

கீழக்கரை அருகே உள்ள வேளானூர் கிராமத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தினவிழா மற்றும் சட்ட விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சதீஷ் தலைமை வகித்தார்.சார்பு நீதிபதி சந்திரா ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். வேளானூர் லதா வரவேற்றார்.
நீதிபதி மீனா சதீஷ் பேசுகையில்,
மகளிர் தினமான இன்று தாங்கள் அனைவரும் வரதட்சனையை எதிர்க்க உறுதி எடுத்து கொள்ள வேண்டும்.வரதட்சனை கேட்கும் ஆண்களை வேண்டாம் என்று தைரியமாக சொல்லுங்கள் காரணம் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.எனவே ஆண்கள் வரதட்சனை இல்லாமல் திருமணம் செய்து கொள்ள முன் வருவார்கள்.
மேலும் பெண்களை நன்றாக படிக்க செய்யுங்கள்.பெண்களைதான் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகளவில் வேலைக்கு எடுக்கின்றனர்.காரணம் பெண்கள் ஒரு வேலையை தொட்டால் அதை முடித்துவிட்டுதான் மற்ற வேலைகளை செய்வார்கள்.அதே போல் ஆண்களை விட பெண்கள்தான் தீர்க்கமான முடிவினை எடுக்க முடியும்.மகளிர் சுய உதவிக்குழுக்கள் வந்த பிறகு பெண்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.
பெண்களுக்காகவே ராமநாதபுரத்தில் இலவச சட்ட மையம் உள்ளது தங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அம்மையத்தை எந்த நேரமும் அனுகலாம் இவ்வாறு அவர் பேசினார். தலைமை நீதிபதி பெண்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
விழா முடிவில் சுய உதவிக்குழு ராணி நன்றி கூறினார்.
அஸ்ஸகாமு அலைக்கும்
ReplyDeleteதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.
அலைக்குமுஸ்ஸலாம்
ReplyDelete