கீழக்கரை நகராட்சி கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாக நகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகள் முற்றிலும் செயல் இழந்து காணப்படுகின்றது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மலேரியா கொசு புகை அடிக்கும் இயந்திரம் வாங்கி ஒரு சில நாட்கள் மட்டுமே புகை அடிக்கப்பட்டு இது வரை தொடர்ந்து புகை அடிக்கப்படவில்லை இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் மலேரியா உற்பத்தி ஆகும் ஊராக கீழக்கரை திகழ்கின்றது.
கீழக்கரையில் இருக்கும் வாறுகால்கள் பல இடத்தில் தூர்வாராமல் இருப்பதுடன் பல இடங்களில் குப்பைகள் பல நாட்களாக அகற்றபடாமல் இருக்கின்றது.
இந்த நகரில் 2012 அன்று வாழும் போது ஏதோ கற்காலத்தில் (நாகரிகம் இல்லாத காலத்தில்) வழுகின்ற மன பக்குவமே ஏற்படுகின்றது.
எனவே ! பொதுமக்கள் நலன் கருதி நகரின் நலன் மீது அக்கரை செலுத்தும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.