Wednesday, September 14, 2011
கீழக்கரை அருகே ஏராளமான மயில்கள் இறந்ததாக வதந்தி !
கீழக்கரையை அடுத்த திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலையில் குவியல்,குவியலாக மயில்கள் இறந்து கிடப்பதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்புல்லாணி அருகே 50க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து குவியல்,குவியலாக இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து வனத்துறையினர் மாரியப்பன் தலைமையில் வனகாப்பாளர் முத்துகருப்பன் ,உட்பட பலர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதியில் மயில்கள் இல்லை என்றும் வான்கோழிகள் என்பது தெரியவந்தது.
சமீபத்தில் முள்ளுவாடி அருகே தலை அறுக்கப்பட்ட நிலையில் மயில் இறந்து கிடந்தது குறிப்பிடதக்கது.
இது குறித்து வனசரகர் மாரியப்பன் கூறுகையில் , ஏதோ ஒரு பண்ணையில் இறந்த வான்கோழிகளை இங்கு வீசி விட்டு சென்றுள்ளனர்.இது குறித்து சம்பந்தபட்டவர்களிடம் விசாரிக்கப்படும். என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.