Wednesday, September 21, 2011

கீழக்கரையில் மீண்டும் செம்பி ராஜ்யம்..! கட்டுரையாளர் : கீழைராஸா

கட்டுரையாளர் : கீழைராஸா
”என்ன காக்கா, உள்ளாட்சி தேர்தலில்,இந்த முறை நம்ம ஊரை பெண்களுக்கு ஒதுக்கிட்டாங்களாமே..?”
”என்னக் கொடுமை தம்பி நாட்டை தான் பொம்பளைங்க கையிலே கொடுத்தாச்சுன்னா ஊரையுமா..?”
”வீட்டை மட்டும் ஏன் விட்டுட்டீங்க..? அங்கேயும் பொம்பள ஆட்சி தானே..?”
”அடப் பாவி அதுவும் உனக்குத் தெரிஞ்சி போச்சா..?”
”இதுலே என்ன காக்கா ரகசியம் இருக்கு..., லாத்தா பேரைக் கேட்டாலே உங்க பேஸ்மெண்ட் வீக்காகிடும்னு ஊருக்கே தெரியுமே....? ”

இப்படி நகைச்சுவையாக ஊரெங்கும் உரையாடல் நிகழ்ந்தாலும் உண்மையில் இந்த விசயம் ரொம்பவும் சீரிஸ்ஸானது..!

கீழக்கரை நகராட்சி தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து, ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்து கொண்டிருந்த வேளை, இடி மாதிரி வந்து விழுந்த இந்த செய்தியால் ஸ்தம்பித்து போனது அரசியல் களம்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பட்டியலில், கீழக்கரை, காயல்பட்டினம், கடையநல்லூர் போன்ற முஸ்லிம் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளெல்லாம் பெண்களுக்காக ஒதுக்கப் பட்ட நோக்கத்தை ஆராய்ந்து பார்க்கும் போது, அது ஆதிக்க சக்திகளின் அரசியல் சகுனி வேலையோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது...இந்த உள்நோக்கம் அறியாமல் உள்ளூர் அரசியல்வாதிகளும் அவர்களின் பின்னால் கொடி பிடித்துத் திரியும் கொடுமையை என்ன சொல்வது...?

இந்த அரசியல் சகுனி வேலைகளுக்கு அப்பாற் பட்டு ஆராயுவோமேயானால் கீழக்கரைக்கும் பெண்களுக்கும் உண்டான ஆட்சி சம்பந்தப்பட்ட பிணைப்புகளை அறிய முடியும்.
பெண்களுக்கு ஆட்சி அதிகாரம் என்பது கீழக்கரைக்கு புதிதில்லை, 11 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கீழக்கரை ஒரு பெண்ணால் ஆளப்பட்டு என்பது வரலாற்று உண்மை.

ஆம் 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய சகோதர்கள் மூவர் தங்களின் கருத்து வேறுபாடு காரணமாக, பாண்டிய தேசத்தை மூன்று பாகங்களாக பங்கிட்டு, கீழக்கரையை தலைமையிடமாக கொண்ட தென் மதுரையை விக்கிரபாண்டியன் ஆண்டு கொண்டிருந்த வேளை, அது சோழ மன்னர் ராஜராஜ சோழனால் கைப்பற்றப்பட்டு அவர் மனைவியரில் ஒருவரான செம்பிமாதேவியிடம் அதை ஒப்படைத்து, செம்பிமாதேவியே கீழக்கரையை சில வருடங்கள் ஆண்டு வந்தார் என்பது வரலாறு. அதனாலேயே கீழக்கரைக்கு ”செம்பி நாடு” என்றொரு பெயரும் உண்டு என்பது நம்மில் பலர் அறிவர்.

இப்படி வரலாறு முதல் கொண்டே கீழக்கரையில் பெண்கள் ராஜ்யம் நிகழ்ந்தாலேயோ என்னவோ இன்றும் அது விட்டகுறை தொட்ட குறையாக தொடரத்தான் செய்கிறது...
கீழக்கரை சுற்று வட்டாரத்தை பொருத்த மட்டும் பெரும்பாலான வீடுகளில் பெண்களின் ராஜ்யம் தான். அதற்கு காரணம் பெரும்பாலான ஆண்கள் வெளிநாடு வேலைகளுக்கு சென்று விடுவதால், பெண்களே வீட்டை நிர்வகிக்க வேண்டிய நிர்பந்தம். பெரும்பாலானோர் அந்தப் பொறுப்பை சிறப்பாகவே செய்கின்றனர்.

