மின் தடையால் துயரப்படும் மக்களுக்கு கூடுதலாக சமையல் காஸ் தட்டுப்பாடும் சேர்ந்து பெரும் அவதிகுள்ளாகி இருக்கிறது.
கீழக்கரை கடந்த 2 மாதங்களுக்கு மேல் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் பெரும்பாலானோர் விறகு அடுப்பில் சமையல் செய்து வருகின்றனர். மேலும் பெரும்பாலான ஹோட்டல்,டீக்ககடைகள் வணிக காஸ் கிடைக்காமல் கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து பட்டாணி அப்பா தர்ஹா பகுதியை சேர்ந்த குடும்ப தலைவிகள் தாசிம் பீவி,ஜமாலியா ராணி ஆகியொர் கூறுகையில்,
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கீழக்கரை காஸ் ஏஜென்சியில் பதிவு செய்தேன்.இன்று வரை சப்ளையில்லை.கடந்த சில வாரங்களாக காஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் என்றார்கள். அதற்கு முந்திய தேதிகளில் ஏன் சப்ளை செய்யவில்லை என்று தெரியவில்லை.முந்தைய காலத்தை போன்று விறகு அடுப்பில் சமையல் செய்வதை தவிர வேறு வழியில்லை .தற்போது விறகு கிடைப்பதும் சிரமமாக உள்ளது.என்றைக்கு தீருமோ இந்த பிரச்சனை? என்கின்றனர் மன வேதனையுடன்.....
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.