Thursday, January 5, 2012

புதிய கடல் பாலத்தில் குவியும் மக்கள் ! திறப்பு விழா எப்போது ?


தயாரான நிலையில் புதிய பாலம்





பாலத்திலிருந்து....

புதிய பாலம் அருகே காலியாக உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைக்க நகராட்சி முயற்சி செய்யலாம்


கீழக்கரையில் பல ஆண்களுக்கு முன் கட்டப்பட்ட ஜெட்டி பாலம் இடியும்நிலையில் இருந்ததால் ரூ5 கோடியே 31லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 2006திமுக ஆட்சி காலத்தில் புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது.ஆறுவருடங்களுக்கு பிறகு தற்போது பாலம் கட்டும் பணி முழுமையாக நிறைவடைந்துபுதிய பாலம் தயாராக உள்ளது.


கீழக்கரையில் பெரும்பாலான‌ கடற்கரை பகுதி அசுத்தமாக உள்ளது இதனால் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு வருவதை தவிர்த்து வந்தார்கள். இந்நிலையில் தற்போது புதிய பாலம் அமைந்துள்ள பகுதி சுத்தமாக இருப்பதால் பொதுமக்கள்மாலை நேரங்களில் அதிகளவில் இங்கு குவிகிறார்கள்.பலரும் கடல் பாலத்தில் புகைப்படம் எடுத்து செல்கிறார்கள்.


இந்த புதிய பாலம் ‌ பயன்பாட்டிற்கு இன்னும் அனுமதிக்கப்படாத நிலையில் படகுகள் எதுவும் இதன் தூண்களில் கட்டிநிறுத்தப்படவில்லை விரைவில் இப்பாலத்தை திறந்து வைத்து மக்களின்பயன்பாட்டிற்கு விட வேண்டும்.கட்டுமானத்திற்கு 6வருடம் க‌ழிந்து விட்ட‌து மீண்டும் தாமதப்படுத்தும் விதமாக‌ திறப்பு விழாவை தள்ளிபோடக்கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் இதன் அருகிலேயே அரசுக்கு சொந்தமான காலிஇடம் உள்ளது சிறிய பூங்கா ஒன்றை நகராட்சி நிர்வாகம் அமைக்கலாம்.


இது குறித்து கடல் பாலத்திற்கு வருகை தந்த முஸம்மில் கூறியதாவது,
இப்பகுதியில் உள்ள காலி இடத்தில் இருக்கைகள் அமைத்து பூங்கா அமைத்தால் கீழக்கரை மக்களுக்கு மாலை நேரங்களில் இங்கு வந்து செல்வதற்கு ஏதுவாகஇருக்கும்.இப்பகுதியும் சுத்தமாக இருக்கும் என்றார்

1 comment:

  1. Kindly update keelakaraitimes blog picture (banner picture) with new image (pudu paalam)

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.