Monday, September 12, 2011
கீழக்கரை உள்ளாட்சித் தேர்தல் மங்காத்தா...! கட்டுரையாளர் :- கீழை ராஸா
கட்டுரையாளர் :- கீழை ராஸா
“இந்த முறை பொது வேட்பாளர் யாருப்பா..?”
“அட ஜும்மாவே பொதுவா இல்லைன்னு ஆச்சி, இதுலே என்ன இனி பொதுவேட்பாளர்..?”
”சின்னப்பசங்க கிட்டே கொடுங்கப்பா...அவங்க எதாவது பண்ணுவாங்க..”
”இது என்னப்பா சின்னப்புள்ளே தனமா இருக்கு..? வெறும் நட்பு வட்டாரங்களை வச்சி ஜெயிச்சிட முடியுமா என்ன?”
”அட பணமுள்ள பசங்களெல்லாம் இப்ப அருணாச்சலம் ரஜினி ஸ்டைலுலே தேர்தலிலே இறங்கி செலவழிக்கப் போறாங்களாம்...”
”துடிப்பான இளைஞர்களே கிடையாதா..?”
”இருக்காங்கலே..! ஆனா நாம என்ன பண்ணுகிறோம் என்பதை விட அடுத்தவங்களை ஒண்ணும் பண்ணவிடக்கூடாது என்பதில் தான் அவங்க துடிப்பை காட்டுறாங்க...”
”அனுபவம் முக்கியமுங்க...”
”என்னப்பா பெரிய அனுபவம்? நகராட்சி ஆபிசு கிட்டே வருகிற பாமரன் கிட்டே கூட கை நீட்டி காசுவாங்கிக் கிட்டு, ஊரை குப்பைக் காடா மாத்துனது தான் அனுபவமா..?”
“ அட உங்களுக்கெல்லாம் விசயமே தெரியாதா? நம்ம ஊரு நகராட்சித் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிட்டாங்களாமே..? உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு..!”
இப்படி பரவலான பேச்சுக்களுடன், கீழக்கரை தேர்தல் திருவிழா ஆரம்பித்துள்ளது.
வழக்கம் போல வெறும் பார்வையாளனாகவே இருந்து, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை...என்று தேர்தல் புறக்கணிப்பை ஃபேசனாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும், கீழக்கரைவாசிகளான உங்களுடன், சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தின் தூண்டுகோள் தான் இந்த கட்டுரைக்குக் காரணம்...
தமிழகத்தின் ஆட்சி மாறுதலுக்கு எப்படி குடும்ப அரசியல் ஒரு பெரிய காரணமாக அமைந்த்தோ, அதைப்போல கீழக்கரையின் ஆட்சி மாற்றத்திற்கு குப்பை ஒரு பெரும் பங்காற்ற போகிறது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆனால் அதற்காக குப்பை மட்டுமே கீழக்கரையின் பிரச்சனையா? என்றால் கண்டிப்பாக இல்லை..! முன்னிறுத்தப் பட்டிருக்கும் குப்பைக்குப் பின்னால் பல விசயங்கள் நமக்குத் தெரியாமலேயே போய் விட்டன.
அதற்காக கீழக்கரைக்கு விமான நிலையத்தைக் கொண்டு வருவோம்...அப்பா தீவை சுற்றுலா தளமாக்குவோம்.. என்ற ஒரு நகராட்சித் தலைவரின் சக்திக்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை எதிபார்க்க வேண்டியதில்லை. ஒரு நகராட்சி எல்லைக்குட்பட்டு காலகாலமாக செய்ய இயலாத, செய்ய இயன்ற சில விசயங்களை இங்கே அலசுவோம்...
தமிழகத்தின் மூன்றாம் நிலை நகராட்சியிலேயே அதிகமான வரிகட்டும் ஒரு நகராட்சியால் ஒரு சிறிய ஊரின் குடிநீர் பிரச்சனை, சுகாதாரப் பிரச்சனை, போன்ற அன்றாடப் பிரச்சனைகளைக் கூட தீர்க்க இயலாதிருப்பது ஆச்சரியமே..!
குடிநீர் பிரச்சனைக்காக எத்தனையோ வருடங்கள் நமதூர் அல்லாடி வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான்...கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை தமிழகமே வியந்து பார்க்கும் வண்ணம், 20 வருடங்களுக்கு முன்னரே பிரமாண்டமான முறையில், அறிமுகம் செய்யப் பட்டு, இன்று வரை அது செயல்பாடற்ற திட்டமாகவே இருந்து வருவதை இனி வரும் நகராட்சியாவது சரி செய்துவிடுமா..?
பாதாளச் சாக்கடைத் திட்டம், அதல பாதாளத்தில் தள்ளப் பட்டதிற்கு யார் காரணம்..? உலக குப்பைகளை ஒன்று சேர வாங்கி வந்து அதை ஒரே நாளில் சுத்தம் செய்யுமளவு, பண பலம் கொண்ட நமதூரின் உள்ளூர் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லை என்பதை விட வேடிக்கை வேறென்னவாக இருக்க இயலும்..?
