Thursday, March 22, 2012
சாலைகளில் சுற்றி திரியும் மனநோயாளிகள்!பராமரிக்க அரசு மனநல காப்பகம் அமைக்க கோரிக்கை !
படம் :keelakaraichairman.blogspot.com(மஹ்மூத் நெய்னா & ஹுசைன் )
இராமநாதபுரத்தில் மனிதநேய அறக்கட்டளை சார்பில் செஞ்சோலை மனித நேய காப்பகம் என்ற நல காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறது.
நாகேஷ்வரன் என்பவர் இந்த அமைப்பின் நிறுவன தலைவராவார். இந்த காப்பகத்துக்கு கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் காதரியா வருகை தந்தார். அங்கு இருக்கும் மன நோயாளிகளை கண்டு அவர்களின் நலனை விசாரித்தவர். அவர்களுக்கு மதிய உணவு வழங்கினார். மேலும் காப்பக திட்டங்களுக்கு உதவி செய்வதாகவும் உறுதியளித்தார்.
மேலும் அவர் கூறியதாவது,
தனியார்கள் சமூக அக்கறையோடு இதுபோன்று சேவைகளில் ஈடுபடுவது பாராட்டுக்குறியது.மேலும் பராமரிப்பின்றி சாலைகளில் சுற்றி திரியும் மனநோயாளிகளை பாதுகாக்க அரசு சார்பில் மன நல காப்பகம் தேவை. ஏர்வாடி தர்ஹா பகுதியில் அமைய இருப்பதாக தகவல் உள்ளது.அரசு மன நல காப்பகம் அமைவதற்கான முயற்சியில் என்னால் இயன்ற பங்களிப்பை செய்வேன் என்றார்.
வெளியூரை சிலர் மன நோயாளிகளை வாகனங்களில் அழைத்து வந்து ஏர்வாடி தர்ஹா - கீழக்கரை சாலைகளில் இறக்கி விட்டு செல்லும் அவலம் நீண்ட காலமாக இப்பகுதியில் நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு இறக்கி விடப்பட்ட மனநோயாளிகள் அருகிலுள்ள ஏர்வாடி தர்காவிற்கும்,எஞ்சியவர்கள் கீழக்கரை மற்றும் அருகிலுள்ள ஊர்களில் பரிதாபமாக சுற்றி திரிகிறார்கள்.
ஏர்வாடி தர்ஹாவில் கடந்த 2002 ஆக.,6ல் மன நலகாப்பகத்தில் தீவிபத்து நடந்தது. இதில் 28 மனநோயாளிகள் தீயில் கருகி உயிரழந்தனர்.இது குறித்து நடவடிக்கை எடுத்த அரசு அங்கு அனுமதியில்லாமல் நடத்தப்பட்டு வந்த அனைத்து மன நலகாப்பகங்களும் முடபட்டன.இப்பிரச்னையில் அமைக்கப்பட்ட ராமதாஸ் கமிஷனின் பரிந்துரையின் படி மாவட்ட மருத்துவமனையில் மனநலபிரிவு தொடங்க, கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி மனநலபிரிவும் ஏற்படுத்தப்பட்டும், அரசு காப்பகம் இல்லாததால் அது பயனற்று உள்ளது. ஏர்வாடி தர்ஹாவை சேர்ந்தவர்கள் மன நல காப்பகம் அமைப்பதற்கு அரசுக்கு இடம் தருவதாக அறிவித்து நீண்ட காலமாகி விட்டது ஆனால் மனநல காப்பகம் அமைப்பதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விரைவில் அரசு ஏர்வாடி தர்ஹாவில் மனநல காப்பகம் அமைக்கப்பட்டால் இது தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.