Thursday, March 1, 2012

தொடர் மின்வெட்டு!கீழக்கரையில் அரிக்கேன் விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தது !


தமிழகம் முழுவதும் கடும் மின் வெட்டு நிலவி வருகிறது. கீழக்கரையும் விதிவிலக்கல்ல
இந்நிலையில் கீழக்கரையில் காலை, பகல், மாலை, இரவு என பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டு நாளொன்றுக்கு 12 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் தடைபடுகிறது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் சிரமத்துக்குள்ளாகி விட்டார்கள்.சிறு வியாபாரிகள் தங்கள் அன்றாட வருமானத்தை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.

இரவு நேரம் வெகு சீக்கிரமே கடைகளை மூடி விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.கடைகளில் (எரி வாயு)கேஸ் விளக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது கேஸ் தட்டுப்பாடு நிலவி வருவதால் தற்போது பெரும்பாலானோர் மண் எண்னெய் விளக்குகளுகளை பயன் படுத்த தொடங்கி விட்டனர்.இதனால் மண் எண்னெய் மூலம் பயன் படுத்த கூடிய அரிகேன் விளக்கு விற்பனை அதிகரித்து வருகிறது.

பெரும்பாலான டீக்கடைகள் மட்டும் மளிகைகடைகளில் அரிகேன் விளக்குகளை கடைக்கு எதிரே தொங்க விட்டுள்ளனர்.இரவு நேரங்களில் டார்ச் லைட்டுடன் வெளியே செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சிலர் அரிக்கேன் விளக்குகளுடன் வெளியே வருவதையும் காண முடிகிறது.

இது குறித்து டீக்கடை நடத்தி நடத்தும் வாஹித் என்பவர் கூறியதாவது,
எனக்கு 55 வயதாகிறது என்னுடைய அனுபவத்தில் இப்படி ஒரு மின் வெட்டை கண்டதில்லை.இந்த சூழ்நிலையானது மின்சாரம் இல்லாத பழைய கால நடப்புகளை நினைவுபடுத்துகிறது.எனவே அந்த காலத்தை போன்று மின் கம்பங்களில் மின் விளக்குகளை அகற்றி விட்டு அரிக்கேன் விளக்குகளை தொங்க விடலாம் என்றார் எரிச்சலுடன் மத்திய மாநில அரசுகள் இதற்காக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கீழக்கரையை சேர்ந்த ஹமீது அசாருதீன் கூறுகையில்,
தேர்வுகள் நெருங்கி வரும் சூழ்நிலையில் இந்த மின் தடையினால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.அதிலும் கணினி தொடர்பான கல்வி கற்பவர்கள் கடும் பாதிப்படைந்துள்ளார்கள்.இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடையால், மாணவர்கள் பகல் நேரத்தில் பள்ளிகளில் படிக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. தற்போது, ஜெனரேட்டர் அறிவிக்கப்பட்டிருந்தாலும் பொதுத்தேர்வு முடியும் வரை மின்வெட்டு ஏற்படும் நேரத்தை மாற்றி வைக்க வேண்டும். இல்லாவிடில் இரவு நேரத்தில் மட்டும் மின் வெட்டை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

3 comments:

  1. மங்காத்தவின் தங்கச்சி மகன்March 1, 2012 at 11:50 PM

    அரசு அறிவித்துள்ள ஜெனரேட்டர் வசதி கல்விககூடங்களுக்கு மட்டுமே. பள்ளிப்பாடங்களை வீட்டில் படிக்கும் மாணவ மணிகளின் கதி?

    கூடக்குளமே எப்போது செயல்படத் தொடங்குவாய்? செயல்படாமல் இருப்பதற்கு ஒரு உதாவாக்கரை குமார் தலைமையில் கூட்டம் இருப்பது போல சில காலங்களுக்கு முன் தலைநகராம் சென்னைக்கு காரணம் இல்லாமல் வந்து சென்ற உலக பெரிய அண்ணனின் வெளிஉறவு துறை அமைச்சர் அழகு ராணி மேடம் ஹிலாரி கிளிண்டனுகும் சம்பந்தம் இருக்குமோ?

    யாம் அறியோம் பராபரமே.

    நீரின்றி உலகில்லை. இது முது மொழி.
    மின்சாரம் இன்றி அன்றாட வாழ்வில்லை, குடிசையில் கூட. இது கலியுக மொழி.

    ReplyDelete
  2. ஆஹா

    இந்த அரிக்கேன் விளக்கை பார்த்ததும் எங்களுக்கெல்லாம் எங்க பள்ளி காலங்களின் இருண்ட இரவுகள் நினைவுக்கு வருகிறது அப்போதெல்லாம் இரவில் மின்சாரம் தடைபட்டால் இதை தான் ஏற்றுவோம். இப்போதைக்கு அரிக்கேனை போற்றுவோம்

    ReplyDelete
  3. ஆஹா

    இந்த அரிக்கேன் விளக்கை பார்த்ததும் எங்களுக்கெல்லாம் எங்க பள்ளி காலங்களின் இருண்ட இரவுகள் நினைவுக்கு வருகிறது அப்போதெல்லாம் இரவில் மின்சாரம் தடைபட்டால் இதை தான் ஏற்றுவோம். இப்போதைக்கு அரிக்கேனை போற்றுவோம்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.