

அரசு மருத்துவமனைகளின் மருத்துவ குழுவினர் ,ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே இணக்கத்தை அதிகரிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவமனை தின விழா அரசின் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்படுகிறது .
இந்நிலையில் கீழக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவ தின விழா நடைபெற்றது.
கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தலைமை வகித்தார்.டாக்டர் செய்யது அப்துல்காதர்,டாக்டர் ராஜ்மோகன் உள்பட ஏராளமான பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மருத்துவமனை தின விழா கொண்டாடும் இத்தருணத்தில் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு பெண் மருத்துவர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது அதை உடனடியாக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.