ராமாநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதி கடலில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் கடலில் முழ்கி பலியானார்.
சின்ன ஏர்வாடியை சேர்ந்த செல்லமுத்து மகன் மாடப்புற ராஜீ(45) இவர் முத்துகாளிக்கு சொந்தமான நாட்டுபடகில் இன்று அதிகாலை 5 மணியளவில் 7 பேர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்று கனவாய் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கடலுக்குள் தவறிவிழுந்த ராஜீவின் காலில் தூண்டில் கயிறு சுற்றி கொண்டதால் நீந்த முடியாமல் மூச்சு திணறி பரிதாபமாக உயிர் இழந்ததாக கூறப்படுகிறது
.இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளன.
இச்சம்பவம் குறித்து கடலோர காவல்படையினர் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.