Wednesday, September 28, 2011

கீழக்கரை குத்பா கமிட்டியின் முக்கிய அறிவிப்பு !

எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர்


கீழக்கரை குத்பா கமிட்டி சார்பாக அல்ஹாஜ் எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர் பத்திரிக்கை அறிவிப்பை(28-09-11) வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது,
25.09.11 அன்று கீழக்கரை தெற்குதெரு பள்ளிவாசலில் நடைபெற்ற ''ஜமாத் மகாசபை'' என்ற பெயரில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கும்,அதன்பின் அறிவிக்கப்பட்ட ''கீழக்கரை அனைத்து ஜமாத் தேர்தல் குழு'' என்ற அறிவிப்பிற்கும் கீழக்கரையின் அனைத்து ஜமாத்களின் கூட்டமைப்பான குத்பா கமிட்டிக்கும் எந்த விதமான தொடர்போ,சம்பந்தமோ இல்லை என்பதை இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது . என்று தெரிவித்துள்ளார்.

20 comments:

  1. அதிகாரவர்க்கங்கள் ஆட்சி செய்யும் அரச மாளிகை அது, எப்பொழுதுதான் சமுதாய பிரச்சனையில் சம்பந்தப்பட்டிருக்கிறது.நல்ல விசயங்கள் நடைபெறாமல் தடுப்பு வேலி அமைப்பதுதான் இவர்களின் வேலை.

    ReplyDelete
  2. வல்லான் வகுத்ததே வாய்க்கால்...

    பெரிய இடத்து சமாச்சாரங்கள்...

    நமக்கு ஏன் வம்பு??

    ReplyDelete
  3. e ipdi seiringa ongalai miri urla onum nadaka kudatha .kilakaraile ellarum ugaluke adimaiaya

    ReplyDelete
  4. thekutheru jamatharkal mothala kothba kamitiya mathikamun negan urai pirichi kutam potinga .
    thayavu pani kothba kamtyai kalanthu seinga urai rendakathinga

    ReplyDelete
  5. "மங்காத்தா" படம் பாதியிலேயே நிக்கிது.... மீதி படத்தையும் பார்த்துட்டு, அப்புறம், இன்னும் கொஞ்ச புது புது படங்களெல்லாம் ரிலீஸ் ஆகி இருக்கிறதாம். அது எல்லாத்தையும் பார்த்துட்டு, அப்புறமா நான் கம்மெண்ட் எழுதுறேன்.... வரும்போது குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிக்கிட்டு வாரேன்... சண்டையெல்லாம் போடக்கூடாது... சரியா? (அதுக்குள்ளே தேர்தல் முடிஞ்சிருமுல்ல....)

    ReplyDelete
  6. வெட்டி பேச்சுக்கும், வீண் விவாதங்களுக்காக அமைக்கப்பட்ட வட்ட மேஜை அரங்கம்தான் அந்த கமிட்டி. முதலில் கீழக்கரைக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லாத போது ஊர் பிரச்சினைக்காக களம் காண்பவர்களை சம்பந்தமில்லை என சுட்டு விரல் நீட்ட இவர்கள் யார்? தாங்களும் இருக்கிறோம் என அடையாளம் காட்டவா?

    ReplyDelete
  7. kilakarai therkutheru jama ath thalaivar jahir hain kalanjiyam thannudaya publicitykkaga vum suyanalaththikaagavum nadaththiya koottam thaan ithu. ennai poruththavarayil ithil pothu nalam ethuvum iruppathaaga theriyavillai

    ReplyDelete
  8. ஏன் உங்களை சேக்கலையாக்கும் அதுதான் இம்புட்டு கோவமாக்கும். அறிவிப்பு என்ற பேரிலே இப்பவாவது வந்து எட்டி பார்த்தீர்களே சந்தோஷம் எசமான் சந்தோஷம் ஆனால் உங்க அறிவிப்பு எங்க குருட்டு கண்ணுக்கு தெரியலே உங்க கூக்குரல் எங்க செவிட்டு காதுக்கு கேட்கலே

