Sunday, September 18, 2011

வெளிநாட்டில் பணிபுரிவோர் கீழக்கரையில் தொழில் செய்ய உதவி மையம் ! மாசா அமைப்பின் நிறுவனர் இப்திகார் (படங்கள்)








தமுமுக சார்பில் கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக போட்டியிட மாஸா சமூக நல அமைப்பின் நிறுவனர் இப்திகார் சென்னையில் உள்ள தமுமுக அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார்.இந்நிகழ்ச்சியில் செய்யது இப்ராகிம்,கலீல் ரஹ்மான்,ஹமீது சுல்தான்,கபீர்,அப்துல் ஒனி,நசீருதீன்,சித்தீக் ரஹ்மான்,சபீக்,ஆலிம் உள்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இப்திகார் நமது இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் ..


கேள்வி : கீழக்கரை நகராட்சி இம்முறை மகளிருக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறதே ?

இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வரவில்லை இது ஒரு வதந்தியே.

கேள்வி :கீழக்கரை நலனுக்கென்று என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள் ?

குப்பை இல்லாத சுத்தமான, சுகாதரமான கீழக்கரை, 5ஆண்டுகளில் மலேரியா என்ற சொல் கீழக்கரையில் இல்லாமல் செய்வது, பாதாள் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற முழு முயற்சி, மின்சாரகட்டணம் செலுத்த வண்ணாந்துரை வரை சென்று அவதிபடும் நம்மூர் மக்களின் கஷ்டம் அறிவேன் எனவே கட்டண அலுவலகத்தை ஊருக்குள் கொண்டு வருவேன், அரசு திட்டங்கள் அனைத்தும் எல்லா தரப்பு மக்களுக்கும் சென்றடைய செய்வேன்.ஊருக்குள் தரமான சாலைகள் போடப்படும், பசுமையான,வளமான கீழக்கரை, ஊழல் இல்லாத நிர்வாகம் நடக்கும் , பழுதான‌ மின் விளக்குகள் சரி செய்யப்பட்டு தேவைப்படும் இடங்களில் புது விளக்குகள் பொருத்தப்படும்.

மிக‌ முக்கிய‌மாக‌ ந‌ம‌தூரை சேர்ந்த‌ பெரும்பாலானோர் வெளிநாடுக‌ளில் ப‌ணி புரிந்து வ‌ருகின்ற‌ன‌ர்.அவ‌ர்க‌ள் தாய‌க‌ம் திரும்பி தொழில் செய்ய‌ விரும்பினால் அவ‌ர்க‌ளுக்காக‌,கடனுதவி செய்வதற்கு தனியார் தொண்டு நிறுவனங்களிடமும், அரசாங்கத்தையும் அணுகி வெளிநாட்டிலிருந்து திரும்புவோருக்கு தொழில் கடன் உதவி மையம் மற்றும் தொழில் மையம் கீழக்கரையிலேயே ஏற்படுத்த முய‌ற்சி செய்வேன். இத‌ன் மூல‌ம் உள்ளூர் தொழில் வாய்ப்புக‌ள் பெருகும்.

கேள்வி :சமூக சேவையில் எத்தனை ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறீர்கள்?

பள்ளி பருவத்திலேயே ஜுனியர் ரோட்டரி கிளப் மெம்பராக கொடைக்கானலில் பணியாற்றியுள்ளேன், கல்லூரி வாழ்வில் புதுக்கல்லூரியில் மாணவர் பேரவை பொது செயலாளராக பணியாற்றியுள்ளேன், பள்ளி பருவதிலிருந்தே பொது சேவைகளில் ஈடுபாடு உண்டு. 12 ஆண்டுகளாக MASA என்றஅமைப்பை நிறுவி அதன் மூலம் பல்வேறு சமூக நல பணிகள் செய்து வருகிறோம்,


கேள்வி : வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பதினால் எளிய மக்களின் அடிப்படை பிரச்சினைகளை புரிந்து செயல்பட முடியாது என்று கூறப்படுகிறதே?

