
தென்மாவட்ட இன்ஞினியரிங் கல்லூரிகளில் ரத்ததானம் வழங்குவதில் சதக் கல்லூரி முதலிடத்தில் இருப்பதாக சதக் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினிரியங் கல்லூரியில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.
இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா தலைமை வகித்தார் முதல்வர் முகம்மது ஜகபர் துவக்கி வைத்தார். பி.ஆர்.ஒ., நஜிமுதீன் வரவேற்றார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் ஞானக்குமார், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் விஜயராஜன், மதன், மேலாளர் ரவி மற்றும் ரத்த சேகரிப்பு பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சதக் இன்ஞினியரிங் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகபர் கூறியதாவது:
தென் மாவட்டங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில், கீழக்கரை முகம்மது சதக் இன்ஜி., கல்லூரி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ரத்த தானம் அளிப்பதில் முதலிடத்தை பெற்று பரிசு பெற்றுள்ளது. இந்தாண்டும் சாதனை தொடரும் வகையில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் ரத்தம் வழங்கினர், என்றார்.
ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் குமார், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் சிவபாலன், முத்துவேல் உள்ளிட்டோர் செய்தனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.