    ReplyDelete
  9. கீழக்கரை சேர்மன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஒரு தலை பட்சமாக இல்லாமல், வேண்டிய தெரு, வேண்டாத தெரு என்று பாரபட்சம் காட்டாமல், அனைத்து ஜமாத்திற்க்கும் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும் என்று பரந்த மனப்பான்மையோடு கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தெற்கு தெரு ஜமாத்திற்க்கும், ஊர் நன்மைக்காக ஒன்று கூடிய அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகளுக்கும் பாராட்டுக்கள் குவியும் சமயத்தில் இவற்றை ஜீரணிக்க முடியாத ஆதிக்க சக்திகள் பொது மக்களிடம் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தெற்கு தெருவில் நடைபெற்ற கூட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கீழக்கரை குத்பா கமிட்டி மூலம் அறிக்கை அளிக்க செய்துள்ளனர்.
    கீழக்கரையில் இது போன்ற நல்ல முயற்சிகளில் நாங்கள் எப்போதும் ஈடுபட மாட்டோம் என்றும், நாங்கள் பொது நல செயல்பாடுகளுக்கு அப்பாற்ப்படவர்கள் என்று தங்களை தானே பொது மக்களுக்கு விளம்பரப்படுத்தியுள்ளார்கள், அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக ஊர் நலத்தை குழி தோண்டி புதைத்து விட்டு, அரசியல் வாதிகளிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று சுய நலத்தோடு செயல்படுகிறார்கள். இவர்களது செயல்பாடுகள் வெறும் லெட்டர் பேட் அளவில் தான் உள்ளது, அதுவும் அவர்களது சுய நலத்திற்கு மட்டுமே உபயோகப்படுகிறது.

    ReplyDelete
  10. கீழக்கரை சேர்மன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஒரு தலை பட்சமாக இல்லாமல், வேண்டிய தெரு, வேண்டாத தெரு என்று பாரபட்சம் காட்டாமல், அனைத்து ஜமாத்திற்க்கும் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும் என்று பரந்த மனப்பான்மையோடு கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தெற்கு தெரு ஜமாத்திற்க்கும், ஊர் நன்மைக்காக ஒன்று கூடிய அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகளுக்கும் பாராட்டுக்கள் குவியும் சமயத்தில் இவற்றை ஜீரணிக்க முடியாத ஆதிக்க சக்திகள் பொது மக்களிடம் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தெற்கு தெருவில் நடைபெற்ற கூட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கீழக்கரை குத்பா கமிட்டி மூலம் அறிக்கை அளிக்க செய்துள்ளனர்.
    கீழக்கரையில் இது போன்ற நல்ல முயற்சிகளில் நாங்கள் எப்போதும் ஈடுபட மாட்டோம் என்றும், நாங்கள் பொது நல செயல்பாடுகளுக்கு அப்பாற்ப்படவர்கள் என்று தங்களை தானே பொது மக்களுக்கு விளம்பரப்படுத்தியுள்ளார்கள், அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக ஊர் நலத்தை குழி தோண்டி புதைத்து விட்டு, அரசியல் வாதிகளிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று சுய நலத்தோடு செயல்படுகிறார்கள். இவர்களது செயல்பாடுகள் வெறும் லெட்டர் பேட் அளவில் தான் உள்ளது, அதுவும் அவர்களது சுய நலத்திற்கு மட்டுமே உபயோகப்படுகிறது.

    ReplyDelete
  11. Big People will Fight Today, Join Tomorrow. All will be together in One Stage in any Important Function in Kilakarai tomorrow. All are Smart Kilakarai Politics. We us a Voter will Suffer yesterday,today & tomorrow . It is Fate..

    ReplyDelete
  12. "ஒரு நன்னோக்கத்தின் பின்னோக்கம்"

    ஊரின் ஐக்கித்தை நோக்கமாகக்கொண்டு சரியான அணுகுமுறையோடு தெற்குத்தெரு ஜமாஅத் நிர்வாகம் செயல்பட்டிருந்தால் இது போன்ற தர்மசங்கடங்கள் ஏற்பட்டிருக்காது.( காலம் தாழ்த்தி அவசர அவசரமாக எடுக்கப்பட்ட முயற்சியால்தான் இந்த பின்னடைவு ). ஒரு மாதம் முன்பே
    ஊரின் அனைத்து ஜமாஅத்களுக்கான குத்பா கமிட்டிக்கு ( சரியாக செயல்படவில்லை என்பவர்கள்) ஊரின் ஒட்டு மொத்த நலனுக்காக ஆலோசனை முன்மொழிவு செய்து அதன் மூலம் அனைத்து ஜமாத்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் ஒருவேளை கருத்தொருமித்த முடிவு (இறைவன் நாடியிருந்தால்) ஏற்பட்டிருக்க வாய்ப்பாக இருந்திருக்குமே என்பது எனது ஆதங்கம்..
    காயல் பட்டினத்தில் செயல் படும் ஐக்கிய ஜமாஅத் போன்று முன்னரே முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அரசியல் கட்சிகளின் தலையீடும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

    ஆனால் நடந்தது என்ன .........
    ஒருவேளை நமது நகர் மகளிருக்கென ஒதுக்கப்படாதிருந்தால் , இவர்களின் நிலைப்பாடு எவ்வாறு இருந்திருக்கும் .......