அரசின் எண்ணற்ற திட்டங்கள், சலுகைகள், உதவித்தொகைகள், கடனுதவிகள் இப்படி எதையாவது நம்மூர் மக்கள் இதுவரை அனுபவித்ததுண்டா? அதைப் பற்றி ஒன்றுமறியாத இந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இந்த நகராட்சி செய்ததென்ன? செய்யப் போவதென்ன?
காலமெல்லாம் தம் குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் மெழுகுதிரிகளாக வாடி, வாழ வேண்டுமென்று நாடு திரும்பும் ஆயிரக்கணக்கானோருக்கு பயனளிக்கும் வகையில் உள்ள NRI சம்பந்தமான அரசு திட்டங்கள் பற்றி யாருக்காவது தெரியுமா? வெளிநாட்டு வாசிகள் என்றதும் அவரிடம் சிறப்பு ”பணப்பறிப்பு” மட்டும் தானே, அரசு பெயரால் நம்மால் செய்ய இயலும்?
சிறுதொழில் கடனுதவிகள், சிறு தொழில் செய்வதற்கான வழிமுறைகள், இப்படியான பல வாழ்வியல் மேம்பாட்டு விசங்கள் பற்றி எம்மக்களுக்கு என்ன வென்றே தெரியாமல் இருப்பதைப் பற்றி நமக்கென்ன கவலை..?
வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது...அதன் மதிப்புத் தெரியாமல் தண்ணீராக செலவழிக்கும் உள்ளூர் சொந்தங்கள்...இப்படி எந்த அரசு சம்பந்தப்பட்ட விசயமாக இருந்தாலும் பணத்தால் மட்டுமே சாதிக்க இயலுமென்ற மனப்போக்கிற்கு இந்த மக்களை ஆட்சியாளர்கள் மாற்றியதைத்தவிர வேறென்ன சாதனைகளை செய்து விட்டார்கள்..?
அவர்களைச் சொல்லி குற்றமில்லை, நமதூரின் நகராட்சித் தலைவரை நாம் தேர்வு செய்வதில்லையே..?பணம் தானே நிர்ணயிக்கிறது...? அரசியலில் இருந்து 5 வருடங்கள் சம்பாதிக்க வேண்டுமென்ற நோக்கில் ஒரு பெரும் தொகையை கொடுத்து வார்டு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தலைமைப் பதவிக்கு வருபவர்களின் அடுத்த குறி போட்ட தொகையை லாபத்துடன் எடுக்க வேண்டுமென்பதைத் தவிர வேறென்னவாக இருக்கும்..? ஒரு தொழில் செய்ய வேண்டுமென்று ஒரு பெரும் தொகையை முதலீடு செய்பவர்கள் லாபம் சம்பாதிக்க நினைப்பது தப்பில்லையே...?
இதைப்பற்றி நமக்கென்ன கவலை ? இதனால் நாம் பாதிக்கப் படுவதில்லையே? என்ற சுயநலப் போக்குடன் இருக்கும் நம் மக்கள் அவர்களுக்கென்று ஒரு பிரச்சனைவரும் போது அந்தப்பாதிப்பை உணர்ந்து கொதித்தெழுந்தாலும், கோலி சோடாவின் காட்டத்தைப் போல மறு நொடியே வலுவிழந்து, தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறார்கள்...!
இதற்குத் தீர்வே கிடையாதா? ஊரில் நல்லவர்களே இல்லையா..? என்றால் இருக்கிறார்கள்... எத்தனையோ சேவை மனப்பான்மையுள்ளோர் இனம் காணப்படாமலேயே இருக்கிறார்கள்...பணபலத்திற்கு முன்னால் தங்கள் தன்மானத்தை இழக்க வேண்டி வந்து விடுமோ என்ற பயத்தில் நல்ல உள்ளங்கள் முன் வரத் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்...
ஊரின் நலனுக்காக வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாவண்ணம் பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் எத்தனையோ புரவலர்கள், நமக்கேன் வீண் வம்பு என்று முகம் காட்ட மறுப்பவர்கள் இருக்கிறார்கள், இன்னும் சில நல்லவர்கள் அரசியல் கட்சிகள். அமைப்புகள், தெருக்கள், சாதி, மதம் என்ற பலதரப்பட்ட வட்டத்திற்குள் சிக்கி. நீ பெரியவா..? நான் பெரியவனா? என்ற போட்டி மனப்பான்மைக்கு உட்பட்டு ஈகோவில் சிக்கி எதையும் செய்ய இயலாவண்ணம் உறைந்து போயிருக்கிறார்கள்.
இந்த நிலைமாற என்ன வழி...?
ஒற்றுமை ! நபிமொழியின் வார்த்தைகளை பற்றிப் பிடிக்குவண்ணம் ”ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றி பிடிப்பதே” இவை அனைத்திற்கும் தீர்வாகும்.
