Thursday, March 15, 2012
மணல் சாலையாக மாற்றம் பெறும் தார்சாலை!வாகன ஓட்டிகள் அவதி!
கீழக்கரை பல இடங்களில் சாலையில் மணல் நிறைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.இதனால் மணலில் வாகனங்கள் சிக்கி சிறு விபத்துக்களும் ஏற்படுகின்றன.
இதுகுறித்து சின்னக்கடைத்தெருவை சேர்ந்த தஸ்தகீர் கூறியதாவது,
கட்டிட பணிகளுக்காக சாலையில் மணலை கொட்டுகின்றனர் வேலை முடிந்தவுடன் மணலை சரியான முறையில் அகற்றாமல் சாலையிலேயே குவிந்து சாலை முழுக்க மணல் ஆக்கிரமித்து தார் சாலை மணல் சாலையாக மாறிவிடுகிறது.புதியதாக சாலை அமைத்து சில மாதாங்களிலேயே மணல் சாலையாக மாறிவிடுகிறது. நகராட்சிக்கு இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்துள்ளோம்.
இது போன்ற மணல் சாலையில் பைக்,டிவிஎஸ் போன்றவற்றில் செல்வோர் மற்றும் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம்பட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து கட்டிடம் கட்டும் காண்டிராக்டர்கள், மணலை ரோட்டில் கொட்டினால் குறிப்பிட்ட நேரத்தில் மணலை அள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட காண்டிராக்டர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
துரதிஷ்டவசமாக இன்று வடக்குத்தெரு பி.எஸ்.என்.எல் அலுவலகம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.கொந்தகண அப்பா தர்காவுக்கு மேற்கு புறத்தில் சமீபத்தில் புதிதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. நகராட்சியின் நிர்வாக ஊலலை பறை சாற்றும் விதமாக எதிர் வரும் முதல் மழையிலேயே காணாமல் போய் விடும் என்று அருகில் இருந்தவரிடம் வாய் கொழுப்பு எடுத்து நான் கூற், அவரோ அட போஙக மாப்பிள்ளை அருகில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளிக்கூடத்திலிருந்து ஒன்றாம் வகுப்பு மாணவர்களில் பத்து பேரை அழைத்து வந்து சிறுநீர் கழிக்க விட்டு அதன் பின் தார் சாலை இருந்தால் உங்களுக்கு ராவியத்து அல்வா ஒரு கிலோ. வாங்கித் தருகிறேன் என்ராரே
ReplyDeleteநான் அழுவதா? நகரின் விதியை நினைத்து பைத்தியகாரனைப் போல் சிரிப்பதா? ஒன்றுமே புரியலே இந்த ஊரிலே
அது பழைய நகராட்சியில் போட்ட ரோடு இப்ப உள்ள நகராட்சி இல்ல மங்காத்தா விசாரிச்சி எழுதுங்க
ReplyDelete