நேற்று தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இவர்களது உடல்களை இன்று அடக்கம் செய்யவிருப்பதால் மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்துகள் தாக்கப்பட்டதால் பேருந்து இயக்கம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பொது மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
குறிப்பாக கீழக்கரை ,ஏர்வாடி,காஞ்சிரங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பலானவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு ராமாநாதபுரம் செல்வார்கள் தற்போது ஒன்றிரண்டு அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த செய்யது இப்ராகிம் கூறுகையில், தனியார் வாடகை ஆட்டோக்களும்,கார்களும் ராமநாதபுரத்திற்கு செல்வதற்கு மறுக்கிற சூழ்நிலை நிலவுகிறது. அப்படியே வந்தாலும் அதிக வாடகை கேட்கின்றனர் இதனால் ஏழை எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.அரசு உடனடியாக இந்நிலையை சீர் செய்ய வேண்டும். என்றார்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.