் போட்டியிடும் வகையில் அமையும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்து இருக்கும்போது, எதிர்பாராத‌ வகையில் அது மகளிருக்கு ஒதுக்கப்பட்டது.

என்னை நகராட்சி தலைவர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று ஊக்கம் கொடுத்த என் இனிய நண்பர்கள், வெளிநாடு வாழ் நண்பர்கள், MASA,NASA சமுக நல அமைப்புகல்,மனிதநேய மக்கள் கட்சி,தமுமுக, நிர்வாகிகள், உறுப்பின்ர்கள், அனைத்து தெரு நண்பர்கள்,சகோதர,சகோதரிகள், கீழக்கரை டைம்ஸ்,கீழக்கரை.இன் வலைதளங்கள் தினகரன் ,தினமணி போன்ற பத்திரிக்கைகள்,FACE BOOK மற்றும் தொலைபேசியின் மூலம் ஆதரவு தந்த அனைத்து உள்ளங்களுக்கும்,எனது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் தொடர்ந்து எப்போதும் உங்களுடன் நட்புள்ளத்தோடு இணைந்திருப்பேன் என்பதை தாழ்மையுடன் கூறுகிறேன்.

நகராட்சி தலைவராக‌ இருந்து தான் பொது சேவைகள் செய்ய வேண்டும் என்றில்லை என்ற எண்ணத்தை உடையவன் நான் எனவே எனது நல பணிகள் எப்போதும் போல் தொடரும் இன்ஷா அல்லாஹ்.. நாம் அனைவரும் சேர்ந்து நல்ல ஒரு பெண் சேர்மனை தேர்ந்தெடுத்து நமதூர் வளர்ச்சிக்காக பாடுபடுவோம், வளமான சுத்தமான, சுகாதாரமான கீழக்கரையாக மாற அனைவரும் உழைப்போம், துவா செய்வோம்..

3 comments:

  1. பட்டாடை போர்த்தி தம்பி இப்திகார் கொடுக்குற லுக்கு, அப்படியே அச்சு அசலா ஓர் அரசியல்வாதி மாதிரியே இருக்கிறது.

    "மக்களுக்கு நல்லது செய்ய ஒரு பதவி இல்லையே என்ற ஓர் ஆதங்கம்" ஒரு தடையில்லையே!!

    ஒரு செயலை செய்து முடிக்க, "அதனை செய்ய வேண்டும்" என்று எண்ணும் எண்ணமே அதை பாதி செய்து முடித்த மாதிரி என்பார்கள். மீதியையும் செய்து முடிக்க இறைவன் அருள் புரிவானாக!! - வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. பட்டாடை போர்த்தி தம்பி இப்திகார் கொடுக்குற லுக்கு, அப்படியே அச்சு அசலா ஓர் அரசியல்வாதி மாதிரியே இருக்கிறது.

    "மக்களுக்கு நல்லது செய்ய ஒரு பதவி இல்லையே என்ற ஓர் ஆதங்கம்" ஒரு தடையில்லையே!!

    ஒரு செயலை செய்து முடிக்க, "அதனை செய்ய வேண்டும்" என்று எண்ணும் எண்ணமே அதை பாதி செய்து முடித்த மாதிரி என்பார்கள். மீதியையும் செய்து முடிக்க இறைவன் அருள் புரிவானாக!! - வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. அன்புள்ள இஃப்திக்கு,

    ஊர் நலத்திற்காக நான் எழுதிய ஒரு கட்டுரையியை உனக்கெதிராக எழுதிவிட்டேன் என்ற அவதூறு கேட்டு அதிர்ந்தேன்...என் எண்ணம் அதுவல்ல, அதை நீ உணர்வாய் என்று நம்புகிறேன்.

    குடும்ப பிரச்சனையில் நான் தலையிட முடியாது...எந்தப் பக்கம் பார்த்தாலும் என் நட்பு தான் உன்னைச் சுற்றியுள்ளது...யாருக்கும் நான் எதிரி இல்லை...

    இப்போது நீ போட்டியிட முயன்று, கைநழுவிப் போன இந்த தருணம், உன் பொது வாழ்க்கைக்கு படிக்கல்லாக இருக்குமென்று நான் நம்புகிறேன்...

    இன்றிலிருந்து 5 வருடங்கள் எந்தப்பதவியும் இல்லாமல் உன் மக்கள் சேவையை துவங்கு !கண்டிப்பாக அடுத்து ஐந்து வருடத்தில் நீ தலைவனாக வருவதை யாரும் தடுத்து விட முடியாது.என் கட்டுரையின் கருத்தைப் புரிந்து கொண்டு அதில் உள்ளதை ஊருக்காக நீ அரங்கேற்று...உன் கரம் கோர்க்க நாங்கள் காத்திருக்கிறோம்...

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.