வீட்டை சிறப்பாக ஆட்சி செய்யும் எங்களால் ஊரை ஆட்சி செய்ய முடியாதா என்ன? என்பது தான், இன்றைய இளம் பெண்களின் விவாதம்.முடியும்..! கண்டிப்பாக முடியும்..! அவர்கள் சுயமாக செயல்படும் பட்சத்த்தில் அது முடியும் ...!ஆனால் நமதூரில் நடப்பது என்ன? உதவி சேர்மனாக இருந்து கொண்டு சேர்மனை இயக்கும் எண்ணத்தில் தான் ஆண் வேட்பாளர்கள் களம் இறங்குகிறார்கள்.இந்த நிலை மாற வேண்டும். தன்னிச்சையாக, துணிச்சலுடன் திறம்பட செயல்படும் தகுதியுள்ள ஒரு பெண்மணியை நாம் முன்னிருத்த வேண்டும்.

அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு ஏவல் விடுவதை விட, களத்தில் சென்று பணியாற்றும் திறம் படைத்த பெண்ணை இனம் காண வேண்டும்.

ஒரு அன்னையாக, ஆசிரியையாக, அன்னை தெரசாவாக, கனிவான, கண்ணியமான, ஒழுக்கமான, ஊரின் நடப்பறிந்தவராக, பொதுவாழ்க்கையில் கணவனின் இடையூறு இல்லாதவராக, தேவைப்பட்டால் சில விசயங்களில் அல்லிராணியாக செயல்படக் கூடிய ஒருவரை அடையாளம். காண ஆண்களில் செயல் படுத்த முயலாத , முடியாத “பொது வேட்பாளர்” முறையை பெண்களிலாவது செயல்படுத்துவோமா..? என்ற கேள்வியுடன்...உங்கள் அன்பன்...கீழைராஸா - துபாய் ,

கீழக்கரை சம்பந்தப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை பரிமாறிக்கொண்ட புலவர்.ஹக்கிம் (வரலாற்று ஆராய்ச்சியாளர்) வடக்குத்தெரு. அவர்களுக்கு நன்றி.
_________________________________________________________________________________________________________________________________________________________________________

அன்பு உள்ளங்களுக்கு, இந்த கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் . உங்கள் கருத்துக்கள்தான் எங்களுக்கு ஆக்கமும்,ஊக்கமும் தருகிறது.

அன்புடன்,

கீழக்கரை டைம்ஸ் குழுவினர்20 comments:

 1. mudiyale mokke bladeuppa

  empaa tution edukkre

  viru viruppa ethavathu eluthuppa pls

  aness

  ReplyDelete
 2. KONJAM BOAR ADIKKUTHU

  MANGATHA ALAVUKKU ILLAI

  NEXT TIME WE ARE EXPECTING GOOD ONE


  AHAMAD MUSTAFA
  ABUDAHABI

  ReplyDelete
 3. முஹ்சின்September 21, 2011 at 6:44 PM

  //ஒவ்வொரு மாவட்டங்களிலும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பட்டியலில், கீழக்கரை, காயல்பட்டினம், கடையநல்லூர் போன்ற முஸ்லிம் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளெல்லாம் பெண்களுக்காக ஒதுக்கப் பட்ட நோக்கத்தை ஆராய்ந்து பார்க்கும் போது, அது ஆதிக்க சக்திகளின் அரசியல் சகுனி வேலையோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது...இந்த உள்நோக்கம் அறியாமல் உள்ளூர் அரசியல்வாதிகளும் அவர்களின் பின்னால் கொடி பிடித்துத் திரியும் கொடுமையை என்ன சொல்வது...?//

  சிந்திக்க வேண்டிய நல்ல விசயம்.. தொடருங்கள்..காக்கா.

  ReplyDelete
 4. Kayal.Khaja MuhyideenSeptember 21, 2011 at 6:50 PM

  Dear RazaKhan,
  I really appreciated your historical evidence to the negative thinker.

