Tuesday, January 17, 2012

சின்ன‌க்க‌டை தெரு செல்லும் பகுதியில் குப்பையான சாலை !கவ‌னிப்பாரா க‌வுன்சில‌ர் ?




18வ‌து ப‌குதியில் சின்ன‌க்க‌டை தெரு செல்லும் வ‌ழி சாலையில் குப்பைக‌ள் நிறைந்து மிகுந்த‌ சுகாதார‌கேடு ஏற்ப‌ட்டுள்ள‌தாக‌ அப்பகுதி ம‌க்க‌ள் குற்ற‌ம் சாட்டுகின்ற‌ன‌ர்.

அப்ப‌குதியை சேர்ந்த‌ ஃபாசில் என்ப‌வ‌ர் கூறுகையில் ,

18வ‌து வார்டில் சின்ன‌க்க‌டை தெரு செல்லும் வ‌ழியில் முக்கிய‌ சாலையில்( க‌றிக்க‌டை & க‌ருவாடு க‌டை அருகில்)குப்பைக‌ள் தின‌ந்தோறும் குவிந்து சாலை முழுவதும் நிர‌ம்பி வ‌ழிகிற‌து.இத‌னால் இவ்வ‌ழியே ப‌ள்ளிக்கு செல்லும் குழ‌ந்தைக‌ள் மிகுந்த‌ பாதிப்புக்குள்ளாகின்ற‌ன‌ர்.சாலையில் குப்பைகள் சிதறி கிடப்பதால் வாக‌ன‌ ஓட்டிக‌ளுக்கும் மிகுந்த‌ சிர‌ம‌த்துக்குள்ளாகின்ற‌ன‌ர்.அங்கு குடியிருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் ,வியாபார‌ம் செய்ப‌வ‌ர்க‌ளுக்கும் சுகாதார‌ சீர் கேட்டினால் நோய்க‌ள் ப‌ர‌வும் வாய்ப்புள்ள‌து.

இந்த‌ பிரச்ச‌னை இப்ப‌குதி க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகீமுக்கு தெரியும் .ஏன் இன்னும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ ஏற்பாடு செய்யாம‌ல் இருக்கிறார் என்று தெரிய‌வில்லை.என‌வே ந‌கராட்சி நிர்வாக‌ம் மூல‌ம் போர்க்கால‌ அடிப்ப‌டையில் உட‌ன‌டியாக குப்பை அக‌ற்ற‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ ஏற்பாடு செய்ய‌வ‌தோடு ரோட்டில் குப்பைக‌ளை கொட்டுவ‌தை த‌டுக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்று இத‌ன் மூல‌ம் கேட்டு கொள்கிறேன் என்றார்

3 comments:

  1. இங்கு கிடக்கும் குப்பைகளை அகற்றுவேன் என்று வாக்குறுது தந்துதான் 18வது தற்போது கவுன்ஸிலர் போட்டியிட்டு வென்றார். ஆனால் இது பற்றி இன்னும் இவர் அக்கரை செலுத்தாதது இவரும் மற்ற அரசியல்வாதி போலத்தான் என்று என்ன தோன்றுகிறது.

    ReplyDelete
  2. Mr. mohideen ibrahim pls take quick action because last people safer in this area.,,,,,,,
    and school studet also get some skin illiness and lots of fly,mosquito & bactriao,pls take quick action

    regards,

    salahudeen.

    ReplyDelete
  3. Mr. mohideen ibrahim pls take quick action because last people safer in this area.,,,,,,,
    and school studet also get some skin illiness and lots of fly,mosquito & bactriao,pls take quick action

    regards,

    salahudeen.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.