Monday, March 12, 2012

மின்சாரம் தயாரிக்க விடாமல் சிக்கலை ஏற்படுத்துகின்றனர்! கீழக்கரையில் இந்திய அணுமின் நிலைய உயர்அதிகாரி வருத்தம் !


ப‌ட‌ விள‌க்க‌ம்: இந்திய அணுமின் கழகம் இணை தலைமை செயல் அதிகாரி ஹல்தாருக்கு நினைவு பரிசு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இந்திய அணுமின் உற்பத்தி மற்றும் பயன்பாடு கருத்தரங்கம் நடைபெற்றது.

சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய அணுமின் கழகம் இணை தலைமை செயல் அதிகாரி ஹல்தார் கலந்து கொண்டு பேசுகையில்,
சிலர் மின்சாரம் தயாரிக்க விடாமல் சிக்கலை ஏற்படுத்துவதாக வருத்தம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் ,
ஒரு மனிதன் தன்னிறைவு பெறுவதற்கு உணவு,விவசாயம்,சுற்றுசூழல்,சுகாதாரம்,மின்சாரம் ஆகியவை இன்றிய அமையாததாகும் இதில் மின்சாரத்தை தவிர அனைத்தும் நம்மிடம் உள்ளது.நிலக்கரி,ஆயில்,நீர்,காற்றாலை,யுரோனியம் மூலமாக மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

நிலக்கரி மூலமாக 70 சதவீதம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.மாநிலங்களுக்குள் உள்ள பிரச்சனையால் நீர்வழியாக மின்சாரம் தயாரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.காற்றாலை மூலமாக தயாரிக்கும் மின்சாரம் மிகவும் குறைவு.முழுக்க முழுக்க யுரேனியத்தை நம்பி உள்ளோம்.கல்பாக்கத்தில் உள்ள அணுமின் உலையால் அதிகள்வில் மின்சாரம் தயாரிக்க முடியவில்லை.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டால் மட்டுமே மின்சாரம் தட்டுபாடுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.இதன் மூலம் ஆண்டுக்கு 5 லட்சத்து 30 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும்.கூடங்குளத்தை பொறுத்த வரை மக்களுக்கு ஆபத்து ஏற்படாது என்று பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் ஆகவே நூறு சதவீதம் பாதுகாப்பு கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்தால் மின்சாரத்தில் தன்னிறைவு பெற முடியும்.
மேலும் 1947ல் ஆயிரத்து 363 மெகாவாட் மின்சாரம் தேவைபட்டது.தற்போது அது பல‌ மடங்கு அதிகரித்து 2011ல் 2 லட்சத்து 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவையாகியுள்ளது.

மின்சார‌ம் த‌யாரிப்ப‌த‌ற்கான‌ அனைத்து வ‌ச‌திக‌ளும் நிறைந்த‌ ந‌ம‌து நாட்டில் மின்சார‌ம் த‌யாரிக்க‌ விடாம‌ல் சில‌ர் சிக்க‌லை ஏற்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.

இவ்வாறு அவ‌ர் பேசினார்.

நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை ந‌ஜிமுதீன்,பேராசிரிய‌ர்க‌ள் தில்லைவாண‌ன்,க‌னேஷ்குமார்,ம‌யில்வேல்நாத‌ன் ஆகியோர் செய்திருந்த‌ன‌ர்.




No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.