கீழக்கரையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வள்ளல் சீதக்காதி சாலை பழைய பஸ் நிலையம் அருகில் கால்வாய் அடைப்பை சீர் செய்வதற்கு தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் கார் மற்றும் டூவீலர்கள் செல்லும் போது டயர்கள் பள்ளத்திற்குள் விழுந்து விபத்துகுள்ளவாதவும் இதை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் பொருளாளர் செய்யது இப்ராகிம் கூறுகையில்,
வள்ளல் சீதக்காதி சாலை பழைய பஸ் நிலையம் அருகில் கடந்த ஆறுமாதங்களுக்கு முன் கால்வாய் அடைப்பை சரி செய்வதற்காக நகராட்சி ஊழியர்கள் நடு ரோட்டில் குழி தோண்டினர். பிறகு அந்த பள்ளத்தை மூடவில்லை இதனால் இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது.மேலும் இரவு நேரங்களில் டூவீலர்களில் வருபவர்கள் விழுவதும் அடிக்கடி நடைபெறுகிறது. மேலும் தற்போதையால் மின் தடையால் நடந்து செல்பவர்களு பள்ளத்தில் விழுந்து சிறு காயங்களுக்கு உள்ளாகிறார்கள். பெரிய விபத்து ஏற்படும் முன் நகராட்சி இந்த பள்ளத்தை அடைத்து சரி செய்ய வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.
For your information for more than 6 years we are seeing the same at same condition
ReplyDelete