Tuesday, March 20, 2012
சாலைகளில் திரியும் மாடுகளால் போக்குவரத்து இடையூரோடு விபத்து அபாயம்!
கீழக்கரையின் மெயின் ரோடு வள்ளல் சீதக்காதி சாலை பகுதியில் 50க்கும் அதிகமான மாடுகள் தினமும் சுற்றி திரிகின்றன.பெரும்பாலான மாடுகள் சாலையில் படுத்து கொள்வதால் வாகன போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது.
சாலையில் மாடுகள் சுற்றித் திரிவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மேலும் தொடர் மின்சார தடையால் தெரு மின் விளக்குகளும் இரவில் எரிவதில்லை. இதனால் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் சாலையில் மாடு படுத்திருப்பதை அறியாமல் வேகமாக வரும் வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிறது. ஊரில் பெரும்பாலானோர் இந்த சாலை வழியாகத்தான் செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை சம்பந்தப்பட்டவர்கள் அப்புறப்படுத்தி,அரசு நிர்வாகத்தினர் உரிமையாளர்களிடம் முறையாக பராமரிக்க வலியுறுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து கீழக்கரையை சுல்தான் என்பவர் கூறுகையில் ,
மெயின் ரோட்டில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிவதால் போக்குவரத்து பெரும் இடையூராக உள்ளது.இரவு நேரங்களில் சாலையிலே மாடுகள் படுத்துவிடுவதால் வாகனங்களை ஓட்டி செல்வது பெரும் சிரமமாக உள்ளது சம்பந்தப்பட்டவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
முதலில் வள்ளல் சீதக்காதி சாலையை சீரமைக்கும் பணியை தொடங்க சொல்லுங்கள். பிறகு மாடு, ஆடு மேயறது, படுத்து கிடக்கிறது ஒழுங்கு படுத்தலாம்.
ReplyDelete