Friday, December 9, 2011

ராமேஸ்வரம் - மதுரை பகல் நேர ரயில்கள் இயக்க கோரிக்கை


ராமேஸ்வரம் - மதுரைக்கு அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் மட்டுமே ரயில் சேவை உள்ளது.எனவே பகல் நேரத்திலும் ரயில்கள் இயக்க வேண்டும் என கீழக்கரை மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

கீழக்கரையில் வியாபரம் செய்பவர்களில் பெரும்பாலானோர் மதுரையில்தான் மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்து இங்கு வியாபாரம் செய்து வருகின்றனர்.இவர்கள் தற்போது பஸ்கட்டணம் மிக அதிகமாக உயர்ந்துள்ளதை தொடர்ந்து ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

இது குறித்து கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர் ராதாகிருஸ்ணன் கூறுகையில் , கீழக்கரையிலிருந்து தினமும் 500க்கும் அதிகமானோர் பணி நிமித்தமாகவும் ,மருத்துவமனைக்கும் மதுரைக்கு சென்று வருகின்றனர்.தற்போது பஸ் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது இதனால் பெரும்பாலானோர் பஸ் பயணத்தை தவிர்த்து ரயில் பயணத்தை விரும்புகின்றனர். ஆனால் இரவிலும் அதிகாலையிலும் ஒன்றிரண்டு ரயில்கள்தான் இயக்கப்படுகிறது.எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்க ரயில்வேதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இது குறித்து ரயில்வேதுறைக்கு மனு அனுப்பியுள்ளோம் என்றார்.

1 comment:

  1. மங்காத்தவின் தங்கச்சி மகன்December 10, 2011 at 6:29 PM

    இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வேளையில் மற்றும் ஒரு கோரிக்கை.

    இப்போது மதுரை, ராமநாதபுரம் வழியாக கோயம்புத்தூர்க்கு ராமேஸ்வரத்திலிருந்து வாரம் ஒரு முறை பயனிக்கிறது. இது காலைவேளையில் தினசரி பயனிக்குமானால் கோரிக்கை நிறைவேறுவதோடு கேரளாவிலிருந்தும் கோயமுத்தூர் சுற்று வட்டாரத்துலிருந்தும் வரும் ஏர்வாடி யாத்திரிகர்களுக்கும், இன்று சென்னைக்கு அடுத்தபடியாக வைத்தியத்தில் அபரிதமான முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் கோயமுத்தூர்க்கு ராம்நாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்கள் வைத்திய சிகிச்சைக்கு சென்று வர பேருதவியாக இருக்கும்.

    நிச்சயமாக இது நாடாளும் மன்றம் கூடி முடிவு எடுக்கக் கூடிய விவகாரம் இல்லை. நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனையும் இல்லை. மதுரை கோட்ட மேளாளர் (ரயில்வே)இந்த கோரிக்கையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற முனைப்புடன் செயல் படுவாரேயானால் நம்முடைய இந்த கோரிக்கை எந்த விதமான இடையூறும் இன்றி நிச்சயமாக நிறைவேறி விடும்.

    செய்வாரா ? பொறுத்திருப்போம். பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பது முதியோர் வாக்கு.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.