Sunday, March 4, 2012

"தீரன் திப்பு சுல்தான் " புத்தகம் எழுதிய படைப்பாளிக்கு துபாயில் பாராட்டு !






பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழக்த்தின் சார்பாக, "தீரன் திப்பு சுல்தான்" காவியத்திற்காக இலங்கை அரசின் உயரியவிருது பெற்றதற்காக காப்பியக்கோ. ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களுக்கு பாராட்டுவிழா துபாய் அல்தவார் ஸ்டார் இண்டர்நேசனல் பள்ளிஉள்ளரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் ஆரம்பமாக, தலைவர் மஹ்ரூப் அவர்களின் கிராத்துடன் நிகழ்ச்சி தொடங்க, பொதுச் செயலாளர் கிளியனூர் இஸ்மத் வரவேற்புரை நல்கினார்.
அதன் பின் கவிஞர்கள் ஜியாவுதீன், மற்றும் காவிரிமைந்தன், ஜின்னாஹ் பற்றி வாழ்த்துக் கவிதையை பாட, தொடர்ந்து திருச்சி சையது, தேரிழந்தூர் தாஜுதீன் ஆகியோர்சிற்றுரையாற்றினர்.

விழாவின் சிறப்பு விருந்தினராக, காப்பியக்கோ. ஜின்னாஹ் ஷரீபுத்தீன், ஈடியே அஸ்கான் மற்றும் ஸ்டார் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சலாஹூதீன் , ஸ்கை குழுமத்தின் நிர்வாகஇயக்குநர் சீனா.தானா, மற்றும் நாசர் சுஹைப் ஆகியோர் கலந்து கொண்டனர்,.

அதைத் தொடர்ந்து அமைப்பின் செயலாள‌ர்ஆசிப்மீரான் தீரன் திப்பு சுல்தான் நூல் பற்றிய ஒரு இலக்கியஉரை நிகழ்த்தினார். பின்பு கீழை சீனாதானா, மற்றும் நாசர் சுஹைப், மற்றும் அமைப்பின்தலைவர் மஹ்ரூப் ஆகியோர் ஜின்னாஹ் சர்புதீன், மற்றும் திப்பு சுல்தான் பற்றிசிறப்பாக உரையாற்றினர்.ஈடிஏ மேலாண்மை இயக்குநர் சலாஹுதீன் சிறப்புரையாற்றினார்

ஏற்புரை நிகழ்த்தியஜின்னாஹ் ஷரீபுத்தீன், தீரன் திப்பு சுல்தான் காவியம் எழுதிய காரணத்தையும், அதற்குதான் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் விவரித்தார்.

பன்னாட்டுஇஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பாக கீழைராஸா வடிவமைத்த, ஜின்னாஹ் ஷரீபுத்தீன்பற்றிய அறிமுக காணோளி ஒளிபரபப்ப‌ட்டது

விழாவின் இறுதியாக பன்னாட்டுஇஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பாக ஜின்னாஹ் சரீபுத்தீன், மற்றும் சலாஹூத்தீன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து அமீரகத்தின்பெரும்பாலான அமைப்புகள் சார்பாக அதன் தலைவர் மற்றும் செயலர், விழா நாயகன் ஜின்னாஹ்வுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

நிகழ்ச்சியை ஆசிப்மீரான், மற்றும்குத்தாலம் அஸ்ரப் ஆகியோர் தொகுத்து வழங்க, கீழைராஸா நன்றியுரையுடன் விழா நிறைவுபெற்றது.

நிகழ்வின் காணொளி ஏற்பாடுகளை,மூன் டிவி ஏற்றுக் கொள்ள, நிழல் படங்களை ரியாஸ் மற்றும் சுப்பையா ஆகியோர் கவனித்துக் கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை குத்தாலம் அஸ்ரப், சிம்மபாரதி, ஹனிபா, ஆசிப்மீரான் மற்றும் கீழைராஸா ஆகியோர் செய்திருந்தார்கள்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.