Sunday, March 4, 2012

கல்லூரி பொருட்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் ! 2000த்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர் !



கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி சிவில்,கெமிக்கல்,மற்றும் ஏரோநட்டிகல் துறைகள் சார்பாக செவிநாட் 2012 கருத்தரங்கம் மற்றும் பொருட்காட்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கல்லூரி தாளாளர் யூசுப் சாகிப் தலைமை வகித்தார்.இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா,கல்லூரி முதவர் முகம்மது ஜகாபர் முன்னிலை வகித்தனர். சிவில் இன்ஞினியரிங் துறை தலைவர் அழகிய மீனாள் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய படைப்புகள் கல்லூரி வளாகத்தில் பொருட்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது .இதை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ்,மாணவிகள் 2000த்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி தேசிய தொழில் நுட்ப பயிலகம் இயக்குநர் சீனிவாசன் சுந்தர்ராஜன்,முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் உள்பட பலர் கலந்து பேசினர் .பேராசிரியர் ரசீது கான் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மககள் தொடர்பாளர் நஜிமுதீன் மற்றும் துறை தலைவர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.