Monday, September 19, 2011
தொடக்கத்திலேயே களையிழந்த கீழக்கரை நகராட்சி தேர்தல்!
கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் வேட்பாளராக போட்டியிட பலரும் ஆர்வத்துடன் பல் வேறு கட்சியிலும் விருப்ப மனுக்களை அளித்தனர்.ஆனால் கீழக்கரை நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அரசின் முடிவால் போட்டியிட ஆர்வத்துடன் இருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பல நாட்கள் முன்னதாகவே நமது இணையதளத்தில் கீழக்கரை நகராட்சி மகளிருக்கு ஒதுக்கப்பட உள்ளது என்ற செய்தியை தெரிவித்திருந்தோம்(http://keelakaraitimes.blogspot.com/2011/09/blog-post_7516.html) ஆனாலும் பல் வேறு பிரமுகர்கள் இச்செய்தி வதந்தி என்று மறுத்து வந்தனர். ஆனால் தற்போது அது உறுதியாகிவிட்டது.
கீழக்கரையில் மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கிய தேர்தல் பரபரப்பு தற்போது குறைந்து விட்டது.மகளிருக்கான நகராட்சி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததால் அனைத்து கட்சியினரும் உற்சாகமிழந்து காணப்படுகின்றனர்.எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம்,இப்திகார்,முஜீப் ,எம்.எம்.கே.காசிம் போன்ற இளைஞர்கள் போட்டியிட முன் வந்தது ஆரோக்கியமான துவக்கம் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர அதே போல் என்றுமில்லாத அளவில் இம்முறை ஏராளமான இளைஞர்கள் தமது ஆதரவு வேட்பாளர்களுக்காக தேர்தல் பணியில் ஈடுபட தயாராகியிருந்தனர். இநிலையில் பெண் நகராட்சி என்ற அறிவிப்பு வந்ததும் பலரும் உற்சாகமிழந்தனர்.
இது குறித்து அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறுகையில் ,
கட்சியின் மேலிட தலைவர்களுக்கு கீழக்கரை மகளிருக்கான நகராட்சி என அறிவிக்கப்பட உள்ளது என்பது முன்னதாகவே தெரியும். ஆனாலும் விருப்ப மனுக்களை வாங்கினார்கள்.தெரிந்திருந்தும் வேட்பாளர்களாக போட்டியிட விரும்பியர்வர்களிடம் ஏன் மனுக்களை வாங்கினார்கள் என்று வாங்கியவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
கீழக்கரையில் பெண்கள் அதிகளவில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை இதனால் பெண் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது என அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
தற்போது திமுக தரப்பில் பெண் வேட்பாளராக போட்டியிட என்.எம்.டி. தெருவை சேர்ந்த தாஜீன்நிசா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் . இவர் பெண்கள் மதரசா நடத்தி வருகிறார்.
அதிமுக சார்பில் எஸ்.ராபியத்துல் காதரியா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கீழக்கரை நகராட்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என கீழை ஜமீல் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது
Subscribe to:
Post Comments (Atom)
husain
ReplyDeletejamil kaka vin poraratam vetri para vartukal