    சற்று பின்னோக்குவோம் ......
    ஒரு மாதத்திற்கு முன்னர் இதே ஜமாத்தை சார்ந்த நிர்வாகப் பொறுப்பில் உள்ளோர்களும் , ஏனைய தெருக்களை சார்ந்தோர்களும் அவரவர்கள் சார்ந்த ம. ம. க. மற்றும் அ. தி. மு. க. கட்சிகளில் விருப்ப மனு கொடுத்து பிரபல்யப் படுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே...
    அப்போதெல்லாம் ஊர் ஐக்கியத்தைப் பற்றி சிந்தித்தார்களா?

    கட்சி சார்பில் வேட்பாளர்களாக வேண்டும் என்ற வேட்கை தானே அவர்களுக்குள்ளும் பொதிந்திருந்தது!!! அதனால் ஒரே கட்சிக்குள்ளேயே பல பேர் போட்டி விருப்ப மனு கொடுத்துகொண்டிருந்தார்கள்..

    நமது நகர் மகளிருக்காக ஒதுக்கப்பட்ட பின்னர் அவர்களது அரசியல் நோக்கம் நிறைவேறவில்லை என்பதால்தான் இந்த நிலைப்பாடோ?

    அடிப்படையில் இந்த ஐக்கிய முயற்சியை எடுத்தவர்கள் தி. மு. க. எதிர்ப்புக்காக மட்டுமே அரங்கேற்றியதாக தெரிகிறது ...

    எது எப்படியோ தனிப்பட்ட அரசியல் காழ்ப்புக்காக ஊரின் ஐக்கியம் என்ற நன்னோக்கத்தை கேள்விக்குரியாக்கியதுதான் மிச்சம்.

    நகராட்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றமும் அணுகப்பட்டிருக்கிறது.... ஒருவேளை இப்போது விதிமீறல் என்றே இருந்தாலும் மீண்டும் சுழற்சி முறையில் மகளிருக்கு ஒதுக்கப்படும் என்பது அரசின் கொள்கை முடிவும் காலத்தின் கட்டாயமுமாகும், அதற்கொப்ப நம் சமுதாயமும் எழுச்சி கொண்டு சமூகப் பொறுப்புக்கு நம் பெண்மணிகளை திறம்படவும் மேம்படவும் செய்ய நாம் பாடு படவேண்டும்.

    தற்போது கட்சிகளின் சார்பாகவே மகளிர்கள் நிற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியிருப்பதால், களத்தில் உள்ள வேட்பாளர்களின் தகுதி, திறமை மற்றும் அவர்களது சேவை மனப்பான்மையை கருத்திற் கொண்டு , சமூகப் பொறுப்புணர்ந்து, நல்ல தலைமையை தெரிந்தெடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்...

    அல்லாஹ் தன் திருமறையில் சொல்லியதுபோல்,

    " நீங்கள் எல்லோரும் (ஒற்றுமையுடன்) அல்லாஹ்வுடைய (திருக்குர்ஆன் எனும்) கையிற்றை பலமாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் (உங்களுக்குள் பகையை வளர்த்துக்கொண்டு ) நீங்கள் பிரிந்து வட வேண்டாம்." (திருக்குர்ஆன் 3:103)

    நம்மிடையே பிளவு ஏற்படுகின்ற நேரத்தில் பொறுமையைக் கடைப் பிடித்து ஒற்றுமைக்கு வழி வகுக்க வேண்டும்.
    நன்மையான காரியங்களைச் செய்வதிலும் தூண்டுவதிலும் நாம் ஒன்று பட வேண்டும்.

    எல்லாம் வல்ல இறைவன் நமது சமுதாய ஒற்றுமைக்கு வழி காட்டுவானாக.

