







கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அருண்ராயிடம்,துணை சேர்மன் ஹாஜா முகைதீன்
,கவுன்சிலர்கள் முகைதீன் இப்ராகிம்,அன்வர் அலி,கருணை,ஜெயபிரகாஷ்,இடி மின்னல் ஹாஜா உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,
நகராட்சி அலுவலகத்தில் புதிய கட்டிட வரைபட அனுமதி பெற பொது மக்கள் 6 மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது.
பிறப்பு,இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம்.
பொது சுகாதாரத்தில் நகராட்சி பணியாளர்கள்,மேற்பார்வையாளர்கள் செயல்பாடு மிகவும் மோசம்.
இவர்களை கண்காணிக்க வேண்டிய பணியை சிறப்பாக செய்ய நல்ல அதிகாரிகள் இல்லை.
நகராட்சியில் மூன்று சுகாதார வாகன ஓட்டுநர்களின் பணி திருப்திகரமாக இல்லை.
கீழக்கரை நகராட்சியில் உள்ள இளநிலை உதவியாளர்கள் மற்றும் வரிவசூல் பணியாளர்களில் ஒரு சிலர் தவிர மற்ற அனைவரின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது.இதனால் அலுவலகத்தில் பணிகள் முடங்கி போய் உள்ளது.
வரி வசூல் மற்றும் குடிநீர் வசூல் மிகவும் மந்தமாக உள்ளது.
கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு வரும் மக்களுக்கு முறையான பதிலளிப்பதில்லை
மேற்கண்ட அனைத்து குறைபாடுகளையும் நீக்கப்பட்டு நகராட்சி அலுவலக நிர்வாகம் தூய்மையாகவும்,விரைவாகவும் நடைபெற வேண்டுமென்றால் பொறுப்பற்ற முறையில் செயல்படும் அனைவரையும் பணியிடமாற்றம் செய்ய வேண்டும்.
இது வரை நகராட்சி ஆணையர் நியமிக்கப்படவில்லை
சுகாதார ஆய்வாளர் மாற்றப்பட்டு இரண்டு மாதங்களாகி விட்டது .இது வரை நியமனம் இல்லை .18-01-12ல் ஓவர்சீர் மாற்றப்பட்டு விட்டார்.
எனவே கீழக்கரை நகராட்சிக்கு உடனடியாக ஆணையாளர் ,சுகாதார ஆய்வாளர் மற்றும் ஓவர்சீர் ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும்.
மேலும் நகராட்சியில் காலியாக உள்ள் பிட்டர்,ஆபிஸ் அஸிஸ்டெண்ட், ஆகிய பணியிடங்கள் நிரப்பபட வேண்டும் கீழக்கரை பேரூரட்சியாக இருந்த போது பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு அதிகப்படுத்தப்படவில்லை.
கீழக்கரை நகராட்சியில் பணியாளர்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு புதிய பணியிடங்களுக்கு அரசின் அனுமதிக்காக கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் இருந்து அரசின் பார்வைக்கு அனுப்பபட்டுள்ளது.இது குறித்து அரசின் ஆணைக்கு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.