காயல்பட்டினம் போன்ற ஊர்களில் செயல்படும் ஐக்கிய ஜமாத் அமைப்பை போன்று நாமும் ஊரின் முக்கியஸ்தர்கள், ஜமாத் பெரியவர்கள், அனைத்து மதத் தலைவர்களும் ஒன்று கூடி ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்...அவர்களின் பரிந்துரையின் அடிபடையில் அனைத்து வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும்...இது எந்த வகையில் சாத்தியம் என்போர் இந்த் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்....
http://www.kayaltoday.com/show.aspx?tNewsId=1802
மாஸா அல்லாஹ் நம் சகோதரர்களின் செயல்பாடுகள் உண்மையில் பாராட்டத்தக்கது...நம் சகோதரர்கள் இதை சாத்தியப் படுத்தும் போது நம்மால் ஏன் இதை நடைமுறைப்படுத்த முடியாது....? இது என் எண்ணம் மட்டுமல்ல... ஊர் நலத்தில் அக்கரை கொண்ட எத்தனையோ ஜீவன்களின் பேராசை...! நான் உணர்வுகளின் மொழிபெயர்ப்பாளானாகவே இங்கே வடித்துள்ளேன்...
இதெல்லாம் நடக்கக் கூடியதா? என்ற எதிர்மறை கேள்விகளை களைந்து, ஏன் நடக்கக் கூடாதென்ற எண்ணத்தை முன்னிருத்துங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் மாற்றம் வரும்....!
அன்புடன் கீழைராஸா துபாயிலிருந்து....
Subscribe to:
Post Comments (Atom)
தம்பி ராஜாகான்! மிக முக்கியமான - ஓர் ஆழமான விஷயத்தை உங்களுக்கே உரித்தான நகைச்சுவை நடையில் நன்றாக எழுதியுள்ளீர்கள் - பாராட்டுக்கள்!!
ReplyDeleteஇதற்கு நகைச் சுவையாகவே கருத்து தெரிவிப்பதென்றால், ஒரு படத்தில் வடிவேலு சொல்லுவாரே "எல்லோரும் நல்லா பாத்துக்க.... நானும் ஜெயிலுக்கு போறேன்..... நானும் அரசியல்வாதிதான்..." என்று!! அந்த மாதிரிதான் இருக்கிறது.
"எல்லோரும் நல்லா பாத்துக்க.... நானும் தலைவர் பதவிக்கு நிக்கிறேன்... நானும் தலைவர்தான்..." என்று!! இதுல வருத்தமான ஒரு விஷயம் என்னன்னா... ஊருக்கு உண்மையிலேயே நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தனது பண பலத்தைக் காட்ட, அல்லது, தனது செல்வாக்கைக் காட்ட ஆளாளுக்கு களத்தில் இறங்கி நிற்கிறார்கள்.
சரி... இவங்கதான் இப்படி. ஓட்டு போடப் போகிற பாசக்கார புள்ளைகளின் ஆசை - எதிர்பார்ப்பு என்னன்னா.... ஊருக்கு தலைவராக வர: ஜனாப். BSA ரஹ்மான் அவர்களைப் போன்று பண பலத்திலும், ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று மனமும் இருக்க வேண்டுமாம்!!! ஜனாப். MMK முஹம்மது இப்ராகிம் அவர்களைப் போன்று எதற்கும் துணிந்து நிற்கும் அஞ்சா நெஞ்சனாக இருக்க வேண்டுமாம்!!! முக்கியமாக, ஆண்டவனுக்கு பயந்து ஐந்து பைசாகூட ஊழல் செய்யாத சொக்கத் தங்கமாக இருக்க வேண்டுமாம்!!!
எனக்கு தெரிந்தவரையில், இன்றுவரையில் அப்படி யாருமே கிடையாது. இனி ஒருவன்தான் பிறந்து வர வேண்டும்.
எது எப்படியோ!? யார் வென்று வந்தாலும், ஊருக்கு நல்லது நடந்தால் மட்டுமே போதுமானது.
//எது எப்படியோ!? யார் வென்று வந்தாலும், ஊருக்கு நல்லது நடந்தால் மட்டுமே போதுமானது.//
ReplyDeleteஇது தான் காக்கா, ஊரின் மீது அக்கரை கொண்ட அனைத்து நல்லுள்ளங்களின் எண்ணமும்..இன்ஷா அல்லாஹ் எல்லாம் வல்லோன் நல்வழி காட்டுவானென்று நம்புவோம்....
நல்ல ஆக்கம், அக்கரை, ஏதாவது செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணம் மேலோங்கிருக்கு உங்க பதிவில், இதே நிலமைதான் எங்க ஊரிலும் (அதிரைப்பட்டினம்), நிச்சயம் மாற்றம் வரும் வரவேண்டும்... இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteஅருமையான பதிவு, வாழ்த்துக்கள்...
ReplyDelete// காலமெல்லாம் தம் குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் மெழுகுதிரிகளாக வாடி, வாழ வேண்டுமென்று நாடு திரும்பும் ஆயிரக்கணக்கானோருக்கு பயனளிக்கும் வகையில் உள்ள NRI சம்பந்தமான அரசு திட்டங்கள் பற்றி யாருக்காவது தெரியுமா? //
அருமையான தகவல்
Nallaa narukkunnu solliyirukkinga kaka.namma orukku ottrumai romba mukkiyam.