    ReplyDelete
  13. vision of kilakarai 2020September 29, 2011 at 11:55 AM

    ENNA ELUTHUVATHU EPPADI ARAMBIPATHU THERAVILLAI
    NATTAPATHU ANAITHUM SUYALALA DRAMAKKAL
    NALLA WAYLAIYAKA MAKALIR THOKUTHI ENDRU ARIVIKAPATTA NILAYIL ULLATHU POTHU THOKUTHIYAKA ARIVIKA PATTU IRUNTHAL AVARKAL PHOTTU IRUNTHA THITTANKAL SUBHUHANALLAH

    KUPPAIKARAIYAKA IRUKKUM URAI KULAPPAKARAI AAKKI IRUPPARKAL
    ORU NAY-RATHIL THERUVIL ERANTU KOSTIYAKA SEYALPATTU URAI WAYTIKAI PARKA VAITHAVARKAL INTRU ONTRUKUDI ORAI KULLAPA NINAIKIRARKAL
    KUTHBA COMMITTEE THALAVARIN ARIVIPPU KILAKARAIL NILAVIYA KULLAPATHAI NIKKIVITTARKAL ALHAMTHULILLAH
    ATHU SARI KAKA UNKAL JAMATH ABDUL MALICK MATRUM SILAR KALANTHU KONTARKALAY ATHU EPPADI AVARKALUKKU THERIYATHA ITHU IKIYA JAMATHAL KOOTAPATA KUTTAM ILLAI ENTRU? AAH-KA KULAPAVATHIKAL YAAR UR NANMAIKKA ALLAHKU PAYANTHU NINAIPAVARKAL YAAR NAMMAI PATAITHA VALLA RAHMANUKAY VELICHAM
    THE LAST BUT NOT THE LEAST WAYTIKAI PARKUM UR MAKALAY KURANTHA PATCHAM NALLATHU NATAKKA ANTHA RAHMANITATHIL DUA SEYUNKAL

    ReplyDelete
  14. தெற்கு தெருவில் நடந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கியது மேலதேருவை சேர்ந்த அப்துல் மாலிக், இவர் குத்பா கமிட்டியின் துணைத்தலைவராக உள்ளார். இதனை கேள்விப்பட்ட ஊர் நாட்டாமை எங்கே அரசியல் வாதிகளால் நமது வியாபாரத்திற்கு இடைஞ்சல் ஏற்படக்கூடும் என அஞ்சி அவசரம் அவசரமாக அறிக்கை விடுகின்றனர்.

    ReplyDelete
  15. ஆரம்பத்தில் கீழக்கரை நகர் மன்ற தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு மேலதேருவை சேர்ந்த சிலர் முயற்சிகள் மேற்கொண்டனர், ஆனால் கீழக்கரை நகராட்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டவுடன் இவர்கள் தங்களது முயற்சிகளில் இருந்து பின் வாங்கிவிட்டனர். உடனே குத்பா கமிட்டியின் தலைவர் ஹமீது காக்கா அவர்களை தெற்கு தெரு ஜமாத்தினர் தொடர்பு கொண்டு, பொது வேட்பாளரை அனைத்து ஜமாஅத் சார்பாக தேர்வு செய்ய கூட்டத்தை கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யும் படி கோரிக்கை வைத்தனர், ஆனால் இவ்விசயத்தில் அவர் தலையிட விரும்பவில்லை என்றும் அந்தந்த ஜமாஅத் முடிவு செய்து கொள்ளட்டும் என்று கூறி ஒதுங்கி கொண்டார்.
    கீழக்கரை சேர்மன் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவர் தைரியமாக நகராட்சியில் செயல்படுவதற்கு அனைத்து ஜமாத்தின் ஆதரவும் பாதுகாப்பும் தேவை என்ற நோக்கத்தில் தெற்கு தெரு ஜமாத்தினர் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாத்துக்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் மட்டுமே ஈடுபட்டனர். கூட்டத்தை நடத்தியது, தீர்மானம் போட்டது எல்லாமே அனைத்து ஜமாத்தினர்களும் சேர்ந்து உருவாக்கிய தேர்தல் கமிட்டியே செய்தது.

    ReplyDelete
  16. அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ்
    ஒருவனே...

    குத்பா கமிட்டிற்கு எதிரானது என்பவர்களின் யோசனைக்கு சில கேள்விகள்.... இதை நீங்களே உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்....


    பொதுவேட்பாளர் என்று யாரையும் ஜமாத்துக்கள் ஆதரிக்ககூடாது என்று குத்பாகமிட்டி, அனைத்துஜமாத்திற்கும் ஏதேனும் தீர்மானம் or உத்தரவு பிறப்பித்து இருந்தார்களா?

