கீழக்கரையை சேர்ந்த தொழில் அதிபரும் ,சமுதாய புரவலருமான சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர் அவர்கள் பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை அவரிடம் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசிய போது,
கேள்வி :-உங்களை கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு பொது வேட்பாளராக அறிவிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறதே ?
பதில் :-பலரும் என்னிடம் தொலைபேசி மூலமும் நேரிலும் போட்டியிட சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள்.நீங்கள்(சீனா தானா) போட்டியிட்டால் நாங்கள் போட்டியிலிருந்து விலகி கொள்கிறோம் என்று சிலர் கூறினார்கள். அவர்களுக்கெல்லாம் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து, இந்த மரியாதையை எனக்கு அளித்த ஏக இறைவனுக்கு எனது நன்றி , புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கு உரித்தானது
கேள்வி : எந்த கட்சி சார்பாக போட்டியிட உள்ளீர்கள் ?
பதில் :எந்த கட்சி சார்பாகவும் எந்த அமைப்பின் சார்பாகவும் நிற்க மாட்டேன் ,பொது வேட்பாளராக மட்டுமே போட்டியிடுவேன் .கீழக்கரையின் அனைத்து ஜமாத், முக்கிய கட்சிகள் ,சமுதாய அமைப்புகள் மாற்று மத சகோதர அமைப்புகள் ஆகியவற்றின் பெருவாரியான ஆதரவு இருந்தால் மட்டுமே போட்டியிடுவேன் மேலும் நான் தான் போட்டியிட வேண்டும் என்ற அவசியமில்லை நல்ல உள்ளம் படைத்த வேறு ஒரு நபர் சேவை மனப்பான்மையுடன் சுயேச்சையாக ,பொது வேட்பாளராக போட்டியிட முன் வந்தால் அவரை ஆதரிக்க தயாராக உள்ளோம்.
கேள்வி : நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று நகராட்சி தலைவரனால் என்னென்ன நலதிட்டங்கள் வைத்துள்ளீர்கள் ?எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் ?
பதில் :கீழக்கரையின் இன்றைய முக்கிய பிரச்சினைகள் மூன்று அதில் முதலாவது பிரச்சினை குப்பை,இரண்டாவது பிரச்சினை குப்பைதான், மூன்றாவது பிரச்சினையும் குப்பைதான் .
வேறு பல பிரச்சினைகள் இருந்தாலும் குப்பை பிரச்சினையைதான் முதலில் தீர்க்க வேண்டும் . இதை எப்படி அணுகி தீர்வு காண வேண்டும் .அரசின் துணையோடு மட்டுமில்லாமல் தனிபட்ட முறையிலும் தீர்வு காண்பதற்கு என்று சில திட்டங்கள் வைத்துள்ளேன். தற்போது இது பற்றி எந்த வாக்குறுதியும் தர முடியாது பொது வேட்பாளராக போட்டியிடுவது என்பது முடிவான பின் இது பற்றி பேசுவோம்.
என்னை சந்தித்து தகவல்களை சேகரித்த கீழக்கரை வலை தளத்தை சேர்ந்தவர்களுக்கு நன்றி என்றார்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.