Thursday, September 22, 2011

கீழக்கரை நகராட்சி தேர்தலுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

ஜாஹிர் ஹீசைன் களஞ்சியம்

வக்கீல் அலிப்தீன்


கீழக்கரை நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதில் வழிகாட்டுதல்கள் சரியாக பின் பற்றவில்லை என கீழக்கரை நகராட்சி தேர்தலுக்கு தடை கோரி ஜாஹிர் ஹீசைன் களஞ்சியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் தரப்பில் கூறியதாவது , சட்ட விதிகளின் படி 10 வருடத்துக்கு ஒரு முறைதான் இம்மாற்றங்கள் இருக்க வேண்டும் என்று சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள் அதன் படி கீழக்கரை நகராட்சி தலைவர் பதவி 1996 முதல் 2006 வரை 10 வருடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டு முறையே சக்கீலா மற்றும் நசீரா பர்வீன் ஆகியோர் கீழக்கரை நகராட்சி தலைவராக இருந்தனர்

மீண்டும் பொது தொகுதியாக மாற்றப்பட்டு 2006 முதல் 2011 வரை தற்போது தலைவராக பசீர் இருந்து வருகிறார். எனவே அடுத்த 5 வருடங்களுக்கு 2016 வரை பொது தொகுதியாகத்தான் இருக்க வேண்டும் ஆனால் தற்போது மகளிருக்கான தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது வழக்கத்துக்கு விரோதமாக உள்ளது.

மேலும் நகராட்சி தலைவர் பதவிக்கு மகளிருக்கான வாய்ப்பை கீழக்கரைக்கு ஒதுக்குவதை காட்டிலும் மற்ற ஊர்களுக்கு இந்த வாய்ப்புகளை வழங்கி பெண் தொகுதியாக அறிவித்தால் அந்தந்த ஊர் பெண்களுக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். இப்படி செய்தால் அனைத்தூர் மகளிருக்கும் சமமான வாய்ப்பு கிட்டும்.
நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கான வாய்ப்பை தொடர்ந்து கீழக்கரைக்கு வழங்குவதினால் இந்த முறை வேறு ஒரு நகராட்சி மகளிருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டி பறித்தது போல் ஆகிறது

மேலும் பெண் தொகுதியா பொது தொகுதியா என்று ஒதுக்கப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன் இதற்கான முன்னறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் மற்றும் பல்வேறு காரணங்களை எடுத்து கூறி கீழக்கரை நகராட்சி தேர்தலுக்குதடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறினர்.

சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் எம்.எம்.கே. அலிப்தீன் மற்றும் சத்தியநாராயணன் ஆகிய வக்கீல்கள் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

8 comments:

  1. ஜமீல் முஹம்மதுSeptember 22, 2011 at 7:53 PM

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    வேண்டும் என்றே முஸ்லிம்கள் பெருவாதியாக வாழும் கீழக்கரை, காயல்பட்டிணம், கடையநல்லூர், தென்காசி, தொண்டி, நாகூர் என ஊர்களை பெண்கள் தொகுதியாக மாற்றுவது திட்டமிட்ட சதியாகும். ஜெயலலிதா எப்போது பதவிக்கு வந்தாலும் திட்ட மிட்டு செய்யும் வேலையாக இருக்கிறது.

    சரியான வேலை தம்பி ஜாஹிர் ஹுஸைன் செய்துள்ளார்.இறையருளால் இந்த வழக்கு தமிழகத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என துஆச் செய்கின்றேன்.

    வரும் அக்டோபர் 2ஆம் தேதி மதுரையில் எங்களது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழு கூட உள்ளது. அதில் முஸ்லிம் விரோத போக்கை கையாளும் ஜெயலலிதாவுக்கு எதிராக உள்ளாட்சித் தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் முடிவு எடுக்க உள்ளது.

    வஸ்ஸலாம்
    அன்புடன் சகோதரன்
    ஜமீல் முஹம்மது.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. assalamu alaikum(varahmathullah)

    kalanjiyam thambi

    thangalin intha velai urkku rema piriyojanapadum
    allah ungalukku thunai seivan

    marsook
    hh fancy store
    malasiya

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் ஜாஹீர், தக்க சமயத்தில் சரியான வேலையை செய்துள்ளீர்கள்.அல்லாஹ் வெற்றியை நமக்குரியதாக்குவான். தாங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. vision of kilakarai 2020September 24, 2011 at 12:20 PM

    THAMBI ALIFDEEN AVARKALAY
    ASSALAMU ALIKUM
    UNGAL MANU THAKKALIN INTRIYA SATTA NILAMAI ENNA?
    UNGAL MUYARCHIKU VETRI KITAIKA VALLA RAHMANITAM PRARTHIKIRANE

    ReplyDelete
  6. vision of kilakarai 2020September 24, 2011 at 12:22 PM

    THAMBI ALIFDEEN AVARKALAY
    ASSALAMU ALIKUM
    UNGAL MANU THAKKALIN INTRIYA SATTA NILAMAI ENNA?
    UNGAL MUYARCHIKU VETRI KITAIKA VALLA RAHMANITAM PRARTHIKIRANE

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.