ஆர்.எஸ்.மங்கலம் சூரமடையை சேர்ந்த டொமிக் சாவியோ மகன் அன்பு(32) மொசைக் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் சாலைகிராமத்தில் சத்தியகலா(28) என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டார் மூன்று குழந்தைகள் உள்ளன. இதை மறைத்து இரண்டாவதாக கோப்பரிமடத்தை சேர்ந்த ஞான சுந்தரி (30) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தை உள்ளது.
இநிலையில் கடந்த 4ம்தேதி ரெகுநாதபுரத்தில் காளீஸ்வரவன் என்பவருக்கும் முத்துலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த அன்று இரவு காளீஸ்வரன் மனைவி முத்துலட்சுமியை ஏற்கெனவே 2 திருமணம் செய்த அன்பு பைக்கில் காத்திருந்து அழைத்து சென்று விட்டாராம்.ஏற்கெனவே இருவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
மனைவியை பறிகொடுத்த காளீஸ்வரன் திருப்புல்லானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து அன்பை கைது செய்தனர்.தொடர்ந்து விசாரனை செய்ததில் 3 பெண்களை ஏமாற்றியதாக மேல் குறிப்பிடபட்ட விபரங்கள் தெரிய வந்தது.
வேறு எங்கேனும் இது போல் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளாரா என்று போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
Good Updates Boss
ReplyDelete