ReplyDeleteRubin
very nice article
ReplyDeletewell raasa kaka . ipdi oru article yaarum eluthale. intha murai ennga aatichi thaan kilakraile(pengal maatm poti)
articleai publish panna hameed yasin kakaukkum times teamukkum thanks.
habi
இது போன்ற நலல கட்டுரையை தந்து இருப்பதினால், கீழக்கரை டைம்சின் நடுநிலை நன்றாக தெரிகிறது...கட்டுரையாளர் ராசாவுக்கும், கீழக்கரை டைம்ஸ் நிர்வனர்கலுக்கும் நல் வாழ்த்துக்கள்...கட்டுரையில் பல் விசயக்ன்களை நன்றாக விளக்கப்பட்டுள்லது என்றாலும் ..இந்த பூனைக்கு மனி கட்டுவது யார்...? -முகம்மது காசிம்
ReplyDeleteTHAMBI KEELAI RASA,UNGAL KATTURAIKKU PAARAATTUKKAL . ATHE NERATHIL SILAVATRAI SOLLA AASAI
ReplyDelete”அட பணமுள்ள பசங்களெல்லாம் இப்ப அருணாச்சலம் ரஜினி ஸ்டைலுலே தேர்தலிலே இறங்கி செலவழிக்கப் போறாங்களாம்...”
NAM SAMOOGATHAI PATRI EZUTUMBOTHU ETHAI ELUTHINAALUM MUDINNTHAVARAI NABI MOZIGALAITHAAN UTHARANAM KAATTA VENDUM.ITHU PONRU CINEMA UTARANAGLAI EZUTHUVATHAI THAVIRTHU KOLLUNGAL.ATHU KATTURAIYIN KANNIYATHAI KURAITHU VIDUM.
//வழக்கம் போல வெறும் பார்வையாளனாகவே இருந்து, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை// ITHUVUM NAMAKKU PORUTHTHAMILLATHA UTHARANAM.ITHAIYUM THAVIRKALAM
//காயல்பட்டினம் போன்ற ஊர்களில் செயல்படும் ஐக்கிய ஜமாத் அமைப்பை போன்று நாமும் ஊரின் முக்கியஸ்தர்கள், ஜமாத் பெரியவர்கள், அனைத்து மதத் தலைவர்களும் ஒன்று கூடி ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்...அவர்களின் பரிந்துரையின் அடிபடையில் அனைத்து வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும்...இது எந்த வகையில் சாத்தியம் என்போர் இந்த் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்....//
UNGALUKKU THERIYUMA ,NAMATHU UURILUM ITHU PONRU ANAITHTU JAMAATH ENRU IRUKKU.AANAAL SEYALPADU ILLA.ORU SILARIN KARUTHUKKALUKKU MATTUM MATHIPPU KODUPATHINAL VETRIKARAMAGA SEYALPADAVILLAI.SUTHADIRAMAAGA SEYALPADAM VENDUM ELLA JAMATHUKKUM MATHIPPU KODUKKA VENDUM APPADI SEYTHAAL OTTRUMAI ERPADUM. KAYALARGAL NAMATHURAI PAARTHUTHAAN KATRU KONDAARGAL AVARKAL SEYAL PADUTHINAARGAL NAAM SEYALPADUTHAVILLAI.
KATURAI MIDUVIL SONNATHU POL OTRUMAIYAGA IRINTHAL ELLAM VALLA ALLAH NAMMAI VETRI PERA SIYVAAN
INIYA SALATHUDAN NIRAIVU SEIGIREN .
MANSOOR
ABUDHABI
MANSOORAHMED001@YAHOO.COM
மன்சூர் காக்கா அவர்களுக்கு, தங்கள் கருத்திற்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி...
ReplyDeleteநான் முதலில் இந்தக் கட்டுரையை அனுப்பியதும் இதைப்பற்றி யாசின் என்னிடம் கூறினார்.நான் தான் அதை போடுமாறு வலியுறுத்தினேன்..காரணம், நபி மொழிகளும், மறை மொழிகளையும் விட சிறந்ததொன்று வேறில்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் எல்லா விசயத்திலும் அதை முன்னிருந்த்தும் போது எல்லாத் தரப்பினர்களாலையும் அதை புரிந்து கொள்ல முடிவதில்லை...முயல்வதில்லை...அது போல் எழுதும் போது வந்துட்டாரையா ஆலிம்சா அட்வைஸ் பண்ண என்று, ஆரம்பிக்கும் போதே நிறுத்தி விடுபவர்கள் பலர் இருக்கிறார்கள்..இது எதார்த்தமான உண்மை.விவாதத்திற்கு வேண்டுமானால் அது இல்லை என்று வாதிடலாம்.
இதை எல்லோரும் படிக்க வேண்டுமெனும் போது சில இது போன்ற விசயங்களை சேர்க்க வேண்டிதான் உள்ளது...இதில் முழுக்கவனத்தையும் செலுத்தி தேவையானதை விட்டு விட வேண்டியதில்லை.இன்றைய இளைஞர்கள் தெளிவாக உள்ளார்கள்...
இது தொடர்பாக இந்த விவாதத்தை தயவு செய்து இனி யாரும் தொடரவேண்டாம்...
