Saturday, September 24, 2011

நகராட்சி தலைவருக்கான‌ பொது வேட்பாளர் தேர்வு சம்பந்தமாக செப்25ல் கூட்டம் !
கீழ‌க்க‌ரை தெற்குதெரு ஜ‌மாத் சார்பில் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில் கூறியிருப்ப‌தாவ‌து,

கீழக்கரையில் உள்ள தெரு ஜமாஅத்கள் தத்தமது நிர்வாகம் தொடர்பான வேலைகளை மட்டுமே கவனம் செலுத்தி வருவதால் மற்ற பொது பிரச்சனைகளான மக்களின் அன்றாட தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள் மற்று சுகாதாரம், கழிவுநீர், குப்பை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி பொது மக்கள் தவிக்கும் சூழ்நிலை உள்ளது.

இந்நிலை மாற, மக்களின் பொறுப்புதாரிகளான நாம் இவ்விசயத்தில் தீர்க்கமான ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆகவே இது தொடர்பாக எங்களது தெற்குத் தெரு ஜமாத்தின் சார்பாக வருகின்ற 25.09.2011 அன்று தேர்தல் சம்பந்தமாக ஜமாஅத் மகா சபை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, எங்களது தெருவில் அடங்கி உள்ள வார்டுகளுக்கு பிரதிநிதிகளை ஜமாஅத் மூலம் தேர்ந்தெடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் அவர்களது கடமைகளை சரிவர செய்வதற்கும், தெரு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும்,ஜமாத்தின் கண்காணிப்பில் வருவதற்கும் வழி வகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதே திட்டத்தை தொடர்ந்து, நமது நகர் மன்ற தலைவரை அனைத்து ஜமாத்தினரும் ஒருங்கிணைந்து பொது நோக்கோடு தேர்ந்தெடுத்து கீழக்கரை நகரின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் மற்றும் நலத் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையவும் ஜமாத்தினராகிய நாம் உறுதுணையாக இருக்க முடியும்.

பொது வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்வதன் மூலம் அவர் தன்னிச்சையாகவோ, ஒரு தலை பட்சமாகவோ, தனது தெருவை மட்டும் கவனித்து கொண்டு தமக்கு வேண்டாதவர்கள் தெருவை புறக்கணிக்கும் போக்கு ஏற்படாமல் அனைத்து தெருவிற்கும் தேவையான திட்டங்களை செயல்படுத்தக் கூடிய தலைவரை நாம் தேர்ந்தெடுக்க முடியும்.

எனவே கீழக்கரைக்கு பொது வேட்பாளரை தெரு பாகு பாடின்றி தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் சங்கங்கள், அமைப்புகள் ஒருங்கிணைந்து முடிவு செய்வதற்கு இன்ஷா அல்லாஹ் 25 .09 .2011 இஷா தொழுகைக்கு பிறகு தெற்கு தெரு பள்ளிவாசலில் கூட்ட ஏற்பாடு செய்துள்ளோம், எனவே இக்கூட்டத்திற்கு அனைவரும் பொது நோக்கோடு ஒன்று கூடி நமது ஊருக்காக நல்ல சுமூகமான முடிவு எடுக்க ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

4 comments:

 1. நமது ஊரில் அனைத்து ஜமாத்துக்களின் கூட்டமைப்பு என்று ஏதாவது இருக்கிறதா?

  அப்படி ஒரு அமைப்பு இருந்து, செயல்பட்டிருந்தால் அந்த அமைப்புதான்
  இப்படி ஒரு அழைப்பை விடுத்திருக்க
  வேண்டும்.

  தெற்குத் தெரு ஜமாத் முதலில் அழைத்திருப்பதில் இருந்து,அனைத்து ஜமாத்துக்களின் கூட்டமைப்பு தூங்கிக் கொண்டு இருக்கிறதோ?,நல்லநேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறதோ? OR
  அப்படி ஒரு அமைப்பு இல்லையோ?
  என்று தோன்றுகிறது.அல்லாஹ்வே அறிவான்.

  எது எப்படியிருந்தாலும், பொது விஷயத்திற்காக தன்னார்வத்துடன்
  முன்வந்து முன்னிலை வகிக்கும்
  தெற்குத்தெரு ஜமாத்தின் செயல்பாடுகள்
  அனைத்து ஜமாத்துக்களுக்கும் சிறப்பான
  முன்னுதாரணமாக இருக்கட்டும்.

  பாராட்டுக்கள்!!!!.வாழ்த்துக்கள்!!!!!.

  ReplyDelete
 2. நமதூரின் ஐக்கியத்தை நோக்கமாக கொண்ட முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் காலம் கடந்த முயற்சி.....

  இம்மாத துவக்கத்திலிருந்தே உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான செய்திகளும் ம ம க , அ தி மு க போன்ற கட்சிகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு இளைஞர்களின் விருப்ப பிரவேசங்களும் நமதூரில் நிலவி வந்ததையும் கீழக்கரை டைம்ஸ் வெளியிட்டு வந்ததோடில்லாமல் புரவலர் சீனா தானா காக்கா போன்றோர்களை பொது வேட்பாளர்களாக முன்னிறுத்துவது குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தது எல்லோரும் அறிந்ததே ......

  குறிப்பாக தெற்குத் தெருவை சார்ந்த இளைஞர்கள் ம ம க மற்றும் அ தி மு க கட்சிகளில் விருப்ப மனு கொடுத்திருந்த செய்திகளும் வந்த வண்ணம் இருந்தது.அப்போதே பொது வேட்பாளர் குறித்து ஒருங்கிணைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்குமேயானால் கருத்தொத்த , கட்சி பாகுபாடின்றி முடிவுகளுக்கு வழி கோலப்பட்டிருக்கும்.

  கீழக்கரை டைம்ஸ்-இல் (12-09-2011) சகோதரர் கீழை ராசா அவர்கள் எழுதிய கட்டுரையில்( http://keelakaraitimes.blogspot.com/2011/09/blog-post_433.html )
  நமதூரின் ஐக்கியத்தை வலியுறுத்தி, அதற்கு முன்னுதாரணமாக திகழும் காயல்பட்டினம் ஐக்கிய ஜமாத்தின் வழி காட்டுதலின் வலை இணைப்பையும் வெளியிட்டிருந்தார்.
  ( http://www.kayaltoday.com/show.aspx?tNewsId=1802 )

  தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகளும் தத்தமது அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அறிவித்த பின்னர் எடுக்கப்படும் இம்முயற்சிக்கு எந்த அளவு ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் இருக்குமென்பது புதிராகாவே இருக்கும். எனவே அரசியல் கட்சிகளின் பிரவேசத்திற்கு முன்னரே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  எல்லாம் வல்ல இறைவன் நமது சமுதாய ஒற்றுமைக்கு வழி காட்டுவானாக. இனி வருங்காலங்களிலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஊரின் ஐக்கியத்தையும் கண்ணியத்தையும் காப்பாற்ற பாடுபடுவோம்.

  ReplyDelete
 3. abul hasan: it was a good comment

  ReplyDelete
 4. abul hasan: it was a good comment

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.