Wednesday, March 21, 2012
கீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் பேச்சாளை மீன் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு !
கீழக்கரை - ராமநாதபுரம் சாலை திருப்புல்லாணி முனை ரோட்டில் பேச்சாளை மீன் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை திருப்புல்லாணி அருகே உள்ள பொக்காரனேந்தல் மக்கள் சிறைபிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேஸ்வரம் ,பாம்பன் பகுதிகளிலிருந்து பேச்சாளை மீன்களை லாரிகளில் ஏற்றி கிழக்கு கடற்கரை சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்காமல் லாரிகளில் மீன்களை ஏற்றுவதால் வழிந்தோடும் மீன்கழிவு தண்ணீரால் வ துர்நாற்றம் ஏற்பட்டு லாரி செல்லும் வழியில் உள்ள ஊர்களுக்கு சுகாதார கேடு விளையும் சூழ்நிலை ஏற்படுவதாகவும்.மேலும் லாரிகளில் வழிந்தோடும் மீன்கழிவு தண்ணீர் பசைதன்மையுடன் இருப்பதால் வாகனங்கள் பிரேக் உபயோகித்தாலும் வாகனம் நிற்கமால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து பல்வேறு புகார்கள் கொடுத்து அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று கூறி பொக்காரனேந்தல் கிராம மக்கள் கீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் திருப்புல்லானி முக்கு ரோடு அருகே பாம்பனிலிருந்து உரிய பாதுகாப்பின்றி பேச்சாளை மீன் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை சிறை பிடித்து திருப்புல்லாணி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ,எஸ்.ஐ மணிமாறன் லாரிகளை ஓட்டி வந்த திருமலை புதூர் மரிய தாஸ்(31),தூத்துக்குடி புகழ்ராயபுரம் மாரியப்பன்(42) ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.