நமதூரின் அனைத்து ஜமாத் கமிட்டி பற்றி எனக்கு தெரியும்...ஆனால் அது அனைத்து நேரங்களிலும் செயல் பட வேண்டுமென்பதே...நம் விருப்பம் இன்ஷா அல்லாஹ் அது செயல்பட நம்மால் ஆன செயல்பாடுகளை செய்வோம்...
இதை படிக்கும் நல்ல நண்பர்கள் மற்றும் சகோதரர்களுக்கு,
ReplyDeleteஎல்லாதரப்பிலிருந்தும் இந்த கட்டுரைக்கு கிடைத்திருக்கும் வரவேற்பிற்கு மிக்க நன்றி...
இந்தக் கட்டுரையின் நோக்கம் போட்டியில் இருக்கும் யாரையும் தனிப்பட்ட முறையில் எதிர்க்க வேண்டுமென்பதோ, அல்லது அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் இல்லை, என்பதோ கண்டிப்பாக இல்லை...
போட்டியில் இருக்கும் அனைவரும் ஊரின் நிலை உணர்ந்து, தங்கள் பொறுப்புணர்ந்து, தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே என் எண்ணம், அதுவே இந்த கட்டுரையின் நோக்கமும்...
இது தொடர்பாக நான் ஆரம்பித்து வைத்துள்ளேன்..விட்டுப்போன எத்தனையோ விசயங்களை நீங்கள் தொடரலாம்..அது கண்டிப்பாக கீழக்கரையின் எதிர்காலத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்...
ஊடகம் மிகப்பெரிய சக்தி என்பதை நீங்கள் அறிவீர்கள், அதை பயனுள்ள, நல்வழிக்கு பயன்படுத்த தங்கள் அனைவரின் ஒற்றுமையான ஒத்துழைப்பை நாடுகிறேன்...ஒரு கை ஒரு போதும் ஓசை எழுப்பாது, தனிமரம் தோப்பாகாது...இவன் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்பதை விடுத்து, எல்லோரும் நல்வழியில் இணைய இன்ஷா அல்லாஹ் இதைப் படிக்கும் அனைவரும் உங்கள் மேலான கருத்துக்களைப் பகிருங்கள்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteநபீஸ் என்ற பெயரில் எழுதியிருக்கும், நண்பருக்கு,
ReplyDeleteஇந்தக் கட்டுரையின் நோக்கம் போட்டியில் இருக்கும் யாரையும் தனிப்பட்ட முறையில் எதிர்க்க வேண்டுமென்பதோ, அல்லது அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் இல்லை, என்பதோ கண்டிப்பாக இல்லை...
போட்டியில் இருக்கும் அனைவரும் ஊரின் நிலை உணர்ந்து, தங்கள் பொறுப்புணர்ந்து, தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே என் எண்ணம், அதுவே இந்த கட்டுரையின் நோக்கமும்...
நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்...நான் யார் குடும்ப பிரச்சனையையோ, நட்பு பிரச்சனையையோ பற்றியோ எழுதவில்லை...இப்தியும் எனக்கு நண்பன் தான்...நெய்னாவும் எனக்கு நண்பன் தான்...
”உன்னைப் பத்தியும் தெரியும்” என்று நீங்கள் என்னைப்பற்றி எழுதிய உங்கள் தோரணையிலிருந்தே, என்னைப் பற்றி நீங்கள் ஒன்றும் தெரியாதவர் என்பது தெரிகிறது...:-)
இது போன்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல தேவை இல்லை என்றாலும்...பொதுவாழ்வுன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜமப்பா...:-)
தயவு செய்து இந்த் கட்டுரையின் நோக்கத்தை புரிந்து கொள்ளவும்.நன்றி.
நபீஸ் என்ற பெயரில் வந்த நஜீஸை நீ கையாண்ட விதம் உனது முதிர்ச்சியை காட்டுகிறது.உனது கட்டுரை காலத்தின் தேவையறிந்து எழுதப்பட்டுள்ளது.வெளியிட்ட கீழக்கரை டைம்ஸ்க்கு நன்றி.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteராஜாகானின் நல்ல நோக்கமிக்க ஒரு கட்டுரை இங்கு வீணாக திசை திருப்பப்படுகிறது.
ReplyDeleteசொந்தப் பிரச்னைகள் என்பது வேறு - நட்பு என்பது வேறு - ஊரின் பொதுப் பிரச்னை என்பது வேறு!! இவற்றிற்கான வித்தியாசங்களை தெளிவாக புரிந்து கொள்ளாமல், வீணான சொந்த விருப்பு - வெறுப்புகளை காட்ட வேண்டாம்.
நாம் எல்லோருமே ஒருவிதத்தில் சொந்தங்களே!! நண்பர்களே!!
தம்பி ராஜாகான், எங்கள் எல்லோருக்கும் "உன்னைப் பத்தியும் தெரியும்!!" விதண்டாவாத கேள்விகளுக்கு பதில் கொடுத்து உனது அறிவையும், பொன்னான நேரத்தையும், வீணாக்க வேண்டாம்.