  Regards,
  Kayal.Khaja Muhyideen
  Khaja191@gmail.com

  ReplyDelete
 5. vision of kilakarai 2020September 21, 2011 at 7:21 PM

  THAMBI RAZA UNNUTAIYA AATHANGAM PURANAMGA PURNTHUKOLLA MUTIGIRATHU UN NATTAM NIRAIVEYRA VAALTHI VALLA RAHMANITAM ITHAYA PURVAMAGA PRATHINKINTRANE UNNAKU ORU UNMAI THERIYUMA KILAKARAI ANAITHU VAKKAALRKITAYUM ORU OPINION POLL NATATHINAL KITAIKUM MUTIYU ENNA THERIYUMA PEN VEYTPALIAR THAAN KAARANAM MALE VOTERS 11414 FEMALE 11788 TOTAL 23202 (AS PER VERY LATEST VOTER LIST)NALLAITHAIYE NINAIPOM NALLATHEY NATAKA DUA SEYVOM AMEEN

  ReplyDelete
 6. நன்றி ஹமீது.

  அனீஸ் மற்றும் முஸ்தபா அவர்களுக்கு எல்லோருடைய ரசனையும் ஒரே போல இருப்பதில்லை..,இருந்தாலும் உங்கள் கருத்திற்கு நன்றி.

  இன்ஷா அல்லாஹ் இனி உங்கள் ரசனைக்கு தக்கவாறு எழுத முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 7. THAMBI RAZA INTRIAYA SULNILAYIL KILAKARAI IN NATAPPAI MATTUM PARKA KUTATHU ERKANAMAY PATHAVI-IL IRUNTHA ULLR PENKALLAL THALAI KUNIYU ERR-PATTATHAI MARUPATHARKU ILLAI IRUPPINUM MAT-TRA NAGARATCHI KALIL MANAGARATCHI KALIL ETHANAIYO PENKAL SIRAPPAGA SEYAL PATTU KONDU IRUKIRKAL KETTA PEYAR ETUPPATHARKU KARANAM NAMUTAIYA ARASIYAL AMAIPPU WARD ELECTION ANTHANTHA WARDKALIN ABIVIRUTHIKKA NATATHAPATUKIRATHU ETHIL MOLLA MARI ARASIYALKKU ENNA VEYLAI ETHANAL NALLA AAN VEYTPALARKAL KUDA THANICIYAKA SEYAL PATA MUTIYA VILLAI ENPATHEY UNMAI NILAI SO VEYTPALARKALIL AAN ENNA PEN ENNA BAHRAIN PAKISTAN IRAN IRAQ ETC NADU KALIL PEN PRATHINITHIKAL THIRAMAIYAKA SEYAL PATA VILLAIYA? PAKISTANIL FOREIGN MINISTER JANABA HINA RABBANI 34 VAYATHU PEN THARCHAMAYAM INDO -PAK PRACHANAIKALAI SUMUGAMAGA KAI AANTU VARUKIRAR SO NAM ENNAMKALAI MATRI KOLVOMAGA ARSIYALIL MUDINTHA ALAYU THUYUMAI UNTAGA PRARTHIPOMAGA AMEEN

  ReplyDelete
 8. SAMPANTHA PATTAVARKALUKU OJM AMAIPU POLIYU ELLANTHU VITTATHU THERKKU THERU JAMATHIN ELECTION SAMPANTHAMAGA KOTUTHUALLA KANIVANA ARIKKAI-IL 5 MATRUM AARAVATHU VARIKAL MANATHAI SUTUKIRATHU (KILAKARAITIMES.BLOGSPOT.COM DT 21/09/11) ONCE UPON A TIME.......... ENNA SEYVANE YA ALLAH

  ReplyDelete
 9. Good Article, Really appreciate for this kind of informative essay.Thanks to writer for supporting ladies...

  ReplyDelete
 10. கீழை ராஸாவிற்கு,
  முஸ்லீம்கள் அதிகம் உள்ள ஊர்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதுக்கு கூறப்படும் காரணத்தையும் நாம் ஒதுக்கிவிட முடியாது.
  1. பெண் வாக்களர்களே அதிகம்.
  2. வாக்குப்பதிவிலும் பெண்களே அதிகம்.
  இது இப்போதைய பொதுவிதி,முஸ்லீம் அதிகமுள்ள ஊர்களுக்கு மட்டுமல்ல.
  ... என்றாலும் இதில் சிக்கிக் கொண்டது முஸ்லீம் அதிகம் உள்ள ஊர்கள் காரணம் ஆண்கள் ஊரில் இருப்பதில்லை.
  இந்த விதி(RULE)இயல்பாக கொண்டு வரப்பட்டதா? OR முஸ்லீம்களுக்காக திட்டமிடப்பட்டதா?
  OR முஸ்லீம்கள் அதிகம் உள்ள ஊர்களில் மட்டும்தான் இந்த விதி(RULE) அமல்படுத்தப்பட்டுள்ளதா?
  என்பது எல்லோர் மனதிலும் எழுந்துள்ள கேள்வி??????????????
  நண்பரே நீங்கள் ஆதிக்கசக்தி என்ற நிகழ்க்காலத்தை எழுதிவிட்டு கடந்தகால வரலாற்றுக்குள் புகுந்துவிட்டீர்
  ஆதிக்கசக்தி பற்றி பேசவிரும்பாதது போல் தெரிகிறது.
  என்னுள் எழுந்த கேள்வி அம்புகளை தொடுத்து வைத்துள்ளேன்.அடுத்து அதுபற்றி எழுதுகிறேன்.
  இலக்கு நீ அல்ல இஸ்லாமிய இதயங்கள்..........

