Saturday, September 17, 2011

கீழக்கரை நகராட்சி !ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏவிடம் MMKமுகமது காசீம் விருப்ப மனு தாக்கல்




மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக வரும்
உள்ளாட்சி தேர்தலில் கீழக்கரை நகராட்சி
தலைவர் பதவிக்கு MMK முகமது காசீம் பேராசிரியர்
ஜவாஹிருல்லா MLAவிடம் தமுமுகவின் மாநில செயற்குழு உறுப்பினர்
PLE நல்ல முகமது களஞ்சியம் தலைமையில் விருப்ப மனு தாக்கல்
செய்தார்.

தற்பொழுது அவர் 17 வது வார்டு கவுன்சிலராக‌
பணியாற்றி வருகிறார் அவருடய சகோதரரர் துரை
என்ற MMK ஜமால் இப்ராகிம் 18 வது வார்டு கவுன்சிலராகவும்
இருந்து வருகிறார் அவர் தாயார் மறைந்த‌ உம்முஹானி
உம்மாள் அவர்கள் இரண்டு முறை கவுன்சிலராக சேவையாற்றினார். அவருடைய தந்தை மறைந்த‌ MMK முஹமது இப்ராகிம் அவர்களும் இரண்டு முறை கவுன்சிலராக பல்வேறு நலப்பணிகளை செய்தார்.இவர்களது குடும்பத்தில் பெரும்பாலானோர் பாரம்பரியமாக அரசியல் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது.

இது பற்றி MMK முகமது காசீம் தரப்பில் கூறியதாவது,
ஏற்கெனவே நகராட்சியில் பொறுப்பில் இருந்ததால் நகராட்சியை திறம்பட நிர்வாகம் செய்ய முடியும்.எளிமையானவர், யாரும் எளிதாக அணுக முடியும் MMK முகமது காசீமுக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக இருப்பதால் இவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறின‌ர்

1 comment:

  1. தமிழ் நாட்டில் ஜெயலிதா முதல் அமைச்சராக பதவி ஏற்ற நிகழ்ச்சியில், நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

    அதனால் (கோபித்துக் கொண்டு) நம்ம ஜவாஹிருல்லாஹ் பாய் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

    இப்போ நரேந்திர மோடி இருக்கும் உண்ணாவிரத வேடிக்கை நாடகத்தை ஜெயலலிதா ஆதரிக்கிறார் - பாராட்டு தெரிவிக்கிறார்.

    இதிலே நம்ம ஜவாஹிருல்லாஹ் பாயை பார்க்கத்தான் பாவமா இருக்கு!!!

    "அரசியலிலே இதெல்லாம் சகஜம் பாய்... எப்பவும் போல நீங்க சிரிச்சிகிட்டே இருங்க...."

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.