Thursday, January 19, 2012

18வது வார்டு சின்னக்கடை தெரு செல்லும் வழியில் துரித நடவடிக்கை !

சில‌ நாட்க‌ளுக்கு முன் அப்ப‌குதியில் நிலை

தற்போது குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்டு சுத்தமாக காண‌ப்ப‌டுகிறது . குப்பைக‌ள் இங்கு கொட்ட‌ப்ப‌டாம‌ல் இருந்தால் தொட‌ர்ந்து இந்த‌ சுத்த‌ம் நீடிக்கும் .

18வ‌து ப‌குதியில் சின்ன‌க்க‌டை தெரு செல்லும் வ‌ழி சாலையில் குப்பைக‌ள் நிறைந்து மிகுந்த‌ சுகாதார‌கேடு ஏற்ப‌ட்டுள்ள‌தாக‌ அப்பகுதி ம‌க்க‌ள் புகார் தெரிவித்தனர்.17-01-12 அன்று இது குறித்து நமது கீழக்கரைடைம்ஸில் செய்தி வெளியிட்டிருந்தோம்.பார்க்க :- http://keelakaraitimes.blogspot.com/2012/01/blog-post_17.html .

இந்நிலையில் செய்தி வெளியான ஒரு சில தினங்களில் குப்பையாக இருந்த அப்பகுதி உடனடியாக நகராட்சி நிர்வாகத்தால் சுத்தம் செய்யப்பட்டது.உடனடி நடவடிக்கை எடுக்க உதவிய 18வது வார்டு கவுன்சிலருக்கும், நகராட்சி தலைவருக்கும் நன்றி கூறுவதாக அப்பகுதி மக்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

இது குறித்து அப்பகுதியை ஜெயினுலாப்தீன் கூறுகையில், இப்பகுதியில் குப்பைக‌ள் தின‌ந்தோறும் குவிந்து சாலை அசுத்தமாக பலருக்கும் இடையூராக இருந்தது. இப்பிரச்சனையில் கவுன்சிலர் உடனடி நடவடிக்கை எடுத்து சுத்தப்படுத்தியது பாராட்டுக்குறியது. கவுன்சிலர் ஆன பிறகு கண்டு வார்டை கண்டு கொள்ளாத கவுன்சிலர்கள் மத்தியில் உடனடி நடவடிக்கை எடுத்த இவர் மிகவும் பாராட்டுக்குறியவர்.

ஆனாலும் அங்கு மக்கள் நிரந்தரமாக குப்பைகள் கொட்டுவதற்கு தடை செய்யும் வகையில் முறையான‌ அனுமதியுடன் எச்சரிக்கை பலகை வைத்தால் இங்கு குப்பை கொட்டுவதை தடுத்து சுற்று சூழலை பாதுகாக்கலாம். இந்த நடவடிக்கையை எடுக்க கீழக்கரை டைம்ஸ் மூலம் கவுன்சிலரை வேண்டி கேட்டு கொள்கிறேன் என்றார்.

மேலும் குப்பையை அகற்றுவதில் கடந்த‌ சில‌ நாட்களாக‌ தொய்வு ஏற்ப‌ட்ட‌தாக‌ பொதும‌க்க‌ள் குற்ற‌ம் சாட்டின‌ர்.பொங்கல் விடுமுறைகளால இந்த தொய்வு ஏற்பட்டதாக நகராட்சி தரப்பில் கூறப்பட்டது,இந்நிலையில் த‌ற்போது ப‌ல‌ இட‌ங்க‌ளில் குப்பையை அக‌ற்றும் ப‌ணி ந‌டைபெற்று வ‌ருகிறது.

8 comments:

  1. THANK YOU SO MUCH 18TH WARD COUNCELLAR MR.MOHIDEEN IBRAHIM.

    ReplyDelete
  2. "UNITY IS STRENGTH"

    CREDIT GOES TO ALL THE TEAM MEMBERS.

    ReplyDelete
  3. Thank for fast actions our counsilar

    ReplyDelete
  4. I Really appreciate in kilakarai all counceller
    keep clean allways,

    ReplyDelete
  5. I Really appreciated all counceller allways keep clean our place. no more injury vaireal fever dong fever,malaria fever etc.. clean our all area dont go to Hospital...
    THANKS&BEST REGARDS
    NAZEER HUSSAIN-JM

    ReplyDelete
  6. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
    அன்பு சகோதரரே..!
    21.01.2012 அன்று வெளியான கீழக்கரை நகாராட்சியில் வரலாறு காணாத கூச்சல் குழப்பம் என்ற தலைப்பில் வெளியான செய்திக்கு நீங்கள் கொடுத்த விமர்சனம் தவறானது...
    இஸ்லாம் பிறந்த அரபு நாட்டில் வசிக்கும் உனக்கே இஸ்லாத்தை பற்றி தெரியவில்லையே.. தெரிந்திருந்தால் உன்னுடைய ஆரம்பம் ஐயா என்று வந்திருக்காது. முகம்மது என்று உனக்கு பெயர் சூட்டப்பட்டதால் முகம்மது என்ற வார்த்தைக்கு மரியாதை கொடுத்து அதிகமாக எழுதுவதை குறைத்துக் கொள்கிறேன். (கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்) நி கீழக்கரையை சேர்ந்தவனாக தான் இருப்பாய் என்று நினைக்கின்றேன். அல்லது நீ வெளியூர் நபராக இருந்திருந்தால் என்னைப் பற்றி கீழக்கரை நகரின் முக்கிய நபர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு உன்னுடைய தவறுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடிக்கொள். உன்னுடைய முகவரியை காட்டிக்கொள்.
    குரானில் சத்தியம் செய்தது உண்மையில் தவறுதான். ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு திரும்ப திரும்ப ஒரு பொய்யை உண்மைதான் கூறியதால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்பதை நீ புரிந்து கொள். என் பதவிகாலம் வரை மக்கள் தொண்டை சிறப்புடன் செய்ய இறைவனிடம் துஆ செய்யுங்கள்….

    ReplyDelete
  7. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

  8. குப்பைகள் சேருவதும் அதை ஒரு சில நாட்களில் அள்ளி அந்த இடத்தை சுத்தப்படுத்துவதும் இந்த இடத்தில் எப்பொழுதுமே நடக்கும் ஒரு சாதாரண விஷயம்
    இது என்னமோ இன்று மட்டும் நடந்தது போல் செய்தி வெளியிடுவது அப்பகுதி மக்களுக்கு கீழக்கரை டைம்ஸின் நம்பகத்தன்மையின் மேல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது ....

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.