இதை நான் முற்றிலும் மறுக்கின்றேன், நான் வசதியான வீட்டு பிள்ளையாய் யாருக்கும் அடையாளம் தெரியாது, என்னை யாரும் எளிதாக சந்திக்கமுடியும், ஊரின் பிரச்சனைகள் அனைத்தும் நான் நன்கு அறிவேன், எனக்கு எனது ஊரின் சேவையில் அதிக ஈடு பாடு இருப்பதால் இந்த வாய்ப்பை பயன் படுத்தி இந்த கருத்து பொய் என்பதை நிருபிப்பேன்.
நகராட்சி தலைவர் என்பது பதவி என்பதை விட ஊர் மக்களின் நலனை பாதுகாக்கிற மிக பெரிய பொறுப்பு என்பதை நன்கு உணர்ந்துள்ளேன்.நகரின் ப‌ல‌ வேறு பெரிய‌வ‌ர்க‌ளும் அல‌ங்க‌ரித்த‌ த‌லைவ‌ர் என்ற இந்த‌ பொறுப்புக்கு எவ்வித‌ க‌ள‌ங்க‌மும் இல்லாம‌ல் செயல்‌டுவேன்.
தேர்த‌லுக்குத்தான் நான் புதிய‌வ‌ன் ந‌ம் ஊர் ம‌க்க‌ளுக்கு அல்ல‌ ஏனென்றால் ப‌ல்லாண்டு கால‌மாக‌ ம‌க்க‌ளுட‌ன் இணைந்து ப‌ல் வேறு ந‌ல‌ப்ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டுள்ளேன்.மேலும் நாம் செயல்படுத்தும் நலபணிகளை விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்துவ‌தில் என‌க்கு ஈடுபாடில்லை.

கேள்வி :உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது ?

எல்லாம் வல்ல இறைவனின் துணையோடும், எனது சேவையையும், எனது உழைப்பையும் நம்பி இந்த பொறுப்புக்கு போட்டியிட கேட்டுகொண்ட அனைத்து தெரு மக்களின் ஆதர‌வோடும் போட்டியிட உள்ளேன், வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.(இன்ஷா அல்லா)........ என்றார்

2 comments:

  1. alim
    vetri para valthukal

    ReplyDelete
  2. இப்போதைய அரசியல்வாதிகளை / ஆட்சியாளர்களை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக் கொண்டுதான் வருகிறார்கள்.

    நான் முதுமையை பரிகாசிக்கவில்லை. அந்த அளவிற்கு அவர்களுக்கு இருக்கும் பதவி ஆசையைத்தான் (வெறியைத்தான்) சுட்டிக் காட்டுகிறேன்.

    ஆட்சியும் / அரசியலும் இளைஞர்கள் கையில் வரவேண்டும். அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கி விடாமல், அதற்கு இளைஞர்கள் மூலம் ஒரு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும். இன்றைய இளைஞர்கள் வயதில் / அனுபவத்தில் வேண்டுமானால் சிறியவர்களாக இருக்கலாம். ஆனால், புதிய சிந்தனைகளில் / அறிவில் கூடியவர்கள் என்பது உண்மை. அவர்கள் பேசும் பேச்சுகளிலேயே (பேட்டிகளிலேயே) அவர்களின் அறிவின் முதிர்ச்சியைக் காணலாம்.

    "சிறுபிள்ளைகள் விவசாயம் வீடு வந்து சேராது" என்பதெல்லாம் கையாலாகாத பெருசுகளின் வீண் விதண்டாவாதம். அவர்கள் இன்னமும் அப்படியே பேசிக் கொண்டு இருந்தால், பிறகு, வடிவேலு கணக்கா அவர்களிடம் இதை கேட்பதை / சொல்வதைத் தவிர வேறு வழியே கிடையாது: "நீ(ங்க) புடுங்குன ஆணியெல்லாம் போதும்..... இனிமே ஆணியே புடுங்க வேண்டாம்....."

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.