    OR

    கூட்டத்திற்காக அனைத்து ஜமாத்தினரையும் அவர்கள் அழைத்தபோதே, இப்படி ஒரு கூட்டம் போட வேண்டாம் என்றும் அதில் எந்த ஜமாத்தும் கலந்துகொள்ளவேண்டாம் என்று குத்பா கமிட்டி அறிவித்து இருந்ததா?

    OR

    குத்பா கமிட்டி, பொதுவேட்பாளர் நிறுத்துவது விஷயமாக ஏதேனும் முயற்சியில் இருந்தார்களா?


    OR

    குத்பா கமிட்டி சார்பாக வேட்பாளர்
    யரேனும் அறிவிக்கப்பட்டிருந்தார்களா?




    இதில் ஏதேனும் நடந்திருந்து அதன் பின்னர் இதுபோல் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் நீங்கள்
    கூறும் குற்றச்சாட்டில் நியாயம் உண்டு.

    மேலும் குத்பா கமிட்டி அறிக்கையில்,
    இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை
    என்றுதான் கூறியுள்ளார்களே தவிர இது குத்பா கமிட்டிற்கு எதிரானது என்றோ ஊரின் ஒற்றுமைக்கு எதிரானது என்றோ கூறப்படவில்லை.

    எனவே இல்லாத ஒற்றுமை உடைந்து
    விட்டதாக கதறி அழவேண்டாம், சாபமும் இடவேண்டாம்.

    தி.மு.க விரோதப்போக்கு என்பவர்களுக்கு சில கேள்விகள்.....

    அந்த கூட்டத்தில் தி.மு.க வை மட்டும்தான் புறக்கணித்தார்களா?

    அப்படியெனில் மற்ற எந்தெந்த கட்சிகள் அவர்களால் அக்கூட்டத்தில் ஆதரிக்கப்பட்டது?

    ஊர் என்றால் தி.மு.க மட்டும் தானா
    தி.மு.க தான் ஊரா? அ.தி.மு.க,காங்கிரஸ்,த.மு.மு.க(ம.ம.க) ச.ம.க ,தே.மு.தி.க போன்ற கட்சிகள் எல்லாம் ஊரில் இல்லையா? அந்த கட்சிகள் பற்றி நீங்கள் வாயே திறக்கவில்லை ஏன்?

    ஏன் ஊர் பிரச்சினை, ஜமாத்பிரச்சினைகளில் தி.மு.க என்ற
    ஒரு அரசியல் கட்சியை மட்டும் கோர்த்துவிடுகிறீர்கள்


    நீங்கள்எல்லாம் தி.மு.க அபிமானிகளா
    அல்லது உங்களை சார்ந்தவர்கள் தி.மு.க சார்பாக தேர்தலில் போட்டியிடுவதால் வந்த கருத்துக்களா?


    இது போட்டிக்கூட்டம், சுயநலக்கூட்டம்
    ஊர் ஒற்றுமைக்கு எதிரான கூட்டம் எனில் இக்கூட்டத்தின் ஆதரவு கேட்டு
    தி.மு.க வேட்பாளர் மனு கொடுத்தது
    ஏன்?

    அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு இல்லை
    என்றதால் வந்த கோபத்தின் கூச்சல்தானா தி.மு.க எதிர்ப்பு கூட்டம்
    என்பது?


    மொத்தத்தில்,கட்சிப்பற்று,குடும்பபற்று
    என்ற எண்ணங்கள்தான் ஊரில் மேலோங்கியுள்ளது,ஜமாத் ஒற்றுமை இல்லாத ஊரில் அவைதான் முடிவை
    தீர்மானிக்கும்.

    அதைத்தாண்டி பொதுவேட்பாளரின் வெற்றி என்பது....!!!!!..??????


    குத்பாகமிட்டி இந்தத்தேர்தலில் பொதுவேட்பாளர் குறித்து ஏதும் முயற்சி எடுக்காமல் ஒதுங்கியிருந்த நிலையில் ,இதற்காக தெற்குத்தெரு ஜமாத் எடுத்த சிறுமுயற்சி என்பதைத்
    தவிர வேறு ஒன்றும் நானறியேன் பராபரமே.......

    அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ்
    ஒருவனே....அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
  17. காயல்பட்டினத்தில் அணைத்து ஜமாஅதுகளும் ஒருங்கிணைந்த ஐக்கிய ஜமாஅத் , (நமது ஊர் குத்பா கம்மிட்டியே போன்று ) சேர்மன் பதவிக்கு ஒரு பொது வேட்பாளரை தேர்வு செய்து ஜமாஅத் சார்பாக நிறுத்தி உள்ளார்கள் , அதுபோல் ஒவ்வொரு ஜமாஅத்தும் தனி தனியாக அவர் அவர் வார்டுகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்து ஜமாஅத் சார்பாக நிறுத்தி உள்ளார்கள்.

    ஒட்டுமொத்த கீழகரைக்கும் தன்னை தலைவர் என்று (செய்திதாள் மூலம்) அறிவித்தவர் , அரசியல் கட்சிகளால் தனது தொழில் நிறுவனகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்ற சுயனலதுகாக , கீழகரை நலத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு, தேர்தல் தேதி அறிவித்த உடனே சென்னைக்கு ஓடிவிட்டார்.

    கீழகரையில் உள்ள அணைத்து ஜமாஅதுகளும் , சங்கங்களும் ஒன்று கூடி சேர்மன் பதவிக்கு ஒரு பொது வேட்பாளரை தேர்வு செய்து ஜமாஅத் சார்பாக அறிவித்த பிறகு , அரசியல்வாதிகளின் நெருக்கடியினால், தனக்கும் இந்த தேர்வுக்கும் சம்பந்தம் இல்லை என்று தன்னை தற்காத்து கொண்ட ஒரு சுயநல தலைவன் வாழ்க

    ReplyDelete
  18. காயல்பட்டினத்தில் அணைத்து ஜமாஅதுகளும் ஒருங்கிணைந்த ஐக்கிய ஜமாஅத் , (நமது ஊர் குத்பா கம்மிட்டியே போன்று ) சேர்மன் பதவிக்கு ஒரு பொது வேட்பாளரை தேர்வு செய்து ஜமாஅத் சார்பாக நிறுத்தி உள்ளார்கள் , அதுபோல் ஒவ்வொரு ஜமாஅத்தும் தனி தனியாக அவர் அவர் வார்டுகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்து ஜமாஅத் சார்பாக நிறுத்தி உள்ளார்கள்.

    ஒட்டுமொத்த கீழகரைக்கும் தன்னை தலைவர் என்று (செய்திதாள் மூலம்) அறிவித்தவர் , அரசியல் கட்சிகளால் தனது தொழில் நிறுவனகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்ற சுயனலதுகாக , கீழகரை நலத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு, தேர்தல் தேதி அறிவித்த உடனே சென்னைக்கு ஓடிவிட்டார்.

    கீழகரையில் உள்ள அணைத்து ஜமாஅதுகளும் , சங்கங்களும் ஒன்று கூடி சேர்மன் பதவிக்கு ஒரு பொது வேட்பாளரை தேர்வு செய்து ஜமாஅத் சார்பாக அறிவித்த பிறகு , அரசியல்வாதிகளின் நெருக்கடியினால், தனக்கும் இந்த தேர்வுக்கும் சம்பந்தம் இல்லை என்று தன்னை தற்காத்து கொண்ட ஒரு சுயநல தலைவன் வாழ்க

    ReplyDelete
  19. வருத்தமில்லா வாலிபர் சங்கம்October 2, 2011 at 12:22 PM

    ஏன் எல்லோரும் இப்படி சண்டை போட்டு கொள்கிறீர்கள், யார் ஜெயிச்சும் ஊருக்கு ஒன்னும் செய்ய போறது இல்லை,
    பேசாமல் எங்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து விடுங்கள், குத்துபா கமிட்டியை கூட கலைத்து விட்டு எங்களது சங்கத்தில் சேர்ந்து விடலாம் என்று எங்களிடம் மன்றாடி கேட்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களை சேர்க்க தயாராக இல்லை. எங்களது சங்கத்து கொள்கைப்படி, சங்க உறுப்பினர்கள் யாரும் எந்த வேலையும் செய்யக்கூடாது, வியாபாரம் கூட செய்யகூடாது.

    ReplyDelete
  20. வருத்த படாத வாலிபர் சங்கம் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. யாரு வெற்றி பெற்றாலும் ஊருக்கு ஒன்னும் பன்ன போரது இல்லை.. ஏன்பா உஙக சங்கம் எங்கப்பா இருக்கு என்னையும் சேர்த்துக்கோங்கப்பா..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.