பின்குறிப்பு: கீழக்கரை டைம்ஸை அப்பப்ப "லுக்கு" விட்டுகிட்டே இருக்கணும் போல தெரிகிறதே!! ஒரு நாளைக்கு பார்க்க தவறினால்கூட, இந்த செய்தி தளத்தை, ரண களமாக ஆக்கி விடுவார்கள் போல தெரிகிறதே!!
assalamu alikum ena tharumai thambi markalay kuppai prachnai thera o-ray vali undu orukul edam illai enpathu 100% unmai nilai seethana veedu karanamaka uril oru sathura adi idam kuda veenaka illai indraya nilamai koal (75 sft) Rs.1.00 to1.25 lakhs. silar soluvadhu pola sila panakararkal ondru koodi idam vanka ninaithalum kudi irrukkum paguthi ill than vanka mudium kudi irrukkum paguthi il kupaikalai poda mudiyathu ANTHA ORAY VALI KILAKARAI NAGARATCHI UTAN THILLAIYENDAL PANCHYAT IM INAITHU MUTHAL NILAI NAGARATCHI YAKA MATRINAL ME-KU-THIYANA KUDI IRUPPU ILLATHA NILANGAL KITAIKA ATHIKA VAIPPU UNDU
ReplyDeleteSO MAKKALITAM NANKU ARIMUGAM ANA ARASIYAL PIN BALAM ULLA ORU NALLA VETPALAR THEVAI NAN 63 VAYATHU MUTHTHA KUDI MAGAN VALIPARKALITAM APPARITHA MANA VEYGAM UNDU THODARANTHU SEYYAL PADA MATTARKAL ATHARKAGA VETKA PATAUM MATTARKAL ANUPAVA UNMAI ORU THAMBI KEYTKIRAR POONAI IKKU YAAR MANI KATTU VATHU ENDRU URR MAKKALAKIYA NEEUM NANUM THAN NAMATHBU PRACHCHANAIKU VELI URR MAKKALA VARUVARGAL?s i n t h i-p e e r s e y a l p a d u v e e r ALMIGHTY ALLAH IS SUFFICENT
சமூகப்பார்வையுடன் ,பயனுள்ள கருத்துக்களை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி
ReplyDeleteஅன்பு சகோதரர் ராஜாகான் அருமையான சிந்தனையாளர் அவர் தொடர்ந்து இதுப்போல் நல்ல சிந்தனைகளை கட்டுரைகளாக படைப்பதற்கு தொடரட்டும் உங்கள் பாராட்டுக்கள்.உங்களின் பாராட்டு வரிகள் அவரை போல் நமது ஊரில் உள்ள ஏராளமான சிந்தனையாளர்கள் நல்ல பல கருத்துக்கள் படைக்க முன் வருவதற்கு ஊக்கமளிக்கும்.
அன்பு வேண்டுகோள்,தயவு செய்து தனிபட்ட விருப்பு ,வெறுப்புகளை இதில் பதிவு செய்யாதீர்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteஇரண்டு கருத்துக்களையும் நீக்கிய கீழக்கரை டைம்ஸுக்கு நன்றி.
ReplyDeleteஆஹா பிரமாதமான கட்டுரை..... ஒற்றுமையைப் பற்றி வாய் கிழிய பேசும் நாம் முதலில் தன் தெரு, தன் ஜமாஅத், தன் இயக்கம், என்ற குறுகிய மனப்பான்மையில் இருந்து வெளியே வர வேண்டும். அனைத்து ஜமாததும் கூடி பொது வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் தவிர நம் ஊருக்கு விடிவுகாலம் இல்லை , ஒற்றுமை இல்லாமல் தேர்ந்தெடுத்த சென்ற நகராட்சி தலைவர்/தலைவிகள் எவ்வளவு சொத்து சேர்த்தார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை, சென்ற வாரம் காயல் பட்டினம் சென்றிருந்தேன் ...ஆஹா என்ன அருமையான் சுத்தமான தெருக்கள்.தம்பி கீழை ராஸா சொன்னது போல் காயல்வாசிகளிடம் இருந்து நிறைய கற்க வேண்டியுள்ளது. .
ReplyDeleteGood article..we need to do something...
