Friday, September 16, 2011

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி ம‌க‌ளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ப‌து வ‌த‌ந்தி ! த‌முமுக‌ முஜீப்


த‌முமுக‌ முஜீப்(தொப்பி அணிந்திருப்ப‌வ‌ர்) விருப்ப‌ ம‌னு தாக்க‌ல் செய்த‌ போது எடுத்த‌ ப‌ட‌ம்


கீழக்கரை நகராட்சி தேர்தல் குறித்து ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் முஜிபிடம் பேசிய போது...

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி ம‌க‌ளிருக்கு ஒதுக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌தே?

அப்ப‌டி சொல்வெதெல்லாம் வெறும் வ‌த‌ந்தி .நாங்க‌ளும் மேலிட‌த்தை தொட‌ர்பு கொண்டு விசாரித்தோம் அப்ப‌டி ஒரு உத்த‌ர‌வு வ‌ர‌வில்லை என்ப‌தே உண்மை.மேலும் சட்டசபை கூட்டத்தொடர் முடிவில் முதல்வர் ஜெயலலிதா பேசும் போது சென்ற தேர்தலில் எப்படி இருந்ததோ அதுவே தற்போது தொடரும் என்று கூறியுள்ளார்.எனவே மகளிருக்கு ஒதுக்கப்படும் வாய்ப்பு இல்லை என்றார்.

த‌முமுக‌வில் விருப்ப‌ம‌னு தாக்க‌ல் செய்துள்ளது குறித்து ?

தமுமுகவில் கடந்த 10 வருடமாக செயல்பட்டு வருகிறேன் .கீழ‌க்க‌ரை ந‌க‌ர் த‌லைவ‌ர்,துபாயில்துணை த‌லைவ‌ர்,என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன்.ராமநாதபுரம் மாவ‌ட்ட‌ பொருளாள‌ராக‌ உள்ளேன்.

ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் வேட்பாள‌ராக‌ கீழ‌க்க‌ரை ந‌க‌ர் சார்பாக‌ ந‌ல்ல‌ முக‌ம்ம‌து கள‌ஞ்சிய‌த்தை ப‌ரிந்துரைத்துள்ளோம். அவ‌ர் போட்டியிட‌வில்லையேன்றால் நகர் நிர்வாகிகளில் யாராவது ஒருவர் போட்டியிட முயற்சி மேற்கொள்ளலாம் என்று முடிவின் அடிப்படையில் நீங்கள்(முஜீப்) போட்டியிட‌ வேண்டும் என‌ ந‌க‌ர் நிர்வாகிக‌ள் கேட்டு கொண்டதற்கிண‌ங்க‌ நான் விருப்ப‌ம‌னு தாக்க‌ல் செய்துள்ளேன். மேலும் எங்கள் கட்சி(தமுமுக) போட்டியிட்டால் பெரும்பாலான முக்கியஸ்தர்கள் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று கூறியுள்ளார்கள்.மேலும் மேல‌த்தெரு ஹெச்.எஸ் காக்கா சீனா தானா காக்கா, நீயே(முஜீப்) போட்டியிடு என்று சொல்லி என‌க்கு ஆத‌ர‌வு த‌ருவ‌தாக‌ கூறியுள்ளார்கள்.

வேறு தமுமுகவில் யார் யார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள் ?யாருக்கு வாய்ப்பு கொடுக்க‌ப்ப‌டும்?

த‌முமுக‌ சார்பில் போட்டியிட எம்.எம்.கே காசிம், இப்திகார் விருப்ப மனு தாக்க‌ல் செய்துள்ளனர்.த‌முமுக‌ சார்பில் தேர்த‌லில் போட்டியிட‌ விரும்புவ‌ர்க‌ளிட‌ம் சில‌ கேள்விக‌ள் கேட்க‌ப‌ட்டுள்ள‌ன‌. அதில் எதுவுமே புதிய‌தாக‌ தேர்த‌லில் போட்டியிட‌ விரும்புவ‌ர்க‌ளுக்கு பொருந்தாது. உதரணமாக "இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு போராட்ட‌த்தில் க‌ல‌ந்து கொண்டு எத்தனை முறை சிறை சென்றுள்ளீர்கள்?" "அமைப்பு சார்பில் ர‌த்த‌ம் தான‌ம் செய்துள்ளீர்க‌ளா?" என‌ப‌து போன்ற‌ கேள்விக‌ள் கேட்க‌பட்டுள்ளது .அக்கேள்விகளுக்கு பொருத்தமாக நான் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளேன்.அதிகளவில் ரத்ததானம் செய்து பல்லாண்டு காலமாக கட்சி பணியாற்றி வருகிறேன் எனவே இதில் உள்ள‌ அனைத்து கேள்விக‌ளுமே எங்க‌ளுக்கே(நீண்ட காலமாக தமுமுகவில் பணியாற்றுபவர்கள்) பொருந்தும்.எனவே கீழக்கரை தமுமுக சார்பில் நகராட்சி தலைவராக போட்டியிடக்கூடிய வாய்ப்பு எனக்கே அதிகம் மேலும் என‌க்கு போட்டியிட முடியவில்லை என்ற‌ சூழ்நிலை வ‌ரும்போது ச‌கோத‌ர‌ர் இப்திகாருக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.இப்திகாருக்கு ம‌க்க‌ளிடையே செல்வாக்கு உள்ள‌து.ப‌ல் வேறு ச‌மூக‌ ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டு வ‌ருப‌வ‌ர்.

