தீ விபத்தில் உயிரழந்த சிறுவன்
ஏர்வாடி தர்ஹாவில் முதுகுளத்தூர் சடையநேரியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.இந்த கடையில் கீழக்கரை ஸ்ரீநகரை சேர்ந்த சந்திரன் மகன் பழனி(14) என்ற சிறுவன் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் வழக்கம் போல் கடையின் உட்புரத்தில் இன்று காலை 9.45 மணியளவில் சமையல் செய்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பின் பர்னர் வெடித்து தீ பிடித்தது இதில் அங்கு சமையல் செய்தி கொண்டிருந்த பழனி தீயில் சிக்கி பலியானார்.தீ விபத்து நடந்ததும் அருகில் நின்ற இளைஞர்கள் தீயனைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தும் தீயணைப்பு வாகனம் வரவில்லை.
இதை தொடர்ந்து அங்கு நின்றிருந்த இளைஞர்கள் அருகிலிருந்து தண்ணீர்க் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து தீயணைப்பு வாகனம் வராததால் அங்கு நின்றிருந்த போலீசார் இரு சக்கர வாகனத்தில் சென்று தீயணைப்பு வாகனத்தை அழைப்பு வந்தனர். ஆனாலும் தீ விபத்தில் சிக்கி கொண்ட சிறுவன் முழுவதுமாக கருகி சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்களும் ,இளைஞர்களும் தாமதமாக வந்த தீயணைப்பு வாகனத்தை சிறை பிடித்தனர். தகவல் அறிந்த டி.எஸ்.பி முனியப்பன் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சமதானம் செய்தார். அங்கு நின்றிருந்த தீயணைப்பு வீரர்களையும் கண்டித்தார்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில் பெயருக்குத்தான் பெட்டி கடை ஆனால் இங்கு திருட்டுதனமாக பெட்ரோல் விற்பனை செய்வார்கள்.கடையில் பெட்ரோல் அதிகளவில் இருந்ததால்தான் சிறுவன் தப்பித்து வர முடியாமல் மள,மளவென தீ பரவி கடைக்குள்ளேயே மரணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது என்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.