ReplyDeleteSahih Buhari Volume :7 Book :93 No.7151. ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.நாங்கள் மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது (பஸ்ராவின் ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் உள்ளே வந்தார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: 'முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரனால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ReplyDeleteRAJA KAKA AVARKALUKKU,,,,,,,,,,,,,
ReplyDelete" நபி மொழிகளும், மறை
மொழிகளையும் விட சிறந்ததொன்று வேறில்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் எல்லா விசயத்திலும் அதை முன்னிருந்த்தும் போது எல்லாத் தரப்பினர்களாலையும் அதை புரிந்து கொள்ல முடிவதில்லை...முயல்வதில்லை... ( ALLAH PODHUMANAVAN ) .... THAN NADIYORUKKU AVAN NALVALI KATTUVAN,, SO INIVARUM KATTURAIKALIL NABIMOZHI YAI NEENGAL SERTHU EALUTHALAME?????? அது போல் எழுதும் போது வந்துட்டாரையா ஆலிம்சா அட்வைஸ் பண்ண என்று, ஆரம்பிக்கும் போதே நிறுத்தி விடுபவர்கள் பலர் இருக்கிறார்கள்..இது எதார்த்தமான உண்மை.விவாதத்திற்கு வேண்டுமானால் அது இல்லை என்று வாதிடலாம்." ( AALIMSA ) ENTRA ORU VARTHAIYAI UNGALAL THANGA MUDIYAMAL NEENGAL NABIMOZHI YAI UNGAL KATTURAIYIL SERKKA VEKKA PADUKUREERKAL,,,,,,,,,,,AANAL INTRALAVUM SILA NALLA ULLAM PADAITHAVARKAL EVVALAVO KEVALAPATTUM ALLAHVIN MARKATTAIYUM AVANATHU THOOTHARIN VALKAI VALIMURAIYAYUM MAKKALIDAM KONDUPOI SERTHUKONDU THAN IRUKIRARKAL..... இதை எல்லோரும் படிக்க வேண்டுமெனும் போது சில இது போன்ற விசயங்களை சேர்க்க வேண்டிதான் உள்ளது...ELLARUM ITHAI PADIKKAVENDUM ENRU EALUTHI ULLRKAL.. APPO ANTHA ELLAVARUKKUM UNGAL DHAVA POI SERA VENDAMA??????? MUSLIM AAHIYA UNGALUKKU ANTHA ELLARUKKU THAVA SEIVATHU KADAMAI ILLAIYA??????? ========
ITHU ENTHA SUYANALAMUM ILLAMAL MANATHIL THONRIYA AAIYAPADU THAN........
NAN EALUTHIYAVAI YAVUM THANGALIN MANATHAI PUNPADUTHI IRUNTHAL ALLAHVUKKAHA MANNITHUVIDUNGAL,,,,,,,,
ஜமீல் காக்கா (கீழை அஞ்சல்) கொட்டுவார்கள்..என்று நினைத்திருந்தேன்...ஜமீல் தம்பி கொட்டியுள்ளீர்கள்..:-)
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் இனி வரும் கட்டுரைகளில் மாற்றிக் கொள்கிறேன் தம்பி....
YARAYUM PUN PADUTHATHA KATTURAI, UNMAYIL ARUMAI.
ReplyDeleteSUGATHARA VISAYATHILUM NAGARATCHI PORUPPILLAMAL IRUKKIRATHU, ENTHA URILUM ILLAAMAL WELFARE ENRA AMAIPPIN MULAM, ARASUKKU ELLAA UTHAVIYUM SEITHUM, NAGARATCHIYAL SEYALPADA IYALAVILLAI.
YAAR VANTHALUM INTHA KATTURAIYIL ULLA VISAYANKALAI CONSIDER SEYTHU SEYAL PADA VENDUM.
INTHA VISAYANGALAI THERTHAL ARIKKAYIL KUDA SERKALAM. WELDONE TEAM.
சகோதரர் கீழை ராசாவின் பதிவில் சமூக நலனுக்கான உயரிய நோக்கம் வெளிப்படுகிறது, அது இன்றைய சூழலில் அவசியம் கூட. இருந்தாலும் கீழக்கரையில் அனைத்து மக்களையும் இனைத்த கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது, அனைத்து ஜமாத் கூட்டமைப்பு ஒன்று இருப்பதை மறந்தது ஆகாதா? , ஊரின் அனைத்து ஜாமாத் தலைவர்களை உள்ளடக்கிய 17 நபர்கள் கொண்ட குழு ஒன்று இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது, அது போல் பல விசயங்களில் கீழக்கரையை முன்மாதிரியாக வைத்து காயல்பட்டினம்தான் நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.....
ReplyDeleteகட்டுரை சூப்பர், கீழக்கரை டைம்ஸ் இது போன்று அடிக்கடி தர வேண்டும். ஊரில் செயல் இல்லாமல் இருக்கும் அரசு மருத்துவமனையை செயல்படுத்த வேண்டும்.ஊரில் பரவும் நோய்களுக்கு ஒரு வ்ழி செய்ய வேண்டும்.மக்கள் ஒத்துமையாக ஒரு முடிவெடுத்தால் மட்டுமே ஒரு விடிவு வரும்.
ReplyDeletevery small information just some months ago kilakarai municipality is upgraded to second grade
ReplyDeletevery small information 2 thambi keelai raza some months ago kilakarai munipality upgraded to second grade formation of municipality from town panchayat official commissioner is not appointed, till date
ReplyDeletei know u very well & ur father late segu abdul cader i wish 2 share with ur feelings reg. welfare of kilakarai
ReplyDeletefor ur informaion from long long ago each & every year both eid prayer kuthbas will attend by all eight jamaths.
