Sunday, March 4, 2012

79 ஆண்டுகள்.. கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டுவிழா




கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியின் 79-ம் ஆண்டு விழா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக விளையாட்டு விழா நடைபெற்றது, உஸ்வத்துல் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் உப தலைவர் அல்ஹாஜ். வீ.ஏ.எம். அஹ்மது புஹாரி தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் ஜனாப். சிராஜுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இராமநாதபுரம் மாவட்ட முதன்மை தொடக்க கல்வி அலுவலர் ஈவ்லின் சுகுனா மற்றும் கூடுதல் மற்றும் உதவி அலுவலர்களான செல்வமனி மற்றும் மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் காதரியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். மேலும் கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.