கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு நீண்ட காலமாக குப்பையுடன் டிராக்டர் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவதாக அப்பகுதியில் உள்ளோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ளோர் கூறியதாவது,
நீண்ட காலமாக குப்பையுடன் நிறுத்தப்பட்டுள்ளதால் டிராக்டரின் டயர்கள் மண்ணில் புதைந்துள்ளது.டிராக்டர் பழுதடைந்திருந்தால் அதை சரி செய்து நகராட்சியினர் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
இது குறித்து யூசுப் என்பவர் கூறுகையில் ,சில ஊர்களில் வரலாற்று பொருள்களை காட்சி பொருளாக வைத்திருப்பாகள் அது போல் இது குப்பை நகராட்சி என்பதை உறுதிபடுத்துவதற்காக குப்பையுடன் டிராக்டரை காட்சி பொருளாக நிறுத்தியுள்ளார்கள் போலும் என்றார்.
தகவல் :கீழக்கரையிலிருந்து ஹமீது சமது
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.