  ReplyDelete
 11. பல கிளைக் கேள்விகள் எழுகிறது.

  ReplyDelete
 12. கீழை ராஸாவிற்கு

  ஆதிக்க சக்திகளின் அரசியல் சகுனி வேலைகண்டு கவலைபடுகிறீர்களா?

  அல்லது

  செம்பிராஜ்யம் வருவதைகண்டு மகிழ்கிறீர்களா?

  செம்பிராஜ்யம் வருவது வரலாற்று
  காலத்திற்கு பின் முதல்முறை அல்ல,
  இது மூன்றாம் முறை.

  “இது ஆதிக்கசக்திகளின் அரசியல் சகுனி வேலையோ” என்ற உங்களின் சந்தேகம் எனக்குள் பல எண்ணங்களை ஏற்படுத்துகிறது.
  ஆதிக்கசக்தி எனும் வார்த்தை, ஒரு மதத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்தையும்,பணம் மற்றும் பதவியால் ஆட்டிப்படைக்கும்
  அதிகாரவர்க்கத்தையும் சுட்டிக்காட்ட வழக்கமாக பயன்பபடுத்தபடும் சொல்லாகும்.
  இதில் எதைச் சொல்ல நினக்கிறாய்?
  பணம் மற்றும் பதவி என்றால்
  1.யரோ பணம் மற்றும் செல்வாக்கு மிக்கவர் தன்னைச் சார்ந்த பெண் வர வேண்டும் என்று அடுத்தமுறை பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டியதை இந்தமுறை
  ஒதுக்கச்செய்துவிட்டார் என்கிறாயா?

  2.யாரோ ஒரு ஆண் பணம் மற்றும் பதவியால் ,பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய மாவட்டத்தின் ஏதோ ஓர் நகராட்சியை தான் நிற்க வேண்டும் என்பதற்காக மாற்றவிடாமல் செய்துவிட்டார், ஆகையால் மாவட்டத்தில் ஒரு இடத்திலாவது பெண்ணுக்கு கொடுக்க வேண்டும் என்று கண்துடைப்புக்காக
  நமது நகராட்சியை இப்படி செய்துவிட்டார்கள் என்கிறாயா?

  இது விசயமாக நீதிமன்றத்தில்
  வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

  இது பொதுநலமா? OR
  தன்னைச் சார்ந்தவர்களுக்கான சுயநலமா?
  அல்லாஹ்வே அறிவான்.

  மதரீதியான ஆதிக்கம் எனில்

  அது பற்றி அப்புறம் கேட்கிறேன்.

  இன்ஷா அல்லாஹ்.

  ReplyDelete
 13. naina unga karuthu remba sari . atha pathi nenglae eluthungal. thairiyama eluthungal neenga sonna maari raja maari pathiyileye utrathiga nalla eluthuriya . ivvaluvu atkal nammurle nalla eluthuranga unmaileye santosoma irikithu


  Asif

  ReplyDelete
 14. @vision of kilakarai 2020, காக்கா ஊரின் மீது அக்கரை கொண்டு இது போன்ற உரையாடல்களில் நீங்கள் எழுதும் கருத்துக்கள் உண்மையில் நல்ல பொருள் பதிந்ததாகவே உள்ளது...தொடர்ந்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்... ( ஒரே ஒரு குறை நீங்கள் எழுதும் ஆங்கிலத்தமிழை படிப்பது சற்று சிரமமாக உள்ளது...தமிழில் எழுதுவது மிக சுலபம் அது தொடர்பாக விபரம் அறிய என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்..architectraza@gmail.com)