at the starting of kuthba five shawls will tied in side pillars of mimber
(small break with ur permission
kilakarai town have eight jamaths in it old jumma masjid jamath min hajiyar palli jamath & kadalkarai jamath will attend kuthba in one group middle street kuthba palli jamath exempted to tie shawl on a/c of they r performing kuthba
now i am coming 2 information last year haj perunal kuthba no body attend from one & only jamath except one person who brought shawl only
this year ramadhan kuthba no body attend from the particular jamath including shawl
why i am sending this information because to under stand unity among kilakarai jamaths
it is the best time to take proper decision if not take we have 2 wait another five years
கருத்துக்கள் வழங்கிய
ReplyDeleteஅப்துல்ரஹ்மான்
அப்துல் மாலிக்
ரூபின்
ரிஃபாய்
ஹபீபா
முகம்மது காசிம்
மன்சூர் அஹ்மது
நஃபீஸ் என்ற பெயரில் எழுதிய அன்பர்
ஃபோர்த் பாய் நெய்னா
விசன் ஆஃப் கீழக்கரை
குத்புதீன் ராஜா
எம்.எஸ்.கே
ஜமீல்
மஹ்மூது நெய்னா சோனகன்
ஹக்கிம்
ஆகிய அனைவருக்கும், இந்தக் கட்டுரையை படித்து, தொலைபேசி மூலமும், முகப் புத்தகம் மூலமும் கருத்துக்களை தெரிவித்த அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும், இந்தக் கட்டுரை எழுத உந்துதல் தந்து இதை வெளியிட்ட நண்பன் யாசீனுக்கும் நன்றி...நன்றி .. நன்றி...
@ஹபீபா, நீங்க சொன்னது போல இந்த முறை பெண்கள் தான் போட்டி...:-) இதிலாவது ஊர் ஒன்று பட்டு செயல்படுமா...?
ReplyDelete@ விசன் ஆப் 2020
காக்கா நீங்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை..ஆனால் ஊர் சம்பந்தமான விசயங்களில் நீங்கள் காட்டும் ஆர்வம் பாராட்டும்படி உள்ளது.. இனஷா அல்லாஹ் முடிந்தால் என்னை architectraza@gmail.com என்ற மின் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
ASSALAMU ALIKUM THAMBI RAZA NAAN UNNAL MATHIKUDIA UNATHU VAPPAVIN NERUNKIYA NANBAR REMAINIG SUSPENSE TIME WILL JOIN US
ReplyDeleteTHAMBI UNATHU NINAI-UKU SIRU KURIPPU
1)EPPOTHU EB BILL KATTA MAKKAL PATUM AVASTHAI THERIUMA UNAKKU POST OFFICE-IL KATTA VASATHI ERUNTHALUM PAY BY DATE-IKU PRAGU VANNANDURAI OFFICE-IL KATTA VENTUM AUTO SEYLAYU RS.80 TO 100 ITHANAL PERITHUM PATHIKKA PATUVATHU PAMARA MAKKALTHAN (PORULTHARA PRACHANAI KARANAM IN TIME-IL KATTUVATHARKU)
2)INTRAIYA ULLUR KILAKARAI MAKKALIN VALKAI NATA-MURAIYIL INTRI AMAIYATHA ALUVAL SUB-REGISTRAR OFFICIKU POVATHU EALAI PANKARAN VITHIYASAM ILLAMAL KUTIYA SIKKIRAM KILAKARI-I VITTU POKA POKIRATHU
3)UN KALATHAI VITA KALVI KILAKARAI-IL KARPANAI SEYA MUTIYATHA ALAHUKU APARITHAMAKA VALLANTHU VITTATHU AANAL LIBRARY KUTIYA VIRAIVIL KILAKARAI-I VITTU POKA POKIRATHU
ITHARU ELLAM SOOLAPADUM KARANAM URIL ALUVALAKAM KATTA ITAM ILLAI ENPATHEY
THAMBI UNAKKU THERIUMMA MAIN ROADIL KUNA THANA JAWLI KADAIIKU MUNNAL ARASU ITAM ULLATHU MAYLUM PALAYA ARASU ASSPITHIRI IRUNTHA ITAM ( IN BETWEEN NEW HOPITAL & MUNICIPAL OFFICE ) KALIYAKA ULLATHU ( MALARIA CERTRE MATTUM SRIYA ITATHIL ULLATHU ETHAI ARUKILULLA PUTHIYA HOSPITA;-IKU MAATRI KOLLALAM) INTHA ETATHIL POTHU MAKKAL SEYVAIKKU PAYAN PATUTHAMAL ENTHA ARASIYAL VAATHI-IN SAMATHI KATTA POKIRARKALO?
ENNUTAIYA AASAI VIRUPAM ELLAM PUTHIYA THAKA VARUM CHARIMANUM WARD MEMBERKALUM MUYARCHI ETUKKA VEYNTUM SEYVARKALA THAMBI MATRUM ORU AASAI PALLIYA MEMBERKAL YARUM INTHA ELECTION-IL NINTRU SATHIYAMAKA VARA KUTATHU ENTRA ENNUTAIYA DUA-VIL NEEUM KALANTHU KOLKIRAYA? ELLARUM ORAY KUTAIYIL URIYA NATHAM PITITHA MATTAIKAL. URAI KUT-TANI AMAITHU KUPPAIKARAI AAKIVITTARAL
" MUSLIM KUDI MAKKALIN NIRVAGA PORUPPAI EYRKKUM ORUVAR, AVARKALUKKU MOSATI SEYTHA NILAYIL MARANITH-THU VITUVRAY AANAL SORGATHAI VALLA RAHMAN THATAI SEYTHU VITUKIRAN SONNAVAR RASOOLAY KAREEM SAW ARIVIPAVAR HASAN ALFASRI(RAW) EVIDENCE SHAHIH BUHARI VOL:7 BOOK:93 NO: 7151