Saturday, March 23, 2013

மாண‌வியிட‌ம் த‌வ‌றாக‌ ந‌ட‌க்க‌ முய‌ன்ற‌தாக‌ டிரைவ‌ர் கைது



10ம் வ‌குப்பு மாண‌வியிட‌ம் த‌வ‌றாக‌ ந‌ட‌க்க‌ முய‌ற்சித்த‌தாக‌ டிரைவ‌ர் தமிழரசனை ஏர்வாடியில் கீழ‌க்க‌ரை ம‌க‌ளிர் போலீசார் கைது செய்த‌ன‌ர்.

காவ‌ல் நிலைய‌த்தில் அளிக்க‌ப்ப‌ட்ட‌ புகாரில் ,

ஏர்வாடி அருகே சாயல்குடி பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி, டியூசன் முடித்து, நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு, அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். அந்த வழியாக காரில் வந்த தமிழரசன், 22, என்பவர், காரை நிறுத்தி, மாணவியிட‌ம் தகாத‌ முறையில் பேசி கையை பிடித்து இழுத்தார்.

இது குறித்து மாணவி புகார்படி, கீழக்கரை மகளிர் போலீசார், ஏர்வாடியில் இருந்த தமிழரசனை கைது செய்தனர்.


இது குறித்து கீழ‌க்க‌ரை இஸ்லாமியா ப‌ள்ளிக‌ளின் தாளாள‌ர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம் கூறிய‌தாவ‌து,

தொட‌ர்ச்சியாக‌ இது போன்ற‌ மாண‌விக‌ள் பாதிக்க‌ப்ப‌டும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை கேள்விபடும் போது மிக‌வும் வேத‌னையாக‌ இருக்கிற‌து.இவ‌ர்க‌ள் மீது காவ‌ல்துறை க‌டும் ந‌டவ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.

ஒரு சில‌ரின் இது போன்ற‌ த‌வ‌றான‌ செய‌ல்க‌ளால் ந‌ல்ல‌வ‌ர்க‌ளுக்கும் பாதிப்பு ஏற்ப‌டுகிற‌து.எங்க‌ள‌து ப‌ள்ளியில் மாண‌விக‌ளை ஏற்றி செல்ல‌ வ‌ந்த‌ ஓட்டுந‌ர் ஒருவ‌ர் ம‌து அருந்தி விட்டு வ‌ந்திருப்ப‌தை அறிந்து  அவ‌ரை வாக‌ன‌த்தை ஓட்ட‌ அனும‌திக்க‌வில்லை.அவ‌ரை குடித்து விட்டு வாக‌ன‌ம் ஓட்டாதீர்க‌ள் என‌ எச்ச‌ரித்து எங்க‌ள் ப‌ள்ளி ஓட்டுந‌ரை அனுப்பி மாண‌விக‌ளை வீடு சென்று சேர்த்தேன்.

மேலும் எங்க‌ளால் முடிந்த‌ வ‌ரை மாண‌விய‌ர்க‌ள் பாதுகாப்பாக‌  வீடு சென்று சேரும் வ‌ரை க‌ண்காணிக்கிறோம்.த‌ங்க‌ளது பிள்ளைக‌ளை ப‌ள்ளிக்கு அழைத்து செல்லும் ஓட்டுந‌ர்க‌ள் ச‌ரியான‌வ‌ர்க‌ள்தானா என‌ பெற்றோர்க‌ளும் க‌ண்ட‌றிந்து க‌வ‌ன‌ம் செலுத்த வேண்டும்.என்றார்.
 

2 comments:

  1. அரபு நாடுகளில் இருப்பது போன்று பொற்றோர்கள் கூட சென்று மாணவிகளை பள்ளிவிட வேண்டும்.மற்றும் பெண்களை அழைத்து செல்லும் வகனத்தில் ஒரு பாதுகாவர் பெண் அவசியம் பணி அமர்த்த வேண்டும். இதை போர்கால அடிப்படையில் ஜாமத்துகளும் பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    --- சுல்தான்

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்March 23, 2013 at 6:14 PM

    கள்ளன் பெரியவனா? காப்பான் பெரியவனா?

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

    இது போன்ற் ஈனப்பிறவிகளை இப்போது உள்ள உழுத்துப்போன சட்டங்களால் நிச்சயமாக திருத்த முடியாது. காரணம் சட்டத்தை அமுல் படுத்துவதில் காலத் தாமதம், அரசியல் செல்வாக்கு,குற்றத்தை நீர்த்துப் போகச் செய்யும் செயல்பாடுகள்,மத, ஜாதிய துவேசத்துட்ன் செயல்படும் காவல் துறை போன்ற பல காரணங்கள்.

    முன் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை மொட்டை அடித்து முகத்தில் கரும் புள்ளி, செம் புள்ளி அடையாளமிட்டு கழுதை மீது ஏற்றி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வரச் செய்வார்கள்.இது அவனுக்கு வாழ்நாள் முழுக்க வலிக்கும. தவறு செய்ய எத்தனிப்பவனுக்கும் எச்சரிக்கையாகவும் இருக்கும

    அல்லது அரபு நாடுகளில், சீன தேசத்தில் நடப்பது போல தூக்கிலிட்டு குற்றம் இழைக்க நினைப்போருக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்.

    அது சரி கடுமையான உடனடி சட்ட நடவடிக்கையாலும், தூக்கு போன்ற கடும் நடவடிக்கையாலும் எதுவும் நட்க்கப் போவதில்லை.இன்றைய தினத்தில் மீடியாக்களில் அனு தின செய்தியாகி விட்டது.

    இது போன்ற ஈனப்பிறவிகளை சமூக பகிஷ்காரம் செய்ய வேண்டும்.அப்போது தான் ஊரளவுக்கு கட்டுக்குள் வர சாத்தியமாகலாம். இதுக்கு கூட சமூக ஆர்வலர்கள் விட மாட்டார்கள்.

    ஆகவே திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. இது ஒரு கசப்பான சுண்டைக்காய் உண்மை.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.