  ReplyDelete
 15. நெய்னாவிற்கு,

  இது போன்ற விவாதங்கள் வழக்கமாக நமக்குள் நடப்பது தான் இப்போது காலத்தின் நவீன போக்கில் இணையத்துள் நடக்கிறது...:-)

  நான் ஒரு எதார்த்தம் விரும்பி, கேள்விகளை சரமாரியாக கேட்டு படிப்போரை குழப்ப நிலைக்கு கொண்டு வருவது என் நோக்கமல்ல...என் நோக்கம், நடந்ததை மறக்காமல் நடக்கப் போவதில் கவனம் செலுத்துவது, நடக்கப் போவதில் நாம் செய்ய வேண்டியதை எத்திவைப்பது... இந்த நோக்கத்துடன் தான் இந்த கட்டுரை எழுதப்பட்டது...ஆயிரம் விசயங்கள் நம்முள் கேள்வியாக எழலாம்...ஆனால் அது வெறும் யூகம் மட்டுமே...அந்த யூகத்தை முன்னிருத்தி விவாதம் செய்து கொண்டிருப்பதை விட இனி நடக்கப் போவதில், நம் புத்திசாலித்தனத்தைக் காட்டி, நம்மை பின் தங்க செய்ய வேண்டுமென்ற நோக்கில் செய்யப்பட்ட இந்த சகுனித்தனத்தின் சதியை வெல்லவேண்டுமென்பதே என் விருப்பம்...அதற்கு உன் ஆதரவும் இருக்குமென்று நம்புகிறேன்...நாம் செய்ய வேண்டியது தொடர்பான உன் எழுத்துக்களை நான் எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
 16. நன்றி ஆசிஃப்.நிச்சயம் தொடர்ந்து எழுதுகிறேன்.இன்ஷாஅல்லாஹ்.

  ReplyDelete
 17. KILAI RAJA

  NEENGAL SOLLUM KARUTUKALIL BAYAM THERIYUHU MALAUPALA IRIKUTHU, ETHAYUM URUTHIYAGA SOLLA MATENGURIYA NEGA SOLRATU EPDI IRIKITHUNA
  (EXAMPLE: IVAR THAN KUTRAVALI ENRA POTHILUM IVAN KUTRAM SEYTHANA ILLAIYA ENDRU NAAM URUTHI SEYA VENDUM ENPATHINAL ORUVARAI KUTRAVALI ENRU SOLLA MUDIYATU ANALUM AVARAI PARKUM POTHU KUTRAM SEITHIRUPAR ENRE NINAIKA MUDIYUTHU ENRALUM..... )

  ITHIL ETAVATHU THELIVAGA IRIKIRATHA ?

  IPADITHAN NEGAL ELUTHURATUM IRIKITHU FORTH BOY SONATHU MARI PATENRU POTTU UDAITHU AHIKA SAKTHI YAR ENRU BOLDAGA SOLUNGAL

  RASEEN

  ReplyDelete
 18. கீழை ராஸாவிற்கு

  எனக்கு நீ எழுதிய பதில் அல்லது கருத்து எது பொருத்தமோ,அது
  மிகவும் சுவரஸ்யமான, பல விவாதத்திற்கான பொருட்களை கொண்டுள்ளது.அது பற்றி மிக நீண்டதாக வாதம் செய்ய நினைக்கிறேன்.அதை விவாதமாகவும் or வீண்வாதமாகவும் கருதுவது அவரவர் உரிமை.

  அதற்கு முன் பாதியில் விட்ட கேள்வியை தொடர்கிறேன்.


  மதரீதியான ஆதிக்கம் எனில்

  பெண்களுக்கு நகராட்சியை ஒதுக்கியது மூலம் ஆதிக்கசக்திகள் சாதிக்க நினைத்தது என்னவாக இருக்கும்?

  1.ஆண்களை பதவிக்கு வரவிடாமல்
  செய்தது.
  2.பெண்களை பதவிக்கு வரச் செய்வது.

  ஆண்களை வரவிடாமல் செய்தது
  நிச்சயம் முஸ்லீம் பெண்களை பொதுவாழ்க்கைக்கு வரவழைப்பது மட்டும்தானா?
  முஸ்லிம் பெண்களை பொதுவாழ்க்கைக்கு வரச் செய்வது அவர்களுக்கு பதவி அலங்காரம் செய்து
  சம உரிமை கோசம் போட்டு பெண்ணடிமை உடைந்ததாக உற்சாகப் பண் பாடுவதற்காகவா?

