
கீழக்கரை ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரம் குறைந்ததாக, புழுத்துப் போய் இருப்பதாக கீழக்கரை பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கீழக்கரையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் தரமில்லாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
கீழக்கரையில் ரேசன் அரிசி வாங்குவோர் கூறியதாவது,
அரசு இலவசமாக அரிசி கொடுத்து வருவது ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால், இந்த அரிசி வர, வர தரம் குறைந்து வருகிறது. புழுத்துப் போன நிலையில் வழங்கப்படும் இந்த அரிசியை கோழி கூட உண்ண மறுக்கிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித பலனில்லை,” என்றார்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தரமான அரிசியை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.