நீங்கள் நகராட்சி தலைவரானால் என்னென்ன நல திட்டங்களை செயல்படுத்துவீர்கள் ?

அல்லாஹ் மிக‌ பெரியவன், இறைவனின் நாட்ட‌மிருந்தால் குப்பை ந‌க‌ரம் என்ற பெயரெடுத்து விட்ட கீழக்கரையை மாற்றி மற்ற நகராட்சிகளுக்கு முன் மாதிரியாக மாற்றுவேன்.பெயரை சொல்ல விரும்பவில்லை கீழக்கரை சேர்மேன் பகல் 12 மணிக்கு வந்து பைலில் கையெழுத்து போட்டு சென்று விடுகிறார்.ஏழை எளிய மக்கள் நகராட்சி தலைவரை சந்திக்க முடியாத சூழ்நிலை தற்போது உள்ளது நான் வெற்றி பெற்று வந்தால் அதிகாலை சுப்ஹ் தொழுது விட்டு நேரடியாக நகராட்சிக்கு வந்து விடுவேன்.காலையில் சுகாதார மேற்பார்வையாளருடன் இணைந்து துப்புரவு தொழிலாளர்கள் எங்கெங்கு செல்ல வேண்டும் என்பதை நானே நேரடியாக கண்காணிப்பேன். மேலும் கழிவு நீர் பம்பிங் நிலையங்கள் மூன்றுதான் உள்ளது அது போதாது 6 பம்பிங் நிலையங்களை அமைப்பேன்.அரசு ம‌ருத்துவ‌மைக்கு பெண் ம‌ருத்துவ‌ர் நிய‌மிக்க‌ ஏற்பாடு செய்வேன்,அதிக‌மான‌ துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ளை நிய‌மிப்பேன்.தின‌மும் ஊர் முழுவ‌தும் சுத்த‌ம் செய்ய‌ ஏற்பாடு செய்வேன்
மேலும் குப்பையை கொட்டுவதற்கு வெல்பேர் அசோசியேசன் கீழக்கரை நகராட்சிக்கு 12 ஏக்க‌ர் வழங்கியது.கோர்ட் தடையாணை உள்ளது என்ற தவறான தகவலை கூறி அதை ப‌ய‌ன் ப‌டுத்துவ‌த‌ற்கு த‌வ‌றிவிட்ட‌து . த‌முமுக‌ ந‌க‌ராட்சியை கைப்ப‌ற்றினால் சுற்றுசுவர் எழுப்பி அங்கேயே குப்பையை கொட்டி உரம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வோம் மேலும் ஆளுங்கட்சியுட‌ன் நாங்கள் கூட்டணியாக இருப்பதால் அதிக‌ நிதியை பெற்று த‌ர‌ முடியும். அதுமட்டுமல்ல தற்போது‌ ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ த‌லையிட்டு கீழ‌க்க‌ரை சுகாதார‌ பிர‌ச்சினையில் தீர்க்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்து வ‌ருகிறார்.இது வ‌ரை எந்த‌ எம்.எல்.ஏவும் ஸ்பாட்டுக்கு வ‌ந்த‌தில்லை .

குப்பை பிர‌ச்சினை தாண்டி வேறு ப‌ல‌ பிர‌ச்சினைகளும் உள்ள‌ன‌ குடிநீர் தட்டுப்பாடு,க‌ழிவு நீர் பிரச்சினை ,உள்ளூரில் வேலைவாய்ப்பை அதிக‌ரிப்ப‌து இவ‌ற்றுக்கு ஏதாவ‌து உங்க‌ள் க‌ட்சி சார்பில் திட்ட‌ம் உள்ள‌தா?

குடிநீர் பிர‌ச்சினை உள்ள‌து உண்மைதான் காவிரி குடிநீரை முறையாக‌ செய‌ல்ப‌டுத்துவோம்.தண்ணீர் சப்ளைக்காக ம‌னித‌ நேய‌ ம‌க்க‌ள் க‌ட்சி சார்பில் 2 த‌ண்ணீர் டேங்க‌ர் வ‌ழ‌ங்குவோம்.முக‌ம்ம‌து காசிம் அப்பா தர்கா அருகில் அர‌சு இட‌ம் உள்ள‌து அங்கு மிக‌ப்பெரிய‌ த‌ண்ணீர் சேமிப்பு நிலையம் அமைத்து பிர‌ச்சினையை தீர்ப்போம்.ம‌ற்ற‌ பிர‌ச்சினையையும் தீர்ப்போம். என்றார்


ந‌ம‌து வ‌லைத‌ள‌ம் சார்பாக சகோதரர் ச‌ம‌து இச்ச‌ந்திப்பை மேற்கொண்டார்

தொகுப்பு : ஹ‌மீது யாசின்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.