  1.குடும்பவாழ்வில் மட்டும் ஈடுபட்டு வந்த இஸ்லாமியப் பெண்ணை பொதுவாழ்விலும் ஈடுபடச் செய்வதில் ஆதிக்க சக்திகள் அடையப்போகும்
  லாபம்தான் என்னவாக இருக்கும்?

  2.இதனால் இந்த பெண்கள் மற்றும் இஸ்லாமிய சமுதாயம் அடையப்போகும் கேடு என்னவா இருக்கும்?

  சிந்தியுங்கள்...ஆழமாக சிந்தியுங்கள்..


  இஸ்லாம் இதை அனுமதிக்கிறதா?


  எனது சிந்தனை சற்று விகாரமாகவும் இருக்கலாம் or மிகைப்படுத்தப்பட்டதாகவும் தோன்றலாம்.நான் மறைக்க விரும்பவில்லை.
  பொதுவாழ்க்கைக்கு பெண்கள் வருவதை (குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள்)என்னால் முழு மனதுடன்
  ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை.இது பற்றி மேல் விவாதம் வேண்டாம்.

  பெரும்பாலான ஆண்களின் மனநிலையும் அதுதான். சிலர் அவற்றை வெளிப்படையாகத் தெரிவிக்க
  இயலாது.எங்கே தன்மீது ஆணாதிக்க சிந்தனைவாதி என்ற முத்திரை குத்தப்படுமோ என்ற அச்சம். இன்றைய பெண் வேட்பாளர்கள் தானே
  விரும்பி நிற்கவில்லை வற்புறுத்தலின்
  பேரில் நிற்கிறார்கள்.
  சுயமாக எதையும் செய்ய இயலாத, சிறுவேலைக்கும் யரோ ஒரு ஆணைச் சார்ந்திருக்கும் நிலைதான் இன்றைய ஊர் பெண்களின் நிலை.அது ஒரு கலாச்சாரக் கட்டுபாட்டின் வினை.அதுதான் அவர்களின் பாதுகாப்பும் கூட.இது பாதுகாவலன் யார் என்பதைச் சார்ந்தது.

  இன்று 3 or 4 பெண்கள் காரோட்டிச்
  செல்வதை ஊருக்குள் காணமுடிகிறது.

  நடுவீதியில் பெண்கள் பேசிக்கொண்டு
  நிற்கும் நாட்களும் வரலாம்.


  நாளைய வேட்பாளர்கள் தானே விரும்பி போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள்,
  குடும்பங்களை,உறவுகளை எதிர்த்துக் கொண்டும் வருவார்கள் பொதுவாழ்க்கைக்கு.

  இதன் மூலம் குடும்பஅமைப்பு மற்றும் உறவுநிலை சீர்கெடும்
  கலாச்சாரம் என்பதெல்லாம் காலாவதி ஆகிவிடும்.தனிநபர் வாழ்க்கைக்கு முக்கியம் அளிக்கப்படும்.சமுதாயம்
  சாதாரணம் ஆகிவிடும்.இத்தகையோர்
  மீது சலுகை மழை பெய்யும்.இளைஞர்,இளைஞிகள் மூளைச்சலவை செய்யப்பட்டு விரும்பிய கலாச்சாரம் விதைக்கப்படும்.மற்றவை மண்ணில் புதைக்கப்படும்.
  எந்த ஒரு கலாச்சாரதிற்கும் , மதங்களுக்கும் ஆணி வேராக இருப்பது பெண்கள்தான்.பெண்களை,
  பெண்களின் மனதை மாற்றிவிட்டால்
  அந்த சமுதாயத்தை மாற்றுவது மிக எளிது.போர் செய்வது தேவை அற்றது ஆகிவிடும்.

  இதுபோன்ற சதித்திட்டகளால்,இஸ்லாம் இழந்த இஸ்லாமிய ராஜ்ஜியங்களின் கதைகள் நமக்கு படிப்பிணைகளாக உள்ளன.

  நம்மீதான ஆதிக்க சக்திகளின் திட்டங்கள்
  இன்று விதைத்து,நாளை அறுவடை செய்யக்கூடிய அவசரதிட்டம் அல்ல!

  நான்கு தலைமுறை தாண்டி,
  பயன் தரக்கூடிய தொலைநோக்குப்
  பார்வையுடன் கூடிய திட்டமாகும்.

  அத்தகைய திட்டங்களின் முதல்படி
  தான் இன்றைய லீலைகள்.


  அல்ஹம்துலில்லாஹ்.

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.